India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் வழக்கமான அரசு பஸ்களை தவிர 1,715 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணிக்க கடந்த இரண்டே நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரிசர்வ் செய்துவிட்டனர். ரயில்களிலும் ஏறக்குறைய முன்பதிவு முடிந்துவிட்டது. இந்நிலையில், ஆயுத பூஜை, தீபாவளிக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 44 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே விட்டுள்ளது.
காசி, காஞ்சி உள்ளிட்ட 7 மோட்சபுரிகளுக்குச் சென்று வழிபட்ட புண்ணியத்தை ஒருங்கே அருளும் இடம் புதுக்கோட்டை அடுத்துள்ள திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயிலாகும். காசிமன்னனின் பூர்வஜென்ம பாவத்தை போக்கிய இந்த திருத்தலத்திற்கு பாண்டியர்கள் கற்றளி கோவில் எழுப்பித்தந்ததாக வரலாறு. இங்குச் சென்று இறைவனை வணங்கி, பிரசாதமாக வழங்கும் பஞ்சாமிர்தத்தை உண்டால், தீராத நோய்களும் தீரும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காங்கிரஸ் கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் இருவரை நேற்று இரவு தீவிரவாதிகள் கடத்தினர். இதில் ஒருவர் தப்பி வந்த நிலையில், மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் இன்றும், நாளையும் கனமழை வெளுத்து வாங்க போகிறது. கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நேற்று ஒட்டுகள் எண்ணப்பட்டு தலைமை தேர்தல் கமிஷன் முடிவுகளை அறிவித்தது. இதன்படி, இந்த இரண்டு சட்டசபை தேர்தல்களிலும் வாக்காளர்கள் பலர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் ‘நோட்டா’வுக்கு வாக்களித்தது தெரியவந்துள்ளது. ஹரியானாவில் 0.38% பேரும், ஜம்மு-காஷ்மீரில் 1.48% பேரும் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
ஆயுத பூஜை விடுமுறை 11, 12, 13 ஆகிய தேதிகளில் வருகிறது. இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1,715 சிறப்பு பஸ்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதவிர, வழக்கமான அரசு பஸ்களும் உள்ளன. இந்நிலையில், அரசு பஸ்களில் இன்று (அக்.9) பயணிக்க 13 ஆயிரம் பேர், நாளை பயணிக்க 17 ஆயிரம் பேர் என மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரிசர்வ் செய்துள்ளதாக SETC தெரிவித்துள்ளது. நீங்கள் ரிசர்வ் செய்து விட்டீர்களா?
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட் காத்து கொண்டிருக்கிறது. ஆம் இந்திய
ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியினர் முறையே வங்க., மற்றும் இலங்கை அணியை எதிர்கொள்கின்றன. முதல் போட்டியில் வங்க., அணியை வீழ்த்திய இந்தியா அணி இன்று வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். அதேபோல் பெண்கள் அணியினர் இன்று வென்றால் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது. சாதிப்பார்களா இந்திய சிங்கப்பெண்கள்?
உள்நாட்டு போராட்டங்களால் பதவியில் இருந்து விலகி, நாட்டை விட்டு தப்பிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என அந்நாட்டு இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் தொஹித் ஹொசைன் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஐக்கிய அமீர அரசிடம் இதுகுறித்து கேட்டதாகவும், உரிய பதில்கள் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
1941 – பனாமாவில் நடைபெற்ற ராணுவப் புரட்சிக்கு பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அரசுத் தலைவரானார்.
1967 – பொலிவியாவில் அக்.8 கைது செய்யப்பட்ட சே.குவேரா இன்று(அக்.9) புரட்சியைத் தூண்டியதாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
1981 – பிரான்ஸில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.
2001 – இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
2004 – ஆப்கானித்தானில் முதல்முறையாக பொதுத் தேர்தல் நடைபெற்றது.
ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தலில், டோடா தொகுதியில் வென்று, வெற்றிக் கணக்கை துவங்கிய ஆம் ஆத்மி கட்சி, கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமான ஹரியானாவில் கோட்டைவிட்டது. மாநிலம் முழுவதும் கெஜ்ரிவால் பிரசாரம் செய்தும், ஆம் ஆத்மி கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதற்கு காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டில் ஒத்துப் போகாததே அக்கட்சி தோல்விக்கு காரணம் என, கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.