News August 26, 2025

SKவின் ‘அமரன்’ படத்துக்கு கேரளாவில் விருது

image

கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில், ‘அமரன்’ ‘சிறந்த பிறமொழித் திரைப்படம்’ விருதை வென்றுள்ளது. ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு, கேரள அமைச்சர் வாசவன் விருது வழங்கி கெளரவித்தார். சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதை தழுவி எடுக்கப்பட்டது.

News August 26, 2025

ரத்தன் டாடா பொன்மொழிகள்

image

*நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று யோசிப்பதில்லை. முடிவு எடுத்த பிறகு அதை சரியானதாக மாற்றிவிடுவேன். *நீங்கள் வேகமாக பயணிக்க விரும்பினால் தனியாகச் செல்லுங்கள்; நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்றால் கூட்டாகச் செல்வதுதான் சரி. *ECG வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன.

News August 26, 2025

கேப்டன்சி வாய்ப்பை நழுவ விட்ட ஸ்ரேயாஸ் ஐயர்

image

ஆசிய கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், துலீப் டிராபியில் மேற்கு மண்டல அணியின் பேப்டன்சி வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் நிராகரித்தாக கூறப்படுகிறது. ஸ்ரேயாஸ் வாய்ப்பை ஏற்காததால் அந்த வாய்ப்பு ஷர்துல் தாக்கூருக்கு சென்றது. ஆசிய கோப்பை கனவு தகர்ந்ததால் இப்போது சாதரண வீரராக துலீப் டிராபியில் அவர் விளையாட உள்ளார். போராட்ட குணம் கொண்ட ஸ்ரேயாஸ் மீண்டும் டி20 அணியில் நிச்சயம் இணைவார் என நம்பலாம்.

News August 26, 2025

சனாதன தர்மத்தை அழிக்க முடியாது: வானதி சீனிவாசன்

image

சனாதன தர்மத்தை எந்த அரசியல் தலைவர்களும் அழிக்க முடியாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ராமர் குறித்து வன்னி அரசு பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் முதலில் உண்மையான ராமாயணத்தை படிக்க வேண்டும் எனவும் வானதி பதிலடி கொடுத்துள்ளார். கட்டுக்கதைகளை வைத்து பேசுவது சரியானதல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

News August 26, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 439 ▶குறள்:
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
▶ பொருள்: எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது.

News August 26, 2025

ராகுல் பெரும் பொய்யர்: தேவேந்திர பட்னாவிஸ்

image

வாக்கு திருடப்பட்டதாக ராகுல் காந்தி கூறும் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என மகாராஷ்டிரா CM தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். எவ்வித ஆதாரமும் இன்றி ராகுல் பெரும் பொய்யைகள் பேசி வருவதாகவும் அவர் சாடியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உண்மையான பொய்யர்கள் பாஜகவில்தான் இருப்பதாகவும், தேவேந்திர பட்னாவிஸ் திருட்டு அமைச்சர் எனவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

GST வரி குறைப்பு அக்.2-ல் அமல் என தகவல்

image

GST வரி குறைப்பு அக்டோபர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. GST கட்டமைப்பில் தற்போது 5%, 12%, 18%, 28% ஆகிய 4 அடுக்கு வரி விகிதங்கள் உள்ளன. இதை 5%, 18% என இரண்டு அடுக்காக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. PM மோடி கூறியது போல் தீபாவளி பண்டிகை மக்களுக்கு இரட்டை தீபாவளியாக அமையும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

News August 26, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 26, ஆவணி 10 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அதிதி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை

News August 26, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News August 26, 2025

விஜய் பேசுவது சரியா? அண்ணாமலை பதில்

image

2026-ல் திமுக- தவெக இடையேதான் போட்டி என விஜய் கூறி வருகிறார். இதுகுறித்து அண்ணாமலையிடம் கேட்டபோது, விஜய் அப்படி சொல்லவில்லை என்றால் யார் மதிப்பார்கள்? அதனால்தான் அவ்வாறு கூறுவதாக தெரிவித்தார். ஆனால், உண்மையான போட்டி திமுகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்தான் என மக்களுக்கு தெரியும் என அவர் கூறினார். மக்களின் மனதில் எங்கள் கூட்டணிக்கு இடம் கிடைத்து விட்டதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!