India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காய்கறி, பழங்களுக்காக நாம் செலுத்தும் விலையில் விவசாயிகளுக்கு 30% மட்டுமே செல்வது RBI அறிக்கையில் தெரியவந்துள்ளது. 1 கிலோவுக்கு நாம் ₹100 செலுத்தினால் விவசாயிகளுக்கு ₹30 மட்டுமே கிடைக்கிறது. மீதமுள்ள 70% பணம் இடைத்தரகர்கள், மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு செல்கிறது. தக்காளியில் 33%, உருளையில் 31%, வாழைபழத்தில் 31%, மாம்பழத்தில் 43% பணத்தை மட்டுமே விவசாயிகள் பெறுகிறார்கள்.
பூமியில் இருந்து சுமார் 3000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரம் 70 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வானில் தோன்ற உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிளேஸ் ஸ்டார், டி கரோனே போரியாலிஸ் ஆகிய பெயரில் அழைக்கப்படும் இந்த நட்சத்திரத்தை வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காண முடியும். இந்த நட்சத்திரம் அடுத்த சில நாள்களில் எப்போது வேண்டுமானாலும் வானில் தென்படலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் உலக அரங்கில் இந்தியாவை இடம்பெற செய்த தீபா கர்மாகர், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சுமார் 25 ஆண்டுகள் ஜிம்னாஸ்டிக்கில் கலக்கிய தீபா, WC தங்கம், Asiad, Commonwealth போட்டிகளில் வெண்கலம், 2016 ஒலிம்பிக்கில் முதல் முறையாக Final-க்குள் நுழைந்த இந்தியர் என பலமுறை நாட்டுக்கு பெருமை சேர்த்தார். தீபா கர்மாகர் ஓய்வு பெறுவது இந்திய ஜிம்னாஸ்டிக்குக்கு பேரிழப்பாகும்.
சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அண்மையில் சென்னை கமிஷனராக பொறுப்பேற்ற அருண், “ரவுடிகளுக்கு அவர்களுக்கு புரிகிற மொழியில் பாடம் எடுக்கப்படும்” என நிருபர்களிடம் கூறினார். அவரது பேச்சு மனித உரிமையை மீறும் வகையில் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவரது பேச்சுக்கு அர்த்தம் கேட்டு 14-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ரயில்வேயில் காலியாக உள்ள 25,000க்கும் அதிகமான பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Assistant Loco Pilot பணிக்கு நவ. 25 முதல் 29 வரை தேர்வு நடைபெற உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையில் SI பதவிக்கான தேர்வு டிசம்பர் 2 முதல் 5ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதேபோல், ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட பணிகளுக்கு டிசம்பர் 6-13 வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம மக்களிடம் வித்தியாசமான நடைமுறைகள் இருப்பது வழக்கம்தான். பீகாரில், திரிலோகி பிகா என்ற கிராம மக்கள் மது, இறைச்சியை தொடுவது கூட கிடையாது. அதுமட்டுமின்றி, அக்கிராமத்தில் உள்ள வயதானவர்கள் பூண்டு, வெங்காயம் கூட சாப்பிடாமல் இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக அங்குள்ள இளைஞர்களும் இப்பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். மீறினால் கிராமத்தில் கெட்ட விஷயம் நடக்கும் என்பது அவர்கள் ஐதீகம்.
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வரும் 9, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோயில், கன்னியாகுமரி, தூத்துக்குடிக்கு 1105 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருக்கு 300 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 110 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
போதைப் பொருள்களின் தலைநகர் குஜராத் பற்றி ஆளுநர் ஏன் வாய் திறப்பதில்லை என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா முழுவதும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் பாஜகவினர் சிக்கியிருப்பதாகவும், தமிழகத்தில் அப்படிப்பட்ட 16 பேரை பாஜகவில் இணைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, கஞ்சா அல்லாத போதைப் பொருள்களை தமிழகத்தில் மத்திய அரசின் அமைப்புகளே கைப்பற்றுவதாக ஆளுநர் பேசியிருந்தார்.
மெரினாவில் விமானப் படை ஏர் ஷோ நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது, அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலை என சீமான் விமர்சித்துள்ளார். மேலும், ஒக்கி புயலால் நடுக்கடலில் என் மீனவர்கள் தத்தளிக்கும் போது வராத வான்படை விமானங்கள், குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கியவர்களுக்காக வராத வான்படை விமானங்கள், இப்போது கடற்கரையில் சாகசம் காட்டுவதால் தமிழினத்திற்கு கிடைக்க போகும் நன்மை என்ன” என வினவினார்.
வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் வைட்டமின்கள் A, C & K போன்ற கனிமச் சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது. வெண்டைக்காயில் உள்ள நார்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் தாதுக்கள் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.