India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செவ்வாய் கோளின் தரைப்பகுதியில் நாசாவின் ‘பெர்சிவிரன்ஸ் ரோவர்’ 2021 பிப்.18இல் இருந்து ஆய்வில் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, செவ்வாயின் Jezero Craterஇல் பாறை கற்களை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இதில் ஒன்று, செங்குத்தாக பார்ப்பதற்கு மனித முகத்தின் வடிவம் போல உள்ளது. 45 km அகலமுள்ள இப்பகுதி 370 கோடி ஆண்டுகளுக்கு முன் நீர் வெள்ளம் சூழ்ந்ததாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழில் அரிய கலை நூல்களை அச்சிட 5 நூல்கள் வரை நூலாசிரியர்களுக்கு ₹2 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை TN அரசு உதவி செய்கிறது. இந்த உதவித் தொகையை பெற விரும்பும் நூலாசிரியர்கள், “தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28” என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு வருகிற 25ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
தனது கனவு திரைப்படமான ‘இரும்பு கை மாயாவி’ மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த அவர், கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு 5ஆண்டுகளுக்கு பின் இப்படத்தை தொடங்கவுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், தனது முந்தைய பட ஜானர் போல துப்பாக்கி இல்லாமல், லவ், காமிக்ஸ் கலந்த ஃபேன்டசி படமாக அப்படம் இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
வல்லாரை கீரை (100g), தேங்காய் துருவலை அரைத்து, வடிகட்டி சாறை எடுத்து கொள்ளவும். 2 மணிநேரம் நீரில் ஊற வைத்த பச்சரிசி (1 கரண்டி), பாதாம், முந்திரி ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். பின் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் & பாலை ஊற்றி கொதிக்க விடவும். அத்துடன் ஏலக்காய் தூள், வடிகட்டிய வல்லாரைப் பால், பச்சரிசி கலவை, வெல்லப் பாகைச் சேர்த்து வேகவைத்து இறக்கினால் சுவையான வல்லாரை பாயாசம் ரெடி.
மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மின் விபத்துக்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒரே நாளில் அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்ற முயன்றபோதும், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தும் 3 பேர் உயிரிழந்தனர். எனவே, மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகில் செல்ல வேண்டாம். மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி போன்றவற்றைக் கட்டக்கூடாது. வீட்டில் மின்கசிவு இருந்தால் உடனே மின்வாரியத்தை அணுகவும்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு உதவ TN அரசு கட்டணமில்லா உதவி எண்களை அறிவித்துள்ளது. 18002021989, 14566 ஆகிய 2 எண்களில், ஏதாவது ஒன்றில் தொடர்பு கொண்டு, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் வழக்குப்பதிவு செய்தல் மற்றும் புகார் தொடர்பான முறையீடுகள் குறித்து கேட்டு பயன் பெறலாம் என்று TN அரசு கூறியுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிரலாமே.
மேம்பட்ட அம்சங்களுடன் Pulsar N125 என்ற புதிய மாடல் பைக் வரும் 16ஆம் தேதி அறிமுகமாகும் என பஜாஜ் அறிவித்துள்ளது. 125 சிசி, சிங்கிள் சிலிண்டர் மோட்டார் கொண்ட இந்த பைக்கின் விலை ₹95,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் TVS Raider 125 மற்றும் Hero Xtreme 125R ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்சருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அக்.13இல் No Bra Day கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் 14 விநாடிக்கும், இந்தியாவில் 4 நிமிடங்களுக்கும் பெண் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. ஒரு நாள் ப்ரா இல்லாமல் செல்வது ஆறுதலை அளிக்கும் என்று பெண் உணர்கிறார்கள். பல தனிநபர்கள் உள்ளாடைகளின் இறுக்கத்திலிருந்து உடலுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகின்றனர்.
1) இந்தியாவில் வெளியான முதல் செய்தித்தாளின் பெயர் என்ன? 2) EPF என்பதன் விரிவாக்கம் என்ன? 3) ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர் யார்? 4) வள்ளலார் பாட்டை ‘மருட்பா’ என்று கூறியது யார்? 5) நீந்தத் தெரியாத விலங்கு எது? 6) டென்மார்க் நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன? 7) ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இரு வேறு காட்சிகளை காணும் பறவை எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
கலைஞர் பூங்கா ஜிப்லைன் பழுது என தவறான தகவல் பரப்புவதா? என EPSக்கு அமைச்சர் M.R.K. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தனக்கு வேண்டப்பட்டவர் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலத்தை மீட்டு பூங்காவாக மாற்றியதால் ஈபிஎஸ்க்கு கோபம் என விமர்சித்த அவர், ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது, பழுதடைவதற்கு இதில் ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.