India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
=>இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு, கால் வலி போன்ற பிரச்னை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி பருகலாம்.
=>பூண்டு கலந்த பால், உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.
=>காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புகள் கரைவதோடு உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். SHARE IT
◙மேஷம் – வரவு
◙ரிஷபம் – ஆக்கம்
◙மிதுனம் – நன்மை
◙கடகம் – உதவி
◙சிம்மம் – சுகம்
◙கன்னி – வாழ்வு
◙துலாம் – கவனம்
◙விருச்சிகம் – நலம்
◙தனுசு – பயம் ◙மகரம் – புகழ்
◙கும்பம் – லாபம் ◙மீனம் – ஜெயம்
சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து விலகியதால், தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்பு இல்லை என வானிலை மையம் அறிவித்தது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட்டும் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அர்ஜுன் தயாரித்து இயக்கும் புதிய படத்திற்கு சீதா பயணம் என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இந்நிலையில், தனது ஸ்ரீராம் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் சீதா பயணம் படத்தை தயாரிக்கிறார். இதில், அர்ஜுன் மகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
➤சுவாதி – பூந்தமல்லி தாத்திரீஸ்வரர் கோயில் ➤விசாகம் – செங்கோட்டை முத்துக்குமார சாமி கோயில் ➤அனுஷம் – திருநரையூர் நம்பி கோயில் ➤கேட்டை – வழுவூர் வீரட்டானேஸ்வரர் கோயில் ➤மூலம் – மயிலை மயூரநாதர் கோயில் ➤பூராடம் – கடுவெளி பரமநாதர் கோயில் ➤உத்திராடம் – ஒக்கூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் ➤திருவோணம் – திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் கோயில் ➤ அவிட்டம் – திருவையாறு புஷ்பவனேஸ்வரர் கோயில்.
‘சட்டம் குருடு அல்ல’ என்ற வாசகத்துடன் புதிய நீதிதேவதை சிலை உச்சநீதிமன்ற நூலகத்தில் இன்று திறக்கப்பட்டது. பழைய நீதிதேவதை சிலையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டிருக்கும். ஆனால், சட்டத்தின்முன் சமத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், புதிய சிலையில் கறுப்பு துணி அகற்றப்பட்டுள்ளது. மேலும், இடதுகையில் வாளுக்கு பதிலாக அரசியலமைப்பு புத்தகமும், வலதுகையில் நீதித்தராசும் உள்ளது. உங்க கருத்தை பதிவிடுங்க.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து விலகியதால், இன்று எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. மேலும், தாழ்வு மண்டலம் சென்னை – நெல்லூர் இடையே நாளை கரையை கடக்கிறது. அப்போதும் கனமழை பெய்யாது என்பதால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பெரும்பாலானோர் இன்னமும் தங்கள் முதல் காதலை நினைத்துக் கொண்டிருப்பதாகவும், 10-ல் 4 பேர், FB உள்ளிட்ட சமூக தளங்கள் உதவியுடன் மீண்டும் முதல் காதலோடு தொடர்புகொண்டு (அ) இணைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 10-ல் 4 பேர், குறிப்பாக ஆண்கள் இன்னும் பழைய காதல் நினைவுகளை சுமப்பதாகவும் பதிலளித்துள்ளனர். உங்களுக்கு எப்படி?
பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 600 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Apprentices பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: Any UG Degree. வயது வரம்பு: 20-28. சம்பளம்: ₹9,000. தேர்வு முறை: ஆன்லைன் & நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ. 24. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
ஆபாச வீடியோ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை கமிஸ்னர் அலுவலகத்தில் நடிகை ஓவியா புகார் அளித்துள்ளார். சமூக வலைதளத்தில் சமீபத்தில் நடிகை ஓவியா என்ற பெயரில் வீடியோ ஒன்று உலா வந்தது. இது வைரலான நிலையில், தனது முகத்தை போலியாக சித்தரித்து உருவாக்கி அதனை வீடியோவாக வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி ஓவியா புகார் அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.