India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜம்மு- காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் மிகச் சிறப்பானது என்று தெரிவித்து இருக்கிறார் பிரதமர் மோடி. சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35(A) ரத்துசெய்யப்பட்ட பின் நடந்த முதல் தேர்தலில் மக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனர். இது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இதற்காக ஜம்மு- காஷ்மீரிகள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன் என்று மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான டி20 தொடருக்குப் பின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச கிரிக்கெட் வீரர் மஹ்முதுல்லா தெரிவித்துள்ளார். இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் உட்பட 2,914 ரன்களும், 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 28 அரை சதங்கள் உட்பட 5,386 ரன்களும் எடுத்துள்ளார். வரும் 12ம் தேதி நடைபெறும் INDvsBAN டி20 போட்டி இவரது கடைசி போட்டியாகும்.
தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், கரூர், மதுரை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங் மாணவர்களுக்கான GATE தேர்வுக்கு பதிவு செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி Oct 03 என்று இருந்த நிலையில், தற்போது Oct 11 வரை late fee உடன் விண்ணப்பம் பதிவு செய்யலாம். Engg மாணவர்கள் IISC, IIIT, NIT உள்ளிட்ட மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ME,M.Tech மற்றும் நேரடியாக PhD படிப்புகளில் சேர GATE தேர்ச்சி உதவும். விண்ணப்பிக்க முகவரி: gate2025.iitr.ac.in.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி தற்போது 5ஆவதாக ஒரு மாநிலத்தில் கால்பதித்துள்ளது. டெல்லி, பஞ்சாப்பை தன்வசப்படுத்தி, கோவா, குஜராத்தில் MLAக்களை உருவாக்கிய AAP, தற்போது J&Kவில் முத்திரை பதித்துள்ளது. தோடா தொகுதியில் போட்டியிட்ட AAP வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் 5000+ வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதன் மூலம் தேசிய அரசியலில் தனித்தடத்தை AAP உருவாக்குவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஹரியானா தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் என காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டு தவறானது என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சிக்கு ECI அனுப்பிய கடிதத்தில், பொறுப்பற்ற, ஆதாரமற்ற மற்றும் உறுதிப்படுத்தப்படாத தவறான குற்றச்சாட்டுகளுக்கு, மறைமுகமாக நம்பகத்தன்மையை வழங்குவதற்கான உங்கள் முயற்சியை சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா ராஜினாமா செய்துள்ளார். மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில், பெரும்பான்மை இடங்களை (49) காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ரவீந்தர் ரெய்னா தெரிவித்துள்ளார். BJP-29, PDP-3, OTH-9 இடங்களை பிடித்துள்ளன.
ஹரியானாவில் BJP ஆட்சி உறுதியாகிவிட்டது. கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கிய இத்தேர்தல் முடிவில், மற்றொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. தேசிய கட்சிகளுக்கே ஹரியானா வாக்காளர்கள் ஆதரவளித்துள்ளனர். பதிவான வாக்குகளில் 80%க்கு மேல் BJP, Cong., கட்சிகளுக்கே சென்றுள்ளது. JJP உள்ளிட்ட எந்த மாநில கட்சிக்கும் ஆதரவில்லை. உள்ளூர் தலைவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லையா.. மோடி, ராகுல் முகங்கள் மக்களை ஈர்க்கிறதா?
டெல்லியில் இன்று நடைபெற்ற 70வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் AR ரஹ்மான் ‘பொன்னியின் செல்வன்-1’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றார். இது அவர் பெறும் 7வது தேசிய விருது ஆகும். இதற்கு முன்னதாக ரோஜா, மின்சார கனவு, லகான் (ஹிந்தி), கன்னத்தில் முத்தமிட்டாள், மாம் (ஹிந்தி), காற்று வெளியிடை ஆகிய படங்களுக்காக தேசிய விருது வென்றுள்ளார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி, மரம் வெட்டும் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இயங்கும் நிலையில் இருக்க வேண்டும் என செந்தில் பாலாஜி உத்தரவிட்டார். JCB, கிரேன் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களின் தொலைபேசி எண்களை வைத்துக் கொள்ளவும், மின்சார பணி தொடர்பான தகவல்களை பரிமாற்றிக்கொள்ள வாக்கி டாக்கிகளை கொள்முதல் செய்யவும், மிக தாழ்வாக செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் அறுந்து விழுவதை தடுக்கவும் அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.