India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் பேசின்பிரிட்ஜ் பகுதி தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியிருப்பதால், கீழ்காணும் 7 விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 1) போடி ரயில் 2) ஜோலார்பேட்டை -சென்ட்ரல் ஏலகிரி ரயில் 3) சென்ட்ரல் ஜோலார்பேட்டை ஏலகிரி ரயில் 4) திருப்பதி – சென்ட்ரல் ரயில் 5) சென்ட்ரல் -திருப்பதி ரயில் 6) திருப்பதி- சென்ட்ரல் சப்தகிரி ரயில் 7) ஈரோடு-சென்ட்ரல் ஏற்காடு ரயில்.
மழை நிலவரத்தை தீவிரமாக கண்காணிக்க கலெக்டர்களுக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 6 மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர் ஆவடி நாசர் உள்ளிட்டோருடன் காணொலி மூலம் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, 2 நாள்கள் கனமழை பெய்யவுள்ளதால் இரவு முழுவதும் தீவிரமாக கண்காணிக்க ஆட்சியர்களை அறிவுறுத்தினார். கடலோரம், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை அரசு முகாம்களில் தங்க வைக்கவும் அவர் ஆணையிட்டார்.
இந்தியா – நியூசி. டெஸ்ட் போட்டி தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்த தொடரில் 147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா புதிய உலக சாதனை படைக்கவுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் 2024-இல் இந்தியா 97 சிக்ஸர்கள் விளாசி உள்ளது. இன்னும் 3 சிக்ஸர் விளாசினால் 100ஆக உயரும். இது புது வரலாற்று சாதனை ஆகும். இந்தியாவுக்கு அடுத்து அதிகபட்சமாக இங்கிலாந்து 89 சிக்ஸர் (2022இல்) விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது.
1905: வங்காளம் 2ஆக பிரிக்கப்பட்டது
1948: நடிகையும், அரசியல்வாதியுமான ஹேமா மாலின் பிறந்தார்
1975: தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் காலிஸ் பிறந்தார்
1985: தேசிய பாதுகாப்புப் படை (NSG) அமைக்கப்பட்ட நாள்
1990: நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது
1990: இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் பிறந்தார்
கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகளை
திறப்பது தான் திராவிட மாடல் சேவையா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், மழையால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை மட்டும் திறந்து வைக்க வேண்டிய தேவை என்ன? அது என்ன உயிர்காக்கும் மருந்தா அல்லது மக்களால் தவிர்க்க முடியாத அத்தியாவசிய சேவையா? என வினவியுள்ளார்.
தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க இருப்பதால், இது மேற்காெள்ளப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இன்று (அக். 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பழைய ₹100 நோட்டுக்கள் செல்லாது என்றும், சில கடைகளில் வாங்க மறுக்கின்றனர் என்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து RBI விளக்கம் அளித்துள்ளது. அந்த தகவல் தவறானது, வதந்தி என்று மறுத்துள்ள RBI, பழைய ₹100 நோட்டுக்களை வாங்க மறுப்போர் மீது புகார் அளிக்க கேட்டுக் கொண்டுள்ளது. உங்களிடம் யாரேனும் பழைய ₹100 நோட்டுக்களை வாங்க மறுத்தார்களா? கீழே பதிவிடுங்கள்.
தொடர் கனமழை காரணமாகவும், அதி கனமழை எச்சரிக்கையாலும் சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான பணிகள் இன்று நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பெட்ரோல் நிலையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய நிறுவனங்கள் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.