India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காலாண்டு விடுமுறைக்கு பின், இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 1-5ம் வகுப்பு மாணவர்களின் தொகுத்தறி மதிப்பெண்களை TNSED செயலில் பதிவேற்றுமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை அக்.9க்குள் உள்ளீடு செய்வது அவசியம். இது தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.
உலகின் மிகச் சிறிய Rubik’s Cube அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெறும் 0.33 கிராம் எடை கொண்ட இந்த Rubik’s Cube, ஏற்கெனவே கின்னஸ் சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், தற்போது MegaHouse என்ற வெப்சைட்டில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ₹4.39 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒவ்வொரு பக்கமும் 1.19 இன்ச் நீளம் கொண்டது. தற்போது ஆர்டர் செய்தால் அடுத்த ஆண்டு ஏப்ரலில் டெலிவரி ஆகும்.
பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் மட்டுமே பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையை உருவாக்கும் எனக் கூறிய அவர், காஸாவை தொடர்ந்து லெபனானிலும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலால் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது போருக்கான காலம் அல்ல என்று மோடி சொல்வதை போல், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றார்.
வேகன்ஆர் வரிசையில் Waltz என்ற ஸ்பெஷல் எகானமி எடிஷனை மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புது ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மாடலில், குரோல் கிரில், 6.2 இன்ச் திரை கொண்ட மியூசிக் சிஸ்டம், செக்யூரிட்டி சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. இரு ஏர் பேக், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ், ஏ.பி.எஸ். பாதுகாப்பு வசதி வசதியுடன் கிடைக்கும் இதன் விலை ₹5.65 லட்சமாகும்.
மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் மோரிங்கா டீ பருகலாம் என டயட்டீஷியன்ஸ் பரிந்துரைக்கின்றனர். முருங்கை இலை (கைப்பிடி), எலுமிச்சை இலை (2), தேநீர் தூள், சுக்கு, சோம்பு, பட்டை, துளசி, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனை வெல்லம் சேர்த்தால் மணமிக்க சுவையான மோரிங்கா டீ ரெடி. இந்த டீயை இரவு தவிர்த்து எப்போது வேண்டுமென்றாலும் குடிக்கலாம்.
TASMAC கடைகளை தமிழ்நாடு அரசு படிப்படியாக மூட வேண்டும் என்று CPIM மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி வலியுறுத்தியுள்ளார். அதற்கு முதற்கட்டமாக டாஸ்மாக் நேரத்தை குறைக்க வேண்டும் எனக் கூறிய அவர், அரசியல் கட்சித் தலைவர்கள் ஓட்டுப் போடுவதற்கு மது வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். போதையில்லாத தமிழகம், இந்தியா உருவாக வேண்டும் என்பதே CPIM கனவு எனத் தெரிவித்தார்.
➤U 21 சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ➤சிங்கப்பூர் ஓபன் ஸ்னுாக்கர் தொடரில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றார். ➤ குளோபல் செஸ் லீக் தொடரில் ஆனந்த் தலைமையிலான கங்காஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. ➤ காத்மாண்டுவில் நடந்த ஆசிய ரக்பி செவன்ஸ் எமிரேட்ஸ் டிராபி தொடரில் இந்திய பெண்கள் அணி வெள்ளி வென்றது.
கர்நாடகாவில் ₹5 கோடி பழைய நோட்டுகளை எரிக்க பெங்களூரு போலீசார் திட்டமிட்டுள்ளனர். பல்வேறு வழக்குகளில் சுமார் ₹5 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்தனர். இவை பழைய ₹500, ₹1,000 நோட்டுகளாகும். இந்த பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், இவை தற்போது வெறும் காகிதமாகி விட்டன. இந்நிலையில், இவற்றை எரிக்க நீதிமன்ற அனுமதி கோரியுள்ளது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலின் அடுத்து தயாரிக்கப்போகும் படத்தின் பெயர் மற்றும் First look இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் ஜீவா மற்றும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது நடிகர் ஜீவாவின் கரியரில் முக்கிய படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வார்ரூம் பகுதியை சுற்றி 100 மீட்டர் தொலைவிற்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வார்ரூம் பகுதியில் அனுமதி அளிக்கப்படும் என்று ஜம்மு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.