India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காங்., முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 63 இடங்களுக்கு முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. இதில், காங்., 42 இடங்களிலும், பாஜக 16 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அதேபோல், ஜம்மு காஷ்மீரில் காங்., கூட்டணி 43, பாஜக கூட்டணி 17, பிற கட்சிகள் 13 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட யோகேஷ் குமார், பின்னடவை சந்தித்துள்ளார். வினேஷ் முன்னிலை பெற்றதை காங்கிரஸ் தொண்டர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
24H யூரோப் சீரிஸ் கார் ரேஸில் பங்கேற்கவுள்ள அஜித்துக்கு ஷாலினி வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜித் சமீபத்தில் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற புதிய கார் ரேஸ் அணியை தொடங்கினார். இந்நிலையில், 24H யூரோப் சீரிஸில் இந்த அணி பங்கேற்கவுள்ளது. இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ஷாலினி, தங்களுக்கு விருப்பமான கார் ரேஸராக உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி, வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலேயே பாஜகவை பின்னுக்குத்தள்ளி காங்., முன்னிலை பெற்று வருகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் காங்., 11 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அதேபோல், ஹரியானாவில் காங்., 18 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், மற்றவை 2 முன்னிலை பெற்றுள்ளன.
ஜம்மு – காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதை தொடர்ந்து இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஜம்மு – காஷ்மீரில் 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 63.88% வாக்குகள் பதிவானது. ஹரியானாவில் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 67.90% வாக்குகள் பதிவானது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை திமுக தலைமை நியமித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்பார்வையிட உள்ளனர். மேலும், கூட்டணி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பணி செய்யவும், சரியாக செயல்படவில்லை என்றால் கட்சி பதவி பறிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதாம்.
‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து நீக்கியதே தனக்கு தெரியாது என TTF வாசன் தெரிவித்துள்ளார். ஷூட்டிங்கிற்கு ஒத்துழைப்பு தரவில்லை என தன்னை நீக்கியதாக இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை போட்டோஷூட் மட்டுமே நடந்திருப்பதாகவும், அதற்கு கூட தானே பணம் செலவு செய்ததாகவும் TTF கூறியுள்ளார். மேலும், பணம் கூட வேண்டாம், நீக்கியதற்கான காரணத்தை மட்டும் கூறுங்கள் என இயக்குநரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. செப்.28ஆம் தேதி 5ஆவது முறையாக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. இதில் 3 பேர் விடுவிக்கப்பட்டு, 4 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 6 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கவும், திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் காலை 11 மணிக்கு அமைச்சரவை கூடுகிறது.
சீமான் மீது சரமாரியாக குற்றச்சாட்டை முன்வைத்து, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், நாதகவில் இருந்து விலகியுள்ளார். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை. 2026 தேர்தலுக்கு இப்போதே வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், கட்சி நிர்வாகிகளுக்கு சீமான் உரிய மரியாதை தரவில்லை எனவும் சாடியுள்ளார்.
திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணியளவில் நடைபெறும் இப்போராட்டத்தில், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்பார்கள் என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.