News October 7, 2024

டி-ஷர்ட் போட்டால் கோர்ட்டுக்கு போவோம்: DJ

image

உலகத்திலேயே அரசு நிகழ்ச்சியில் கட்சி சின்னத்துடன் டி-ஷர்ட் அணிந்து செல்லும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான் என ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், அரசு பதவியில் இருப்போர் பின்பற்ற வேண்டிய மரபுகளை உதயநிதி மீறுவதாகக் கூறினார். மேலும், இனி அரசு நிகழ்ச்சிகளில் டி-ஷர்ட் அணிந்தால் தாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 7, 2024

BAN Vs IND: இந்திய அணியின் சாதனைகள்

image

வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில், அபாரமாக விளையாடி வென்ற இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. எதிரணியை அதிக முறை ஆல்அவுட் செய்த பாகிஸ்தானின் (42) உலக சாதனையை சமன் செய்தது. அதன்பின் 120+ ரன்கள் என்ற இலக்கை இந்தியா வேகமாக (11.5 ஓவர்கள்) துரத்தியது. 49 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்திய அணி வேகமாக எடுத்து தனது (2016இல் BAN அணிக்கு எதிரான) முந்தைய சாதனையை முறியடித்தது.

News October 7, 2024

IPL 2024: மெகா ஏலம் எங்கு நடக்கவுள்ளது?

image

18ஆவது ஐ.பி.எல் T20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. இதற்கான வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் IPL மெகா ஏலம் நவம்பர் இறுதியில் நடக்கவுள்ளது. இந்த ஏலத்தை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் அல்லது அங்குள்ள துறைமுக நகரான ஜேட்டாவில் நடத்துவது குறித்து பரிசீலனையில் இருப்பதாக IPL வட்டார தகவல் தெரிவிக்கின்றன. துபாயும் ஐ.பி.எல். நிர்வாகத்தின் யோசனையில் உள்ளதாக அறியமுடிகிறது.

News October 7, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) பண்டைய கிரேக்கர்கள் காதலின் கடவுளாகக் கருதி வழிபட்ட கிரகம் எது? 2) நீரை அருந்தாத வாழும் விலங்கு எது? 3) AAI என்பதன் விரிவாக்கம் என்ன? 4) தமிழின் முதல் அகராதி நூலின் பெயர் என்ன? 5) இருட்டைப் பார்த்து ஏற்படும் அதீத பயத்தைக் குறிக்கும் அறிவியல் சொல் என்ன? 6) பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணோடு மண்ணாகச் சிதைவடைய எத்தனை ஆண்டுகளாகும்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News October 7, 2024

ஒரே நாளில் 2 தேர்வுகள்

image

அக்.21ஆம் தேதி 2 அரசுப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடக்கவுள்ளது. இரு தேர்வுகளும் பொறியியல் கல்வித் தகுதியை கொண்டிருப்பதால், தேர்வர்களால் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, தேர்வர்களின் நலன் கருதி நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும். வரும் காலங்களில் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க TNPSC மூலம் ஆள்தேர்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.

News October 7, 2024

‘மகாராஜா’ இயக்குநருக்கு கார் பரிசு!

image

‘மகாராஜா’ பட இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு படக்குழுவினர் சொகுசு காரை பரிசளித்தனர். விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமாக வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், வித்தியாசமான திரைக்கதை காரணமாக ₹100 கோடி வசூல் ஈட்டி அசத்தியது. அதேபோல, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பல சாதனைகளை படைத்தது.

News October 7, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

image

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை 5 நாட்களுக்கு பின் குறைந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ₹56,800க்கும், கிராமுக்கு ₹20 குறைந்து ₹7,100க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹60,440க்கும், கிராமுக்கு ₹7,555க்கும், ஒரு கிராம் வெள்ளி ₹103க்கும், கிலோ வெள்ளி ₹103,000க்கும் விற்பனையாகிறது.

News October 7, 2024

Space Science: வீரர்களுக்கு உணவாகும் சிறுகோள்கள்

image

விண்வெளியில் நீண்ட காலம் பயணிக்கும் (அ) தங்கி இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை உறுதிசெய்ய ஆஸ்ட்ரோபயோலஜி நிபுணர்கள் புதிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பூமியில் இறங்கிய விண்கலில் நுண் உயிரிகளின் தாக்கம் இருப்பதை அவற்றின் மாதிரியில் இருந்து கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து அவற்றில் இருந்து கார்பனை பிரித்தெடுத்து, அதை ஊட்டச்சத்துக்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

News October 7, 2024

5G அல்ல… 4G மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் JIO

image

ரிலையன்ஸ் JIO அதன் 5G நெட்வொர்க் விரிவாக்கப் பணிகளை தாமதப்படுத்தியுள்ளன. குறைந்த திறன் பயன்பாடு & நிலுவையில் உள்ள பிரீமியம் பணமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளதாக அறியமுடிகிறது. அத்துடன், ஏற்கெனவே இருக்கும் 4G பயனர்களுக்கு பிரத்யேக மேம்பட்ட 5G சேவையை வழங்க 90%க்கும் அதிகமான இந்தியாவின் இணைய பயனர்களை உள்ளடக்கிய JIO நெட்வொர்க் கவனம் செலுத்தி வருகிறது.

News October 7, 2024

5 பேர் உயிரிழந்தது வேதனை: கனிமொழி

image

சமாளிக்க முடியாத கூட்டங்களை இனி தவிர்க்க வேண்டுமென கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த மக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். முறையான ஏற்பாடுகள் இல்லையென எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!