India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*காலிபிளவர், கோஸ் வேக வைக்கும்போது வரும் ஒருவித வாசனையைத் தடுக்க எலுமிச்சம் பழச்சாறு அல்லது இஞ்சி சேர்த்து வேக வைக்கலாம். * கோதுமை மாவில் கொஞ்சம் வேர்க்கடலை மாவை கலந்து பூரி, சப்பாத்தி செய்தால் ருசியாக இருக்கும். *வெண்ணெய் காய்ச்சி இறக்கியதும் அதில் சிறிது வெந்தயத்தை போட்டு வைத்தால் நெய் வாசனையாக இருக்கும். * கீரையை சிறிது சர்க்கரை கலந்த நீரில் ஊறவைத்து பிறகு சமைத்தால் ருசி கூடுதலாக இருக்கும்.
சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதையும், அதை விசிக நிர்வாகி வீடியோ எடுத்த சம்பவமும் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக தலைவர் எச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை. கோயில் கருவறையில் விளையாடினால்தான் தவறு” எனக் கூறியுள்ளார்.
சாம்சங் ஊழியர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் CITU சார்பில் அவரச முறையீடு செய்யப்பட்டுள்ளது. CITU சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்ட சாம்சங் போராட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதால் காணவில்லை என்ற நிலையில் ஆட்கொணர்வு வழக்காக விசாரிக்க CITU கோரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மின்வாரிய உயரதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பருவமழை மிக தீவிரமாக இருக்கும் என்பதால் EB ஊழியர்கள் மும்முரமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய அவர், எக்காரணம் கொண்டும் EB அதிகாரிகள் தங்கள் செல்போனை அணைக்கக் கூடாது என உத்தரவிட்டார். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
வருமான வரி சட்டங்களில் இடம்பெற வேண்டிய திருத்தங்கள் குறித்து, மக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கையில், வருமான வரி சட்டத்தில் இடம்பெற வேண்டிய திருத்தங்கள், மொழி எளிமைப்படுத்தல், காலாவதியான விதிகள் உள்ளிட்ட 4 பிரிவுகளுக்கான பரிந்துரைகளை IT இ-போர்ட்டலில், தங்கள் பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரோவில் HSFC மையத்தில் நிரப்பப்படவுள்ள 103 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. மருத்துவ அதிகாரி, டெக்னீஷியன், வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பியுங்கள். கல்வித்தகுதி: ITI, MBBS, M.E, M.Tech, B.Sc. சம்பளம் வரம்பு: ₹21,700 – ₹2,08,700. வயது: 18-35. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு & நேர்காணல். கூடுதல் தகவலுக்கு <
கடந்த பல நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று (அக்.9) அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. 22 கேரட் கொண்ட ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.56,240ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து, ரூ.7,030-க்கு விற்கப்படுகிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2,000 சரிந்து ரூ.1,00,000-ஆக உள்ளது.
பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துக்கள் சிறுநீரகம், மண்ணீரல், கணைய நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது. இரும்பு சத்து முடி உதிர்வையும், கால்சியம் எலும்புருக்கி நோயையும் கட்டுப்படுத்துகிறது. நார்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது. வைட்டமின்-சி ஊட்டம் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ), 2 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்டும். ஆனால், கடந்த 10 முறை இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, இப்போதாவது வட்டி குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இம்முறையும் ரெப்போ வட்டி 6.5 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால் வீடு, வாகன கடன் கட்டுவோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஹரியானா தேர்தலில் காங்., சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றார். எனினும், அங்கு காங்., தோல்வி அடைந்தது. இதுகுறித்து பாஜக தலைவர் பிரிஜ் பூஷன் சிங் கூறுகையில், “என் பெயரை பயன்படுத்தி வினேஷ் வென்றுள்ளார். அப்படியென்றால் நான்தானே பெரிய மனிதன். இனி வினேஷுக்கு அழிவு ஆரம்பம்” என்றார். வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை அளிப்பதாக கூறி போராட்டம் நடத்தியவர் வினேஷ்.
Sorry, no posts matched your criteria.