News October 17, 2024

பிரபல பாடகர் லியாம் பைன் உயிரிழந்தார்

image

பிரபல பாப் பாடகர் லியாம் பைன் (31) உயிரிழந்தார். இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க அர்ஜென்டினா சென்ற அவர், அங்கு Buenos Aires நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2010-ல் லண்டனில் பிரபலமான ONE DIRECTION குழுவில் இணைந்து முன்னணி பாடகராக திகழ்ந்தார். பின் 2016ல் இசைக்குழு கலைக்கப்பட்ட பின் தனிப் பாடகராக வலம் வந்தார்.

News October 17, 2024

மதுவிலக்கு மாநிலத்தில் ஓயாத மரண ஓலம்

image

பிஹாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. ஷிவான், சரண் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கெனவே 7 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 2016 முதல் மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலத்தில் கள்ளச்சாராய மரணங்கள் ஆண்டுதோறும் பதிவாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News October 17, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) யாரும் மதவழிபாடு செய்யக்கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ள நாடு எது? 2) சுறா மீன்களுக்கு மொத்தம் எத்தனை கருப்பைகள் உள்ளன? 3) கால்கள் மூலம் உணவின் ருசியை உணரும் பூச்சி எது? 4) உலகின் மிக நீளமான கடற்கரை எது? 5) சுவாசிக்காமல் வாழும் நுண் உயிரி எது? 6) LoC என்பதன் விரிவாக்கம் என்ன? 7) 2 துறைகளில் நோபல் பரிசு பெற்ற ஒரே விஞ்ஞானி யார்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News October 17, 2024

ஆங்கிலம் அறிவோம்: Confident Vs Confidant

image

Confident, Confidant ஆகிய இரு சொற்களும் நம்பிக்கையை குறிக்கும் சொற்கள். இருந்தாலும் இவை இரண்டும் ஒன்றல்ல. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே விரிவாகக் காணலாம். Confidence என்றால் நம்பிக்கை. இது ஒரு வினைச்சொல். Confidant என்றால் நம்பிக்கையைப் பெற்ற ஒருவர் என்ற பொருளைக் குறிக்கும். இந்த இரு சொற்களும் பிரெஞ்ச் (மூலமொழி லத்தின்) கிளைத்த Con + Fidere (Force+Trust) உருவானதாக சொல் அகராதி கூறுகிறது.

News October 17, 2024

தயவுசெய்து இதை மட்டும் குடிக்காதீங்க!

image

பொடுகு, தோல் தடித்து, சிவந்து, அரிப்பது, வறட்சி, அழற்சி போன்ற தோல் பிரச்னைகளுக்கு தவறான உணவுப் பழக்கமே காரணம் என ஆயுஷ் மருத்துவம் கூறுகிறது. இது தொடர்பாக பேசிய ஆயுஷ் மருத்துவர் ஹரி, “ஒவ்வாமை போன்ற உடல் நல பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முரண்பட்ட இரு சுவைகளான புளிப்பு, இனிப்பு தன்மை கொண்ட உணவுப் பொருள்களை பாலில் சேர்த்து ‘மில்க் ஷேக்’ என்ற பெயரில் திரவ உணவாக எடுத்துக்கொள்ள கூடாது” என்றார்.

News October 17, 2024

விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்திய அணி

image

நியூசி.,க்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி தடுமாறி வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ரோகித் தலைமையிலான இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி கிடைத்தது. ரோகித் சர்மா (2), விராட் கோலி (0), சர்பராஸ் கான் (0) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நியூசி. வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தற்போது ஜெய்ஸ்வால் (8*) கிரீஸில் உள்ளார். ஸ்கோர் 12/3.

News October 17, 2024

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் வேலை!

image

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 200 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு பி.காம், பி.டெக், எம்.காம், எம்.டெக் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில், 60% மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் ஆட்கள் சேர்ப்பு நடைபெறும். விருப்பமுடையவர்கள் நவ. 5ஆம் தேதிக்குள் uiic.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். Share it.

News October 17, 2024

FLASH: தங்கம் விலை மேலும் உயர்ந்தது

image

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து, புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ஒரு சவரன் ₹57,280க்கும், கிராமுக்கு ₹20 உயர்ந்து ஒரு கிராம் ₹7,160க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ₹103க்கும், கிலோ ₹1,03,000க்கும் விற்கப்படுகிறது.

News October 17, 2024

அதிமுகவினர் நேரில் வந்தார்களா? சேகர் பாபு கேள்வி

image

மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு அதிமுக நிர்வாகிகள் நேரில் வந்தார்களா? என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த அவர், முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நிவாரணப் பணிகளை மேற்கொண்டதாக நினைவுகூர்ந்தார். அத்துடன், இபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்வதற்கே தகுதியில்லாதவர் என்றும் சாடினார்.

News October 17, 2024

நடிகை ராதிகா ஆப்தே கர்ப்பம்

image

நடிகை ராதிகா ஆப்தே கர்ப்பமாக இருப்பதை முதல்முறையாக வெளிப்படுத்தியுள்ளார். BFI லண்டன் திரைப்பட விழாவில் பங்கேற்ற அவர், கர்ப்பமாக இருப்பதைக் கண்டதும் பலரும் ஆச்சரியம் அடைந்தனர். பிரிட்டிஷ் வயலின் கலைஞரான பெனடிக்ட் டெய்லரை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொது வெளியில் வெளியிட விரும்பாதவர். இந்நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!