India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொடர் கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது என்றும், வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததற்கு ஏற்ப, தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது என்று ஆளுநர் பாராட்டியுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகையின் 14ஆவது தவணை இன்று பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, தமிழக அரசு மாதம் தலா ₹1,000 வழங்குகிறது. இதுவரை 13 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 14வது தவணை, இன்று காலை பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. உங்களது வங்கிக் கணக்கில் இந்த பணம் வந்ததா?
தமிழகத்தை தொடர்ந்து பெங்களூரிலும் மழை அடித்து நொறுக்கி வருகிறது. இன்று அதிகாலை முதலாகவே பெங்களுர் முழுவதும் கனமழை கொட்ட தொடங்கியது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும், மெயின் ரோடுகளிலும் மழை நீர் வெள்ளமாக ஓடியது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதால் பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றிரவு முதல் தொடங்கிய கனமழை, இப்போது வரை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு சென்னையில் மழை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த கனமழை காரணமாக சென்னை பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, சப்தகிரி, ஏற்காடு, திருப்பதி, காவிரி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சாம்சங் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், அரசின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, இன்று தங்கள் போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றனர். வேலைக்கு திரும்பும் ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை கூடாது என சாம்சங் நிறுவனத்தை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வாணலியில் எள், தோல் நீக்கிய வேர்க்கடலை, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து, சலித்து எடுக்கவும். பாத்திரத்தில் சாமை அரிசி மாவுடன் (300 g) சிறிது நீர் & உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, அடை போல சுடவும். இவை ஆறியதும் மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான சாமை அரிசி சிமிலி உருண்டை ரெடி.
தமிழ்மொழியில் காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் இதோ:
*மென்காற்று: 6 km வேகத்தில் வீசும் *இளந்தென்றல்: 6-11 km வேகத்தில் வீசும் *தென்றல்: 12-19 km வேகத்தில் வீசும் *புழுதிக்காற்று: 20-29 km வேகத்தில் வீசும் *ஆடிக்காற்று: 30-39 km வேகத்தில் வீசும் *கடுங்காற்று: 100 km வேகத்தில் வீசும் *புயல்: 101-120km வேகத்தில் வீசும் *சூறாவளி: 120km மேல் வேகமாக வீசும்.
*ரவா, மைதா உள்ள டப்பாவில் கொஞ்சம் சுட்டு வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது. *பச்சை மிளகாயை காம்பு கிள்ளி எடுத்து வைத்தால் நீண்ட நாட்கள் பழுக்காமல் இருக்கும். *உருளைக் கிழங்கின் மீது பாசிப்பருப்பு மாவைத் தூவி, பொறித்தெடுத்தால் வறுவல் சுவையாக இருக்கும். *காப்பர் பாட்டம் உள்ள பாத்திரத்தில் ஐஸ்கிரீமை ஊற்றி வைத்தால், அது சீக்கிரம் கெட்டியாகிவிடும்.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாக மாறியுள்ளது. இந்நிலையில், நாளை காலை அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிடும் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். இது மேலும் வலுவடைந்து புயலாக மாற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறும் அவர்கள், அது சென்னை அருகே அக். 17-ம் தேதி கரையை கடக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
ரஜினி நடிப்பில் வெளியான ‘வேட்டையன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் நானி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் பஹத் ஃபாசில் நடித்த வேடத்தில் நடிக்க நானியை தயாரிப்பாளர்கள் அணுகியதாகவும், கதாபாத்திரம் பிடிக்காததால் அதில் அவர் நடிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் அமிதாப், பஹத், ராணா ஆகியோரின் பாத்திரத்திற்கும் சரியான ரீச் இல்லை. நானியின் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.