India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹரியானாவில் காங்., ஆட்சியைப் பிடிக்கும்; ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், ஹரியானாவில் பாஜக 44, காங்., 40 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீரில் காங்., கூட்டணி 49, பாஜக 22, மற்றவை 19 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதன் மூலம் கருத்துக்கணிப்பு பொய்த்து போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினருடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் சி.வி.கணேசன், த.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் தொழிலாளர்களின் பிரதிநிதி குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், CITU சங்க நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லாததால், அந்த தொழிற்சங்கம் மட்டும் வேலைநிறுத்தத்தை தொடர்கிறது.
வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதற்கு கம்பீரின் சிறப்பான திட்டமிடலே காரணம் என பலரும் பாராட்டினர். ஆனால் சுனில் கவாஸ்கர் இதை கடுமையாக விமர்சித்துள்ளார். ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். BAN-க்கு எதிரான கான்பூர் டெஸ்ட் வெற்றிக்கு ஷர்மாவே காரணம் எனவும் கூறியுள்ளார்.
ஹரியானாவில் காலையிலிருந்து காங்., 70 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்த நிலையில், திடீர் திருப்பமாக பாஜக முன்னேறி வருகிறது. 25 இடங்களில் முன்னிலை வகித்து வந்த பாஜக, தற்போதைய நிலவரப்படி 44 இடங்களிலும், காங்., 41 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. முன்னிலையில் இருந்த 30 இடங்களுக்கு மேல் காங்., பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால், கடும் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது.
ஜம்மு & காஷ்மீரில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் (கந்தர்பால், பட்காம்) உமர் அப்துல்லா முன்னிலை வகிக்கிறார். அவரது தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இவர்களது கூட்டணியே அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன. அதை மெய்ப்பிக்கும் வகையில், 55 தொகுதிகளில் இக்கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.
தேங்காய் சுவைக்கானது மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை தருவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது செரிமானத்தை சீராக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், முடி மற்றும் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், இதயத்தை பாதுகாக்கும், ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும் என்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீரில் காங்., மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை. தற்போது காங்., 52 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 24 இடங்களிலும், தனித்து போட்டியிட்ட மெகபூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
டாடா குழுமத்தின் ‘TATA PLAY’ நிறுவனத்தை ஏர்டெல் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. OTT-களின் வரவால் இந்த DTH நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், ஏர்டெல் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக இரு நிறுவனங்களுக்கு இடையே இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஜியோவிற்கு போட்டியாக TATA PLAY-ஐ களமிறக்க ஏர்டெல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் சில மணி நேரங்களில் வெளியாக உள்ளன. 1,031 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், குறிப்பிட்ட இருவரின் முடிவுகளுக்காக நாடே எதிர்பார்ப்பில் உள்ளது. காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் களம் காண்கிறார். இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் தீபக் ஹூடா, பாஜக சார்பில் மேஹம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஜம்மு – காஷ்மீரில் நியமன MLA விவகாரம் சூடுபிடித்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில், தொங்கு சட்டப்பேரவை அமைவதற்கான வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் 5 MLAகளை நியமனம் செய்ய துணை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இதனால், பாஜகவுக்கு சாதகமான சூழல் நிலவுவதால், மக்களின் ஆணையை நீர்த்து போகும் வகையில் ஆளுநரின் அதிகாரம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
Sorry, no posts matched your criteria.