India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கங்குவா பட வசூல் தமிழ் சினிமாவில் புதிய வரலாறு படைக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இப்படம் ரூ.1000 கோடி வசூல் சாதனை படைக்குமா என பலரும் கேட்பது வருத்தமாக இருப்பதாகவும், ரூ.2000 கோடி வசூலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். படம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மலையாள நடிகர் பிருத்விராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ‘எம்புரான்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 2019இல் வெளியாகி அமோக வரவேற்பை ‘லூசிஃபர்’ பெற்றது. அதில், மோகன்லாலின் உதவியாளராக ‘சையத் மசூத்’ என்கிற கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்திருந்தார். அதன் 2ஆம் பாகமாக ‘எம்புரான்’ உருவாகி வருகிறது. பிருத்விராஜ் இயக்கி வரும் இப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
➤நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து நிகழ்ந்த விபத்தில் 94 பேர் உயிரிழந்தனர். ➤மேற்குக் கரையில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் யூத அமைப்புகளுக்கு பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்தது. ➤ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் முடிவுதான் இறுதியானது என்று இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்தது. ➤இஸ்ரேல் தாக்குதல் காரணமாக லெபனானில் இருந்து 12 லட்சம் பேர் இடம்பெயர்ந்ததாக UNHCR தகவல் தெரிவித்தது.
உளுந்து (250 கி), வெந்தயம் (50 கி) இரண்டையும் 3 மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கம்பு மாவு (500 கி), உப்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய், கேரட், மல்லித்தழை சேர்த்துக் கரைக்கவும். அதை சூடான தோசைக் கல்லில் மெலிதாக ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான கம்பு தோசை ரெடி. இதற்கு தொட்டுக் கொள்ள காரமான தக்காளி சட்னி ஏற்றது.
பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரைத் தொடர்ந்து அருந்தி வரும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. கேன் நீர் கெடாமல் இருக்கவும், புழுக்களை தடுக்கவும் பூச்சிக்கொல்லி, பாஸ்பேட் போன்ற மினரல்களை சேர்க்கிறார்கள். இவையும் பாட்டிலில் கலந்திருக்கும் BPA என்ற ரசாயனமும் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
➤Chess Masters: விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா மோதிய காலிறுதியின் முதல் போட்டி ‘டிரா’ ஆனது. ➤ISSF World Cup: மகளிர் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் சோனம் வெள்ளிப் பதக்கம் வென்றார். ➤Hockey India League: இந்திய வீராங்கனை உதித்தாவை ₹32 லட்சத்துக்கு பெங்கால் அணி வாங்கியது. ➤சர்வதேச ஸ்குவாஷ் தொடர்: முதல் சுற்றில் அமெரிக்காவின் ஆட்ரேவை 3-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவின் ஜோஷ்னா வென்றார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கவிருந்த நிலையில், காலை முதலே அங்கு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக டாஸ் கூட போடாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை தொடரும் பட்சத்தில் நாளையும் போட்டி ரத்தாக வாய்ப்புள்ளது.
அன்றாட உணவில் காரம் சேர்த்து கொள்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதாக வெர்மான்ட் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. 23 ஆண்டுகள் 16,000 பேரை ஆய்வு செய்து வல்லுநர்கள் அளித்த அறிக்கையில், சிறிதளவு கூடுதலாக ஆன்டி-கார்சினோஜெனிக் & நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் கொண்ட மிளகு & மிளகாயை உணவில் அதிகம் சேர்க்கும் நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 13% குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித்துக்கு உண்மையாகவே தில்லு அதிகம் என இயக்குநர் முத்தையா புகழ்ந்துள்ளார். ‘அட்டகத்தி’ படத்தை இயக்கிய ரஞ்சித்தால் மாறுபட்ட கதையை கொண்ட ‘காலா’வையும் பண்ண முடிகிறது. அவரைப் போல மற்ற இயக்குநர்களுக்கும் தைரியம் வரவேண்டும்’ என கூறியுள்ளார். மேலும், ரஞ்சித் போன்ற பயமில்லாத இயக்குநர்களை பார்த்து சந்தோஷப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். கொம்பன், குட்டி புலி உள்ளிட்ட படங்களை முத்தையா இயக்கியுள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட போதிலும், இன்று லேசான மழையே பெய்தது. இந்நிலையில், இதுகுறித்து வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், “வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை பலவீனம் அடையவில்லை. சிஸ்டம் இன்னும் கடலில்தான் இருக்கிறது. நாளை அதிகாலை அது கரையை கடக்கும்போது, மிக கனமழை பெய்யும். ரெட் அலர்ட் தொடரவே செய்கிறது” எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.