India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 1975-ல் தொடங்கிவிட்டாலும் அவை 60 ஓவர் போட்டிகளாக தான் இருந்தன. 1983-ல் இந்தியா கோப்பையை வென்றபோதும் 60 ஓவர் போட்டியாக தான் இருந்தது. 1987-ல் இந்தியா – பாகிஸ்தான் இணைந்து நடத்திய ரிலையன்ஸ் உலகக் கோப்பையில் தான் 50 ஓவர் முறை அறிமுகமானது. அந்த ஆண்டு Oct 08 முதல் Nov 08 வரை நடந்த அந்த உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது.
70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம், சுபாஷ்கரன், KGF படத்திற்காக ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு சகோதரர்கள், திருச்சிற்றம்பலம் படத்திற்காக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதைப் பெற்றனர். சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனன் பெற்றுக்கொண்டார்.
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வெற்றி பறிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கூறிய அவர், தேர்தல் தொடர்பான அனைத்து புகார்களையும் திரட்டி தேர்தல் ஆணையத்திடம் அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை ஆற்காடு சாலையில் உள்ள ₹50 கோடி மதிப்பிலான தனது சொந்த நிலத்தை நடிகர் கவுண்டமணி 20 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி மீட்டுள்ளார். கடந்த 1996ல் கவுண்டமணி இந்த நிலத்தை வாங்கிய நிலையில், வணிக வளாகம் கட்ட தனியார் நிறுவனம் அந்த நிலத்தை கையகப்படுத்த முயன்றது. உச்சநீதிமன்றம் வரை சென்று கவுண்டமணி நிலத்தை மீட்டதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கிறது. மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களைக் கைப்பற்றியது. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி தற்போது தேசிய மாநாட்டு கட்சி 40 இடங்களிலும், காங்., 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 2 இடங்களில் NC முன்னிலை வகிக்கிறது. பாஜகவுக்கு 27 இடங்களும், பிடிபிக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளன.
2019 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் கிங் மேக்கராக ஜொலித்த ஜேஜேபி கட்சியால் இந்த தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான மாநில கட்சியான JJP, கடந்த தேர்தலில் 14.80% வாக்குகளுடன் 10 இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைப்பதற்கு உதவியது. இதையடுத்து துஷ்யந்த் Dy CM ஆக பதவி பெற்றார். ஆனால் இந்த தேர்தலில் JJP ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
ஹரியானாவில் காங்., பின்னடைவுக்கு முதல்வர் நாற்காலிக்காக பூபிந்தர் ஹூடாவுக்கும், குமாரி சைலஜாவுக்கும் இடையே நடந்த பனிப்போரே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஜாட்களின் வாக்குகளில் கவனம் செலுத்தியதன் மூலம், ஜாட் அல்லாதவர்களை இழந்தது. பாஜகவை விட அதிக ஓட்டுகள் பெற்றாலும், அதிக இடங்களில் வெல்ல முடியவில்லை. பாஜகவின் திரைமறைவு யுக்திகள். நகர்ப்புற வாக்காளர்களை கவர முடியாமல் போனது காங்கிரஸை பாதித்தது.
அக்டோபர் 15ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் எனக் குறிப்பிட்ட அவர், முன்னெச்சரிக்கையாக சென்னையில் 100, பிற மாவட்டங்களில் 900 இடங்களில் முகாம் நடத்தப்படும் என்றார். மேலும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
2024ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஜான் ஜெ.ஹாப்ஃபீல்ட், கனடாவின் ஜாஃப்ரே இ.ஹிண்டனுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலை.,யின் ஆராய்ச்சியாளராகவும், ஜாஃப்ரே கனடாவில் உள்ள டொரான்டோ பல்கலை.,யின் ஆராய்ச்சியாளராகவும் உள்ளனர்.
RSS பேரணியை தொடங்கி வைத்ததால், அதிமுக MLA தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பதவிகளை EPS பறித்தார். இந்நிலையில், என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை. நீக்கப்பட்டுவிட்டால் ஓகே ரைட் என சொல்ல வேண்டியது தான் என அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே, பாஜகவில் ஐக்கியமாக உள்ளதாக செய்திகள் வெளியானது. தற்போது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதால், அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.