News October 10, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: அன்புடைமை. ▶குறள் எண்: 77
▶ குறள்: அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று.
▶பொருள்: மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.

News October 10, 2024

டாடா மறைவுக்கு ஆனந்த் மஹிந்திரா இரங்கல்

image

ரத்தன் டாடா மறைவுக்கு மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், ரத்தன் டாடா இல்லாததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் மறைவுக்கு நாம் செய்ய வேண்டிய அஞ்சலி, அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதாக உறுதி ஏற்பதுதான். Goodbye டாடா. நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள். ஏனென்றால் லெஜெண்டுகள் ஒருபோதும் மறைந்து போவதில்லை என கூறியுள்ளார்.

News October 10, 2024

இரங்கல் தெரிவித்த டாடா சன்ஸ் தலைவர்

image

ரத்தன் டாடா மறைவுக்கு, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் x தளத்தில் இரங்கல் தெரிவித்தார். அதில், ரத்தன் டாடா தனக்கு ஒரு நல்ல நண்பராகவும், வழிகாட்டியாகவும் இருந்தாக தெரிவித்த அவர், பணி, நேர்மை மற்றும் புதுமை ஆகியவற்றில் தனது அர்ப்பணிப்புடன் சர்வதேச அளவில் முத்திரை பதித்தவர் என புகழாரம் சூட்டினார். அவரால் பல லட்சம் மக்கள் பயனடைந்துள்ளதாகவும், டாடா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்தார்.

News October 10, 2024

ரத்தன் டாடா மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்

image

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது x பதிவில், ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர். அவர் வணிகம் மற்றும் philanthropy ஆகிய இரண்டிலும் தனி முத்திரையை பதித்தவர் என பாராட்டிய அவர், ரத்தன் டாடா குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

News October 10, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶அக். 10 (புரட்டாசி 24) ▶வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நேரம்: 1:00 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: அஷ்டமி ▶ பிறை: வளர்பிறை ▶ சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: தெற்கு ▶ பரிகாரம்: தைலம் ▶ சந்திராஷ்டமம்: ரோகிணி ▶ நட்சத்திரம்: மூலம் அ.கா 2.06 ▶யோகம்: சித்த யோகம்

News October 10, 2024

ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

image

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா(86) மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது x பதிவில், ”தொலைநோக்குப் பார்வையுள்ள தொழிலதிபரும், பழமையான மதிப்பு வாய்ந்த நிறுவங்களின் தலைவராக விளங்கினார். பணிவு , இரக்கம், அர்பணிப்பு காரணமாக அனைவராலும் நேசிக்கப்பட்டவர்” என அவருக்கு புகழாரம் சூட்டினார்

News October 10, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 10, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 10, 2024

BREAKING: ரத்தன் டாடா காலமானார்

image

மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மருத்துவமனையில் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த அவர், 2012-ல் ஒய்வு பெற்றார். பல லட்சம் இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் உலக அரங்கில் திறமையான தொழிலதிபராகவும் திகழ்ந்த ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News October 10, 2024

தமிழக அரசே போராட விடு! பா.ரஞ்சித்

image

சாம்சங் ஊழியர்களை போராட அனுமதிக்குமாறு தமிழக அரசை, இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக அரசு செயல்படுவது மோசமான அணுகுமுறை என விமர்சித்த அவர், சட்டத்திற்கு முரணாக தொழிலாளர்களை கைது செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், தொழிலாளர்களை அச்சுறுத்த, காவல்துறையை ஒரு கருவியாக அரசு பயன்படுத்துவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!