India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*உங்களுக்காக எதுவும் செய்ய முடியாதவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதன் மூலம் உங்களின் உண்மையான குணம் மிகவும் துல்லியமாக அளவிடப்படுகிறது.
*நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், வீட்டிற்குச் சென்று உங்கள் குடும்பத்தை நேசியுங்கள்.
*அன்பு என்பது எல்லாப் பருவத்திலும் கிடைக்கும் ஒரு பழம், மேலும் எல்லோர் கைகளுக்கும் எட்டும் தூரத்தில் தான் உள்ளது.
உலகளவில் போர் நடைபெற்று வருவதால் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இதற்கு முன்பு 27 நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட நிலையில், தற்போது 39 நிறுவனங்கள் மூலம் பெறப்படுவதால் கச்சா எண்ணெய் தேவையை விட அதிகமாகவே கிடைக்கிறது. உலக சந்தையில் புதிய நிறுவனங்களின் வருகையால், சர்வதேச அளவில் பற்றாக்குறை இல்லை என்றார்.
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, வேலூர், நாமக்கல், சேலம், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என கணித்துள்ளது.
அக் 5ஆம் தேதி ஹரியானாவில் ஒரே கட்டமாக நடைபெற்ற 90 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. வேலை வாய்ப்பின்மை, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை எனப் பல பிரச்னைகளால் 10 ஆண்டுக்கால ஆட்சி அதிகாரத்தில் இருந்த பா.ஜ.க மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் காங்.க்கு சாதகமாக இருப்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: அன்புடைமை. ▶குறள் எண்: 76
▶ குறள்: அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.
▶பொருள்: அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்: ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
▶அக்.8 (புரட்டாசி 22) ▶செவ்வாய்▶நல்ல நேரம்: 8:00 – 9:00 AM & 4:45 – 5:45 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶ எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶ குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: சஷ்டி ▶ பிறை: வளர்பிறை ▶ சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: வடக்கு ▶ பரிகாரம்: பால் ▶ சந்திராஷ்டமம்: பரணி ▶ நட்சத்திரம்: அனுஷம் அ.கா 12.34 ▶யோகம்: சித்த-அமிர்த யோகம்.
வேல்ஸ் நிறுவனம் அடுத்து தயாரிக்கப்போகும் படத்திற்கு ‘அகத்தியா’ என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் பா.விஜய் இயக்கவுள்ள இப்படத்தில் ஜீவா, அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. Title& First look எப்படி உள்ளது?
இன்று (அக்.08) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (அக்.08) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ஐசிசி மகளிர் டி20 போட்டியில் இங்கி., அணிக்கு எதிரான போட்டியில் தென்.ஆப்ரிக்கா அணி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த தென்.ஆப்ரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 124/6 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கி. அணி வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி 19.2 ஓவர்களில் 125/5 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கி. அணி குரூப் பி பிரிவில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.