News October 7, 2024

மிக கனமழை Alert

image

அரபிக்கடலில் வரும் 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்று தமிழகத்தின் ஊடே செல்வதால், வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளது. மேலும், தென்காசி, நெல்லை, குமாியில் இன்று மிக கனமழைக்கான Orange Alert, தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகையில் கனமழைக்கான Yellow Alert விடுக்கப்பட்டுள்ளது.

News October 7, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10.30 மணிக்கு GK வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) வீனஸ் 2) கங்காரு எலிகள் 3) Airport Authority of India 4) சதுரகராதி 5) ஸ்கோட்டோ ஃபோபியா 6) 10 லட்சம் ஆண்டுகளுக்கு மேலாகும். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 7, 2024

குடை, குடிநீர் எடுத்துவர கூறியிருந்தோம்: மா.சு

image

கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை என அமைச்சர் <<14293848>>மா.சுப்பிரமணியன்<<>> தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை காண சென்ற 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், போதுமான அளவுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்ததாகக் கூறினார். மேலும், வெயில் காரணமாக குடை, தண்ணீர் எடுத்து வருமாறு ஏற்கெனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

News October 7, 2024

பாஜகவில் இணையும் ஓபிஎஸ்?

image

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து தொடர்ந்து பேசி வந்த OPS திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியது நீக்கியது தான். மீண்டும் சேர்க்க முடியாது என EPS கூறியிருந்தார். இந்த சூழலில் டெல்லி சென்றுள்ள அவர், அமித்ஷா, J.P.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதனால், அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

News October 7, 2024

நலமுடன் இருக்கிறேன்: ரத்தன் டாடா

image

உடல் நலக் குறைவு காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறுத்துள்ளார். வயது முதிர்வு காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனைக்குச் சென்றதாக தெரிவித்த அவர், தற்போது தான் நல்ல மனநிலை & உடல்நலத்துடன் இருப்பதாகவும், இதுபோன்ற பிரச்சாரங்களை பொதுமக்களும் ஊடகங்களும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 7, 2024

ரத்தன் டாடா ஹாஸ்பிட்டலில் அட்மிட்?

image

தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பை ப்ரீச் கேண்டி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நள்ளிரவில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், மும்பை பிரீச் கேண்டி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், இது வழக்கமான செக்-அப் தான் என்றும், தான் நலமுடன் இருப்பதாகவும் டாடா தெரிவித்துள்ளார்.

News October 7, 2024

சாம்சங் ஊழியர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி

image

சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6ஆம் கட்டமாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதமாக அந்நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News October 7, 2024

தக்காளி விலை 2 மடங்கு உயர்வு

image

தக்காளி விலை 2 மடங்கு உயர்ந்துள்ளதால், குடும்ப தலைவிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த மாதம் சில்லரை விற்பனையில் தக்காளி Kg ₹40க்கு விற்கப்பட்டது. ஆனால், தற்போது வரத்து குறைந்ததால் சென்னையில் 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ₹55க்கு விற்கப்பட்ட தாக்காளி இன்று ₹110 வரை விற்பனையாகிறது. அதேபோல், ஒட்டன்சத்திரம், திருச்சி, மதுரை மார்க்கெட்டிலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

News October 7, 2024

ஜாஸ் பட்லரின் சாதனையை முறியடித்த சூர்யகுமார்

image

BAN அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில், அபாரமாக விளையாடி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது, 3 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் சர்வதேச T20 கிரிக்கெட்டில் 139 சிக்ஸரை அவர் உறுதி செய்தார். இதன் மூலம் சர்வதேச T20இல் அதிக சிக்ஸர்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ENG வீரர் ஜாஸ் பட்லரின் (137*) சாதனையை SKY முறியடித்து டாப்-5 பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்தார்.

News October 7, 2024

பறிபோன அப்பாவி உயிர்கள்.. குரல் எழுப்பிய ரத்னகுமார்

image

மெரினாவில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சினிமாவிலிருந்து முதல் ஆளாக இயக்குநர் ரத்னகுமார் குரல் கொடுத்துள்ளார். Airshow-ஐ பார்க்க வரும் கூட்டத்தின் அளவை சரியாக கணித்து இருக்க வேண்டும். இன்னமும் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்க்கும் 5 அப்பாவி உயிர்கள் பறி போயிருக்கிறது. கேளிக்கைக்கு கூட்டம் கூடவே பயம் ஏற்பட்டால், நாளை நியாயத்துக்கு எவ்வாறு கூடுவார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!