India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பீர் அருந்தும் போது கலோரி அதிகமான Non-Veg உணவுகள் சாப்பிடுவது நல்லதல்ல. காரமான உணவுகள் நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லையை ஏற்படுத்தலாம். Bread, Dark chocolate ஆகியவையும் நல்லதல்ல. Beer, Bread இரண்டிலும் ஈஸ்ட் அதிகம். இது செரிமானத்தை பாதிக்கும். அதிகம் உப்பு சேர்த்த உணவுகளில் Sodium அதிகம் உள்ளதால், Dehydration, BP ஏற்படலாம். மொத்தத்தில் உடல்நலத்துக்கு கேடான பீரை தவிர்ப்பது நலம் என்கின்றனர் டாக்டர்கள்.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ஐநாவின் 2024ஆம் ஆண்டுக்கான UN-AITF விருது கிடைத்துள்ளதாகவும், இத்திட்டத்தால் இதுவரை 1.80 கோடி பேர் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அமைச்சர் முதல் மருத்துவ பணியாளர்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களை கணக்கிட்டு டிசம்பருக்குள் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவ.7ஆம் தேதியை கடைசி நாளாக அறிவித்து, நாளிதழ்களில் செய்தி வெளியிட வேண்டும் என்றும், நேர்முகத் தேர்வை நவம்பர் இறுதியில் நடத்த வேண்டும் என்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். மேலும், டிசம்பர் இறுதியில் தேர்வானவர்களின் பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளார்.
தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்து வழக்கை சென்னை குடும்ப நல நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்தது. தனுஷ்-ஐய்வர்யா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி மனு செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையை அக்.19க்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் இருவரும் ஆஜராக உத்தரவிட்டார்.
சிட்னியில் இருந்து ஜப்பான் சென்ற குவாண்டாஸ் விமானத்தில் ஆபாச திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதால், பயணிகள் தர்மசங்கடமாக உணர்ந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து பயணிகளுக்கும் இப்படம் ஒளிபரப்பானது. திரையை ஆஃப் செய்யவும் முடியாததால், குழந்தைகளுடன் பயணித்த பயணிகள் அசெளகரியமாக உணர்ந்தனர். இதை சரிசெய்ய கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆன நிலையில், சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
நடிகர் ஹரிஸ் கல்யான் அடுத்ததாக, ‘லிஃப்ட்’ பட இயக்குநர் வினீத் வரபிரசாத்துடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஸ் கல்யாண் படங்களிலேயே அதிக காஸ்ட்லியாக ₹30 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்படுவதாகவும், ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயிலர் ‘பிளாஸ்ட் மோகன்’ சுனில், முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
மெரினாவில் விமானப் படை ஏர் ஷோவில்5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ஏர் ஷோவுக்கு விமானப் படை கேட்டுக்கொண்டதை விட அதிகமான வசதிகளையே செய்து கொடுத்திருந்தோம். ஆனால், நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பஸ், ரயில் பிடிக்க செல்லும் போது ஏராளமான இடர்களை அவர்கள் சந்தித்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படும்” எனக் கூறினார்.
காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவு தேவைப்படாவிட்டாலும், அவர்கள் அளித்தால் ஏற்றுக் கொள்வோம் எனக் கூறிய அவர், மாநிலத்தை பாதுகாக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்றார். மேலும், காஷ்மீர் அரசிற்கு அனைத்து அதிகாரமும் கிடைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசு பென்சன்தாரர்களை குறிவைத்து தற்போது மோசடி நடைபெற்று வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஜீவன் பிரமான் சான்றிதழின் காலக்கெடு முடிந்து விட்டதாகவும், இனி பென்சன் கிடைக்காது எனவும் கூறி வாட்ஸ்அப்பில் மோசடிக்காரர்கள் ஒரு லிங்கை அனுப்புவார்கள். அதை கிளிக் செய்ய வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தவறும்பட்சத்தில் தனிப்பட்ட விவரங்கள் திருட்டு, பண மோசடி நடைபெறலாம்.
1976-ல் விண்ணப்பித்த வேலைக்கு, 48 ஆண்டுகள் கழித்து தற்போது ஆஃபர் லெட்டர் வந்துள்ள ஷாக் சம்பவம் லண்டனில் நிகழ்ந்துள்ளது. டிசி ஹட்சன் (70) என்ற பெண், பைக் ஸ்டன்ட் கலைஞர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், நிறுவனம் அனுப்பிய ஆஃபர் லெட்டர், தபால்நிலையத்தின் டிராயருக்கு பின்னால் சிக்கியதால் இத்தனை ஆண்டுகள் தாமதமாகியுள்ளது. இந்த லெட்டருக்காக பல நாள்கள் காத்திருந்ததாக அப்பெண் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.