India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில், சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சஞ்சய் ராய்தான், பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உண்மைக் கண்டறியும் சோதனையில், இக்கொலையை தான் செய்யவில்லை என சஞ்சய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு இதே நாளில் தான் ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர், 250 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் காஸா மீது நடத்திவரும் தாக்குதலில் 25,000 மேற்பட்ட குழந்தைகள் உள்பட 42,000க்கு அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல், காஸா, ஈரான், யேமன், சிரியா என போர் மேகம் பரவிவரும் நிலையில் அமைதி திரும்புவது எப்போது?
இலங்கை கிரிக்கெட் டீமின் Head Coach ஆக, அந்த அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். ரிச்சர்ட்ஸ், சச்சினை அடுத்து மாஸ்டர் பிளாஸ்டர் எனும் பெயரை பெற்ற ஜெயசூர்யா, 1996 உலகக் கோப்பையை இலங்கை வெல்ல காரணமானவர். தன் அதிரடி பேட்டிங்கால், ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்திய இவர், 2026 வரை தலைமை கோச் ஆக இருப்பார். Player ஆக சாதித்தவர் coach ஆக சாதிப்பாரா?
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் பேசுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஓவியக்கலை & சமூக சேவையில் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். நகைச்சுவையுணர்வுடன் பேசும் ஆற்றல், பிரச்னைகளைத் துணிச்சலாக எதிர்கொள்ளும் குணம் கொண்ட நீங்கள் அழகுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்று நந்தி வாக்கியம் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
மெரினாவில் நேற்று நடைபெற்ற விமானப் படையின் ஏர் ஷோவுக்கு சென்ற 5 பேர் உயிரிழந்ததற்கு ஒரே காரணம் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ தான். ஏற்கனவே வெயில் சுட்டெரித்த நிலையில், கூட்டநெரிசலும் இருந்தததால் உடல் வெப்பம் அதிகரித்து அவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு பலியாகியிருக்கிறார்கள். எனவே, இதுபோன்ற கூட்டமான இடங்களுக்கு செல்கையில் போதிய அளவு தண்ணீர், குளுக்கோஸ், ஏதேனும் பழ ஜூஸ் ஆகியவற்றை எடுத்துச் செல்வது நல்லது.
மெரினா விமான சாகச நிகழ்ச்சி உயிரிழப்புகள் தொடர்பாக விரிவான அறிக்கை சமர்பிக்க டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். அவசர ஆலோசனைக் கூட்டத்தில் விரிவான விளக்கம் கேட்ட நிலையில், அறிக்கை சமர்பிக்க ஆணையிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல், வெயில் மற்றும் குடிநீர் வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர்.
2024-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மைக்ரோ RNA-ஐ கண்டுபிடித்ததற்காகவும், மரபணு ஒழுங்குமுறையில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியதற்காகவும் அவர்கள் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி லட்டுக்கு அடுத்து, சபரிமலை பிரசாதம் குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. சபரிமலையில் வழங்கப்படும் அரவண பாயாசத்தில் அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி இருந்தது கடந்தாண்டு கண்டறியப்பட்டது. 6.65 லட்சம் டப்பாக்களில் இருந்த ரூ.4.5 கோடி மதிப்புள்ள பிரசாதம், தனியாக எடுத்து வைக்கப்பட்டது. அதை உரமாக பயன்படுத்த தற்போது தேவசம் போர்டு முடிவெடுத்துள்ளது. இந்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படவில்லை.
விமானப்படையின் சாகச நிகழ்ச்சியின் போது உயிரிழந்த குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. மக்கள் அதிகளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை தேவைகளை செய்வதில், அரசு இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மெரினாவில் நேற்று நடந்த விமானப் படை சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 5 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்ததால் இந்த பிரச்னை நேரிட்டதாகவும், அடுத்த முறை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.