India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (அக். 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சத்யன் மோகேரி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நவம்பர் 13இல் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதியின் எம்.பி பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
இன்று (அக்.18) காலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
தினம் ஒரு திருக்குறளை இந்த பகுதியில் படித்து வருகிறோம். அந்த வரிசையில், இன்றைய நாளுக்கான திருக்குறளை இங்கு நாம் காணலாம். ▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: மெய்யுணர்தல். ▶குறள் எண்: 351 ▶ குறள்: பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. ▶பொருள்: மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும். SHARE IT
*இன்று: வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு *20ம்தேதி: ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கோவை, திருப்பூர் *21: ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கோவை, திருப்பூர். SHARE IT
டெஸ்டில் இந்திய அணி இதுவரை எடுத்த குறைவான ஸ்கோர்களை பார்க்கலாம்.
*1947- 58 ரன்கள் (எதிரணி- ஆஸி) *1952 – 58 ரன்கள் (எதிரணி- இங்கி) *1974- 42 ரன்கள் (எதிரணி- இங்கி) *1977- 83 ரன்கள் (எதிரணி- இங்கி) *1987- 75 ரன்கள் (எதிரணி- வெஸ்ட் இண்டீஸ்) *1999- 83 ரன்கள் (எதிரணி- நியூசிலாந்து) *2008 – 76 ரன்கள் (எதிரணி-தெ.ஆப்பிரிக்கா) *2020- 36 ரன்கள் (எதிரணி-ஆஸி) *2024- 46 ரன்கள் (எதிரணி- நியூசி)
டி.டி. தமிழில் ஹிந்தி மாத கொண்டாட்டங்கள் நடந்ததற்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதிகை என்ற பெயரை டி.டி. தமிழ் என்று பெயர் மாற்றம் செய்து, அதன்மூலம் ஹிந்தி திணிப்பை மத்திய பாஜக அரசு மேற்காெண்டிருப்பதாக அவர் சாடியுள்ளார். தமிழ் மக்களின் உணர்ச்சிகளை சீண்டிப் பார்க்கும் செயலில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இன்று (அக். 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
நடிகை தமன்னாவிடம் ED அதிகாரிகள் விசாரணை நடத்தினர். HPZ Token செயலியில் முதலீடு செய்தோரிடம் பல கோடி மாேசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் மீது ED பணமோசடி வழக்குப்பதிந்துள்ளது. அந்த செயலி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தமன்னா கலந்து கொண்டதாகவும், பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கவுகாத்தியில் இன்று விசாரணை நடத்தப்பட்டது.
சவரன் தங்கம் விலை 7 நாளில் ₹1,080 உயர்ந்துள்ளது.
*அக்.10 = ₹ 7,025 (கிராம்), ₹56,200 (சவரன்)
*அக்.11 = ₹ 7,095 (கிராம்), ₹56,760 (சவரன்)
*அக்.12 = ₹7,120 (கிராம்), ₹56,960 (சவரன்)
*அக்.13 = மாற்றமில்லை
*அக்.14 = மாற்றமில்லை
*அக்.15 = ₹7,095 (கிராம்), ₹56,760 (சவரன்)
*அக்.16 = ₹ 7,140 (கிராம்), ₹57,120 (சவரன்)
*அக். 17 = ₹ 7,160 (கிராம்), ₹ 57,280 (சவரன்).
Sorry, no posts matched your criteria.