India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு EPS வேண்டுகோள் விடுத்துள்ளார். வெள்ளநீர் தேங்குவதிலிருந்து பாதுகாக்க அமைத்த குழு அளித்த அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியுள்ள அவர், நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மக்களின் செல்போனுக்கு message அனுப்பி எச்சரித்து வருகிறது. உங்களுக்கு அந்த மெசேஜ் வந்ததா?
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள்
உறவினர்களைவிட நண்பர்களுடன் பழகுவதையே விரும்புவீர்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கொண்ட கொள்கையிலும் எடுத்த முடிவிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டீர்கள். நீதி, நேர்மை, அறம், அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவீர்கள். அதிகாரத்துக்கு அடிபணியமாட்டீர்கள் என்று நந்தி வாக்கியப்பாடல் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய தேசிய விளம்பர தூதராக ரஷ்மிகா மந்தனாவை உள்துறை அமைச்சகம் நியமித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ரஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ வைரலானபோது, சைபர் குற்றத்திற்கு எதிராக அவர் பேசியிருந்தார். இந்நிலையில், சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில், சைபர் குற்ற தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன் என கூறியுள்ளார்.
*45 கிலோ உள்ளவர்கள்-1.9 லிட்டர்
*50 கிலோ உள்ளவர்கள்-2.1 லிட்டர்
*55 கிலோ உள்ளவர்கள்-2.3 லிட்டர்
*60 கிலோ உள்ளவர்கள்-2.5 லிட்டர்
*65 கிலோ உள்ளவர்கள்-2.7 லிட்டர்
*70 கிலோ உள்ளவர்கள்-2.9 லிட்டர்
*75 கிலோ உள்ளவர்கள்-3.2 லிட்டர்
*80 கிலோ உள்ளவர்கள்-3.5 லிட்டர்
*85 கிலோ உள்ளவர்கள்-3.7 லிட்டர்
*90 கிலோ உள்ளவர்கள்-3.9 லிட்டர் *95 கிலோ உள்ளவர்கள்-4.1 லிட்டர் *100+ கிலோ உள்ளவர்கள்-4.3 லிட்டர்.
சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், அமைந்தகரை அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்வாங்கியுள்ளது. நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைப்பகுதி 150 மீ தூரத்திற்கு, 20 அடி ஆழத்திற்கு உள்வாங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். குடியிருப்பின் சுவரிலும் விரிசல் விழுந்துள்ளதால் அச்சமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வரும் நவ. 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஜார்க்கண்டிற்கு நவ.13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் நவ. 23-ம் தேதி வெளியாகும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை வந்துள்ளதை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்பதாலும், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் அரசு இந்த விடுமுறையை நீட்டித்துள்ளது.
தொடர் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, 2 நாட்களாக அத்தியாவசிய பொருள்களை பொதுமக்கள் வாங்கிக் குவித்ததால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி வியாபாரிகள் சிலர் கூடுதல் விலைக்கு விற்பதாக கூறப்படுகிறது. இப்படி செய்பவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு கலெக்டர் எச்சரித்துள்ளனர். மற்ற அதிகாரிகளும் இதேபோன்ற நடவடிக்கை எடுப்பார்களா?
Sorry, no posts matched your criteria.