News October 9, 2024

பிரபல நடிகர் காலமானார்

image

பழம்பெரும் மலையாள நடிகர் டி.பி.மாதவன் இன்று காலமானார். வயது முதுமை காரணமாக கொல்லத்தில் தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பன்முக கதாபாத்திரங்களுக்கு பெயர் பெற்ற மாதவன் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக 2016ல் வெளியான ‘மால்குடி டேஸ்’ படத்தில் நடித்திருந்தார்.

News October 9, 2024

விமர்சனங்களுக்கு நெப்போலியன் மகன் பதிலடி!

image

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருக்கிறது. இதனிடையே, அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. ஆனால், இதுதொடர்பாக பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள தனுஷ், “நிறைய பேர் அதை செய்ய முடியாது இதை செய்ய முடியாது என்கிறார்கள். அப்படி பேசியவர்களிடம் நான் ப்ரூஃப் செய்து வென்று காட்டுகிறேன். பிறகு பேசுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

News October 9, 2024

சாம்பியன்ஸ் டிராபி final துபாயில் நடக்க வாய்ப்பு

image

‘சாம்பியன்ஸ் டிராபி 2025’ தொடரின் final போட்டி பாகிஸ்தானின் லாகூரில் இருந்து துபாய்க்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது. பாகிஸ்தானுக்கு செல்ல மறுக்கும் இந்திய அணி லீக் போட்டிகளையும் துபாயில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், final-க்கு இந்தியா தகுதிபெற்றால், அப்போட்டி துபாய்க்கு மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் இந்திய ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

News October 9, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு GK வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) தோராயமாக 1,68,000 ஏரிகள் 2) கரடி 3) International Organisation For Standardisation 4) ஐஸ் லார்க்சர் 5) கேரம் 6) பாதரசம் 7) சிவப்பு. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கும் பகிருங்கள்.இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 9, 2024

‘வேட்டையன்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி

image

ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில்
உருவாகியுள்ள ‘வேட்டையன்’ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. அக்.10, 11ஆம் தேதிகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நாளை ஒருநாள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சி உட்பட 5 காட்சிகளை திரையிடலாம். ஆனால், நள்ளிரவு 2 மணிக்குள் கடைசி காட்சியை முடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

News October 9, 2024

கூச்சமே இல்லாமல் பேசுகிறார் மா.சு: DJ தாக்கு

image

மெரினா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் ஆவேசமாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், “வான் சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்களுக்கு குடிநீர், ஆம்புலன்ஸ் என எந்த வசதியும் அரசு செய்து தரவில்லை. அடிப்படை வசதிகளுக்கு 5 கோடி செலவு செய்ய முடியாதா? தங்கள் மீதான தவறை உணராமல் கூச்சமே இல்லாமல் பேசுகிறார் மா. சுப்பிரமணியன். அடிப்படை வசதி இருந்ததற்கான வீடியோ ஆதாரம் காட்ட முடியுமா” எனக் கேள்வியெழுப்பினார்.

News October 9, 2024

JOBS: 2,000 பணியிடம்; 10, +2 pass போதும்

image

TN முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் உள்ள விற்பனையாளர், கட்டுநர் பதவிகளுக்கான 2,000 Vacancies நிரப்பப்பட உள்ளன. அந்தந்த மாவட்ட கூட்டுறவு துறையின் ஆள்சேர்ப்பு நிலையங்களின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகின்றன. விற்பனையாளர் பணிக்கு 12th Pass, கட்டுநர் பணிக்கு 10th Pass போதுமானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: Nov.07 (5:45 pm வரை)

News October 9, 2024

OTT-ல் வெளியாகும் நயன் – விக்கி WEDDING VIDEO

image

தீபாவளியை முன்னிட்டு நட்சத்திர தம்பதி நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 1.30 மணிநேரம் காட்சிப்படுத்தப்பட்ட இந்நிகழ்வில் திருமணத்திற்கு வந்த பிரமுகர்களின் வாழ்த்து, பேட்டி உள்ளிட்ட பிரத்யேக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் கடந்த 2022 ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது.

News October 9, 2024

ஆங்கிலம் அறிவோம்: Plait Vs Plate

image

Plait என்பதற்கும் Plate என்பதற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? பெண்கள் தங்கள் கூந்தலைப் பிரித்து முறுக்கி, சடைப் பின்னிக்கொள்வார்கள். அந்த ஒவ்வொரு பிரிவும் Plait எனப்படும். Plate என்றால் பரந்த, குழிவுடன் காணப்படும் உணவு உண்ணும் தட்டைக் குறிக்கும். Pleit என்ற பிரெஞ்ச் வார்த்தையில் இருந்து Plait என்பதும், Platus என்ற கிரேக்க சொல்லில் இருந்து Plate என்பதும் உருவானதாக சொற்பிறப்பியல் அகராதி கூறுகிறது.

News October 9, 2024

தமிழ்நாட்டு ஊர்களும் சிறப்புப் பொருட்களும்

image

➤மாமல்லபுரம் – கற்சிலைகள் ➤மணப்பாறை – முறுக்கு ➤திண்டுக்கல் – பூட்டு ➤ஆம்பூர் – பிரியாணி ➤கும்பகோணம் – பாக்குச்சீவல் ➤ மார்த்தாண்டம் – தேன் ➤ஊத்துக்குளி – வெண்ணெய் ➤பவானி – ஜமுக்காளம் ➤சிறுமலை – மலைவாழை ➤உடன்குடி – கருப்பட்டி ➤பத்தமடை – பாய் ➤தேனி – கரும்பு ➤ஆரணி – பட்டு ➤தூத்துக்குடி – மக்ரூன் ➤திருப்பாச்சேத்தி – அரிவாள் ➤நாச்சியார்கோயில் – விளக்கு ➤சின்னாளப்பட்டி – கண்டாங்கி சேலை

error: Content is protected !!