India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிரிமினல்களை நாடு கடத்தும்படி விடுத்த 26 கோரிக்கைகளை கனடா கிடப்பில் போட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. அந்தக் கோரிக்கைகள் மட்டுமன்றி கைது கோரிக்கைகளையும் கனடா கிடப்பில் போட்டுள்ளதாகவும் அது சாடியுள்ளது. உண்மை நிலவரம் இப்படி இருக்கையில், வன்முறையை தூண்டுவதாக இந்தியா மீது கனடா புகார் கூறுவதாக வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.
மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா அணி முன்னேறியுள்ளது. துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் அந்த அணி மோதியது. முதலில் பேட் செய்த ஆஸி.அணி 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. பிறகு ஆடிய தெ.ஆப்பிரிக்க அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 135 ரன்களை சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இப்படம் செப்.6இல் வெளியாக இருந்த நிலையில், சீக்கியர் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக மத்திய தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் அளிக்க தயங்கியது. இதை எதிர்த்து கங்கனா தொடர்ந்த வழக்கில் மும்பை நீதிமன்றம் செப்.25க்குள் சென்சார் வழங்க உத்தரவிட்ட நிலையில், தற்போது சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. அதேபோல், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
◙மேஷம் – பெருமை
◙ரிஷபம் – இன்பம்
◙மிதுனம் – உற்சாகம்
◙கடகம் – நலம்
◙சிம்மம் – அமைதி
◙கன்னி – புகழ்
◙துலாம் – பாசம்
◙விருச்சிகம் – சுபம்
◙தனுசு – போட்டி ◙மகரம் – சாந்தம்
◙கும்பம் – விவேகம் ◙மீனம் – மேன்மை
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு எதிராக குஷ்புவை வேட்பாளராக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வயநாடு பாஜக வேட்பாளர்களுக்கான உத்தேசப் பட்டியலில் குஷ்பு பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வயநாட்டில் நவ.13இல் தேர்தல் நடைபெறுகிறது.
மீண்டும் ஆண்கள் vs பெண்கள் விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது. கிருமிநாசினியான LIZOL-ன் விளம்பரங்களில், பெண்கள் மட்டுமே வீட்டை சுத்தம் செய்வதாக காட்டப்படுவது ஏன் என X தள பயனர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு, LIC-யின் விளம்பரங்களில் ஆண்கள் மட்டுமே மரணமடைவதாக காட்டுவது ஏன் என இன்னொரு பயனர் ஒருவர் எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். இதை பற்றி உங்களுடைய கருத்து என்ன? கமெண்ட்ஸ் ப்ளீஸ்..!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் PUBLIC TOILET சீட்டை விட அதிக அளவிலான அழுக்கும், பாக்டீரியாக்களும் இருப்பது அரிசோனா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை தொட்டுவிட்டு கையை கழுவாமல் வாயில் கை வைத்தோலோ, சாப்பிட்டாலோ மோசமான உடல்நலப் பிரச்னைகள் வரும் எனக் கூறப்படுகிறது. எனவே, நாளொன்றுக்கு 3 முறை செல்போனை துடைக்கும் ஸ்பிரே மூலம் சுத்தப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தினர் சிலர் கொல்லப்பட்டதாகவும், அதில் சின்வாரும் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதை அந்நாட்டு ராணுவம் இன்னும் உறுதிச் செய்யவில்லை. ஹமாஸ் தலைவராக இருந்த ஹனியே கொல்லப்பட்டபின் தலைவராக பொறுப்பேற்றவர் சின்வார்.
இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே, வானில் ஓர் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆம்.. நிலவு இதுவரை இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக நெருக்கமாக வந்துள்ளது. இது HUNTER MOON எனப்படுகிறது. பூமியில் இருந்து 4.05 லட்சம் கி.மீ. தொலைவில் இருக்கும் நிலவு, இன்று 3.65 கி.மீ. தூரம் வந்துள்ளது. அதனால், நிலவு வழக்கத்தை விட 14% பெரிதாகவும், 30% கூடுதல் ஒளியுடனும் இருக்கும். உடனே பாருங்க. Share It.
Sorry, no posts matched your criteria.