India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
◙மேஷம் – பிரயாணம்
◙ரிஷபம் – செலவு
◙மிதுனம் – அமைதி
◙கடகம் – சிந்தனை
◙சிம்மம் – பாராட்டு
◙கன்னி – நன்மை
◙துலாம் – சோதனை
◙விருச்சிகம் – ஆக்கம்
◙துனுசு – சாதனை ◙மகரம் – பேராசை
◙கும்பம் – நஷ்டம் ◙மீனம் – சாந்தம்
2050-க்குள், ஆண் – பெண் உறவை விட, Robots உடனான sex சாதாரண ஒன்றாக மாறிவிடும் என Futurologist இயான் பியர்சன் கணித்துள்ளார். Robotics, AI இணைத்து உருவாக்கப்படும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் sex robotகள், 2025-க்குள் பணக்கார வீடுகளில் வரத் தொடங்கிவிடும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளில் பெண்கள் sex-க்கு ஆண்களை தவிர்த்து, Robots-ஐ விரும்பும் நிலை ஏற்படும் என்கிறார். இது மனிதகுலத்துக்கு நல்ல அறிகுறியா?
இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் கடந்த 2022ல் நடைபெற்றது. அப்போதே அவர்களது திருமண நிகழ்வை ஓடிடிக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியானது. கடந்த 2 வருடங்களாக இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், விரைவில் இந்த திருமண வீடியோவை வெளியிட உள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது. ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடக்கூடிய டாகுமெண்டரி படமாக வெளியாக உள்ளது.
சர்வதேச T20 போட்டிகளில் அதிக வீரர்களை அறிமுகப்படுத்திய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இதுவரை பாகிஸ்தான் 116 வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்தியா 117 வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான T20 போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் அறிமுகமானபோது இந்தியா இந்த சாதனையை படைத்தது. AUS 111, SL 108, SA 107, ENG 104, NZ 103 வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களின், முதல் பருவம் மற்றும் காலாண்டு தேர்வு மதிப்பெண் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்ற அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், OCT 15க்குள் இது தொடர்பான அனைத்து பணிகளை செய்து முடிக்கவும், 6-8ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களிடம் எடுத்துரைத்து பணிகளை துரித்தப்படுத்துமாறும் HMகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பிரிவில் காலியாக உள்ள 11,558 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு அக்.20 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுநிலை அலுவலர் பிரிவில் 8,113 இடங்களும், இளநிலை அலுவலர் பிரிவில் 3,445 இடங்களும் நிரப்படவுள்ளன. +2 தேர்ச்சி பெற்றவர்கள், டிகிரி முடித்தவர்கள் <
அக்டோபர் 11ஆம் தேதி 4 படங்கள் OTTயில் வெளியாக உள்ளன. சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மாரி செல்வராஜின் ‘வாழை’, ‘சூரரைப் போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ ஆகிய படங்கள் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும், விதார்த் நடிப்பில் வெளியான ‘லாந்தர்’ படம் ஆஹா OTT தளத்திலும், யாஷிகா ஆனந்தின் ‘படிக்காத பக்கங்கள்’ சிம்பிலி சவுத் தளத்திலும் வெளியாகிறது. இதில் உங்கள் சாய்ஸ் எந்த படம்?
ஹரியானாவில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை வழங்கிய மக்களுக்கு PM மோடி நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து Xஇல் பதிவிட்டுள்ள அவர், நல்லாட்சி அரசியலுக்கு கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், BJPயின் வளர்ச்சித் திட்டங்களை மக்கள் அறிந்ததன் விளைவுதான் இந்த வரலாற்று வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார். ஹரியானாவில் BJP, தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
OCT 11, 12, 13 ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் ஞாயிறு விடுமுறையையொட்டி நாளை, நாளை மறுநாள் TNSTC சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சொந்த ஊர் செல்வோர் <
ஹரியானா தேர்தலில் காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு Dy CM உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாசிச சக்திகளுக்கு எதிராக அவரது பணி தொடரட்டும் எனக் கூறியவர், மக்களுக்கான பிரதிநிதியாக இந்த புதிய அத்தியாயத்தில் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ், பாஜக வேட்பாளரை விட 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
Sorry, no posts matched your criteria.