India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனமழையால் செல்போன் சேவை தடைபடாமல் கிடைக்கும் வகையில், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு நிறுவனத்தின் சேவை துண்டிக்கப்பட்டால், மற்ற நிறுவனங்களின் உதவியுடன் செல்போன் சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, Airtel, Jio உள்ளிட்ட நிறுவன பிரதிநிதிகள் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை உட்பட 9 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று 11 மணிக்கு <<14360342>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி 2)நுளம்பு 3) சிவப்பு கங்காரு 4) 5.95 லட்சம் சதுர கிமீ 5) Greenwich Mean Time 6)ஜப்பான் 7)இனிப்புச் சுவை. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கான RED ALERT விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருப்பத்தூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக 53ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அக்கட்சி பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2026ல் அதிமுக ஆட்சி அமைவதற்கு எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்ற அவர், உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுகுமார், அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி வரும் ’புஷ்பா 2’ வரும் டிச.6 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இசையமைத்துள்ள தேவி ஸ்ரீபிரசாத் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ’புஷ்பா 2’ படத்தின் முதல் பாதி பார்த்துவிட்டேன். முதல் பாகத்தினை விட 10 மடங்கு பெரிதாக
உருவாகி உள்ளது. அல்லு அர்ஜுனின் நடிப்பை அனைவரும் பாராட்டுவர் என்றார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் நாள்களில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரை நீடிக்கும்.
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை உடனே நிற்க வாய்ப்பில்லை என்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன். அடுத்த 3 hours-க்கு மழை தொடரும். மழை உடனே நிற்க வாய்ப்பில்லை என்பதால், இன்று அலுவலகத்துக்கு சென்றிருப்பவர்கள் மாலை முன்னதாகவே வீடு திரும்புவது பாதுகாப்பானது. சென்னையில் ஏற்கெனவே 20 செமீ அளவுக்கு மழை பெய்துள்ள நிலையில், நாளை மழை மேலும் தீவிரமடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் அக். 15-ம் தேதி சர்வதேச கைகழுவும் தினமாக (Global Handwashing Day) அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக கைகளைக் கழுவ சோப், ஹேண்ட் வாஷ் என்று வெவ்வேறு விதமான பொருள்கள் பயன்படுத்தப்பட்டாலும், கைகளைத் சுத்தமான நீரில் 20 விநாடிகள் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதைபோல, வெளியில் சென்று திரும்பிய பிறகும் கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்கிறார்கள்.
ஒருவர் தனது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய இறையாற்றல் மிக்க சித்தர்களை வணங்கினால் அவருக்கு ஏற்படும் துன்பங்கள் விலகும். 27 நட்சத்திரங்களுக்குரிய சித்தர்கள் பற்றி இங்கே பார்க்கலாம். ➤அஸ்வினி-காலங்கி சித்தர் ➤பரணி-போகர் ➤கார்த்திகை-ரோமரிஷி ➤ரோஹிணி-மச்சமுனி ➤மிருகசீரிடம்-பாம்பாட்டி சித்தர் ➤திருவாதிரை-இடைக்காடர் ➤புனர்பூசம்-தன்வந்தரி ➤பூசம்-கமலமுனி ➤ஆயில்யம்-அகத்தியர் ➤பூராடம்- நந்தீசர் ➤மூலம்-பதஞ்சலி.
Sorry, no posts matched your criteria.