News October 9, 2024

Recipe: கம்பு இனிப்பு அடை செய்வது எப்படி?

image

உளுந்தையும், வெந்தயத்தையும் 3 மணி நேரம் ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கம்பு மாவு சேர்த்து அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அதில், பனை வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும். பிறகு சூடான தவாவில் நெய் காய்ந்ததும் இந்த மாவை தட்டிப் போடவும். பொன்னிறமாக மாறும்வரை இருபக்கமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்தால், சுவையான கம்பு அடை ரெடி.

News October 9, 2024

UPI பயனர்களுக்கு நற்செய்தி சொன்ன RBI

image

இன்டர்நெட் இல்லாமல் கீபேட் போன் பயன்படுத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. அதாவது, UPI123Pay பரிவர்த்தனை வரம்பை ₹5,000இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தியுள்ளது. UPI Lite Wallet உச்ச வரம்பு ₹2,000இல் இருந்து ₹5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், பயனர்கள் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை எளிமையாக செய்ய முடியும் என்று RBI தெரிவித்துள்ளது.

News October 9, 2024

ஹரியானா தேர்தல்: காங்கிரசை அழைத்த தேர்தல் ஆணையம்

image

ஹரியானா தேர்தல் விவகாரம் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸூக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகளில் EVM இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் காங்., கூறியிருந்தது. இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு காங்.,குழு, தங்களை வந்து சந்திக்கலாம் என கார்கேவுக்கு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

News October 9, 2024

மூலிகை: நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் அக்கரகாரம்

image

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் ஆற்றல் அக்கரகாரம் மூலிகைக்கு இருப்பதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன. பெலிடோரின், அல்கைலாமைட்ஸ், பைரெத்ரின்ஸ், செசமின் போன்ற தாவர வேதிப் பொருட்கள் கொண்ட இதன் வேரைப்பொடி செய்து, தேனில் குழைத்து சாப்பிட்டுவந்தால், நரம்பு விலா நோயால் ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்புகள் நீங்குவதோடு, நினைவாற்றலும் கூடும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News October 9, 2024

திமுக அரசுக்கு எதிராக திரும்பிய கூட்டணி கட்சிகள்

image

சாம்சங் ஊழியர்களின் போராட்டம் திமுக அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது. குறிப்பாக, கூட்டணி கட்சிகளான விசிக, தவாக, கம்யூ., காங்., உள்ளிட்டவை திமுக அரசின் செயல்பாட்டை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளன. போராட்டக் களத்திற்கு நேரடியாக சென்றும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளன. அந்த வகையில், சாம்சங் நிறுவனத்திற்கு துணைபோகும் அரசின் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது என்று வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

News October 9, 2024

கோலியின் ரெக்கார்டை பிரேக் செய்வாரா சூர்யா?

image

IND – BAN அணிகள் மோதும் 2வது T20 ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இன்றைய ஆட்டத்தில் 30 runs சேர்த்தால், கோலியின் சாதனையை SKY சமன் செய்வார். சர்வதேச T20- குறைந்த போட்டிகளில் 2500 runs குவித்த வீரர்களில் கோலி 2-ம் இடத்திலும் (73 போட்டிகள்), Pak வீரர் பாபர் அசாம் (67 போட்டிகள்) முதலிடத்திலும் உள்ளனர். SKY இதுவரை 72 போட்டிகளில் 2461 runs குவித்துள்ளார். இன்று SKY-யின் வாண வேடிக்கையை எதிர்பார்க்கலாமா?

News October 9, 2024

வேதியியலுக்கான நோபல் பரிசு

image

‘நோபல் பரிசுகள் 2024’ அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், உயிரினங்களின் அடிப்படை கட்டமைப்பான புரதங்களை கையாள்வது & முற்றிலும் புதிய புரதங்களை உருவாக்கும் வழியை கண்டறிந்ததற்காக டேவிட் பேக்கர் (USA), மற்றும் AI தொழில்நுட்பத்தின் உதவியால் அனைத்து புரதங்களின் கட்டமைப்பை கணிக்கும் வழிமுறையை கண்டறிந்ததற்காக டெமிஸ் ஹஸ்ஸாபிஸ் (UK), ஜான் ஜம்பர் (USA) ஆகிய 3 பேர் வேதியியலுக்கான நோபல் பரிசு பெறுகின்றனர்.

News October 9, 2024

இன்று குரு வக்ர பெயர்ச்சி: 3 ராசிகள் கவனம்!

image

குரு பகவான் பிப்ரவரி வரை ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் வக்ர பெயர்ச்சி மேற்கொள்கிறார். இதனால் 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டும். 1. மிதுனம்: சொந்த வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 2. சிம்மம்: சுப செலவுகள் உண்டு. முதலீட்டில் அதிக பணம் போட வேண்டாம். 3. மகரம்: பிள்ளைகளுக்கு வரன் பார்ப்பதில் அலட்சியம் வேண்டாம். பேச்சில் கவனம் தேவை.

News October 9, 2024

நடிகர்களின் மேனேஜர்களுக்கு இவ்வளவு சம்பளமா!

image

பெரிய ஸ்டார் நடிகர்கள் சம்பளம் நாம் கேள்விப்பட்டு இருப்போம். இந்த நடிகர்களின் தேதிகளை நிர்வகிப்பது, ப்ரமோஷன், பிசினஸ் என பலவற்றை கவனிக்கும் அவங்க managers எவ்வளவு சம்பளம் வாங்குறாங்கன்னு தெரியுமா? ஷாருக் கானின் manager பூஜா தத்லானி வருஷத்துக்கு ரூ.7-9 cr, அன்ஜுலா ஆச்சார்யா ரூ.6 cr (பிரியங்கா சோப்ரா), பூனம் (கரீனா கபூர்) ரூ.3 cr, சூசன்(ரன்வீர் சிங்) ரூ.2 cr சம்பளம் பெறுகின்றனர்.

News October 9, 2024

வில்லியம்சன் விலகல்; சாப்மேனுக்கு வாய்ப்பு!

image

IND அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் NZ மூத்த வீரர் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர், மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி ஓய்வில் இருப்பார் எனக் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக 30 வயதாகும் மார்க் சாப்மேனுக்கு டெஸ்ட்டில் அறிமுகமாக நியூசிலாந்து அணி நிர்வாகம் & தேர்வுக்குழு வாய்ப்பு அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!