India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விடுபட்ட மகளிருக்கும் ₹1,000 உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என Deputy CM உதயநிதி கூறியுள்ளார். ஆவடியில் பேசிய அவர், விடியல் பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, காலை சிற்றுண்டி போன்ற திட்டங்களால் பெண்கள் பயனடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் CM ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுசென்று, விடுபட்ட பெண்களுக்கும் உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவை சந்தித்த நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துள்ளார் கமல்ஹாசன். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ரத்தன் டாடா என்னுடைய ஹீரோ. அவரை பின்பற்ற என் வாழ்நாள் முழுவதும் முயற்சித்திருக்கிறேன். 2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு நான் தாஜ் ஓட்டலில் தங்கியிருந்த போது, அவரை சந்தித்தேன். அந்த நெருக்கடியான தருணத்திலும், அவர் பலமான ஆளுமையாக நிமிர்ந்து நின்றது ஆச்சரியம் தந்தது” என்றார்.
இந்தியாவில் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி, அதானி போன்றவர்கள் முன்னணியில் உள்ளனர். ஆனால் நீங்கள் என்றாவது ஏன் ரத்தன் டாடா இந்த பட்டியலில் இல்லை என யோசித்து உண்டா. நிஜத்தில் டாடா, அவர்களை விட பணக்காரர் தான். ஆனால் அவரின் 80% சொத்துகளை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என குரல் எழுந்தபோது இந்தியனாக இருப்பதே தனது அதிர்ஷ்டம் என தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’வேட்டையன்’ திரைப்படம் இன்று வெளியாகிறது. ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில், அமிதாப், மஞ்சு வாரியர், ஃபகத், ராணா, துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ’ஜெய் பீம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
1780 – மேற்கிந்திய தீவுகளில் நிகழ்ந்த பெரும் சூறாவளியில் சிக்கி 20,000-30,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1935 – கிரீஸில் நடைபெற்ற ராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.
1949 – விடுதலை பெற்ற பின் இலங்கையில் புதிய ராணுவம் உருவாக்கப்பட்டது.
1980 – வடக்கு அல்ஜீரியாவில் 7.1 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2,633 பேர் உயிரிழந்தனர்.
2015 – தமிழக திரைப்பட நகைச்சுவை நடிகை மனோரமா மறைந்த தினம்.
தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் சமூக ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும், நோக்கில் ரத்தன் டாடாவின் இயக்கம் இருந்தது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு உதவும் உறுதுணை (Companionship) சேவையை வழங்கி வரும் ‘Goodfellows’ ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் கடந்த 2022-ல் அவர் முதலீடு செய்தார். அதேபோல் முன்னாள் ஊழியர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது நேரடியாக அவர் இருப்பிடத்துக்கு சென்று நலம் விசாரித்தவர்.
ரத்தன் டாடா மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கார்கே, இந்தியாவின் விலைமதிப்பற்ற மகனை இழந்துவிட்டோம். கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாகவும் அடையாளமாகவும் இருந்தார் என்றார். ராஜ்நாத் சிங், ரத்தன் டாடா இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு மகத்தான பங்களிப்பு வழங்கி உள்ளதாக புகழாரம் சூட்டினார்.
*என்னால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும், அதனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் அல்லது சூழ்நிலை குறித்த அவர்களின் கருத்துக்கள் என்னைத் தொந்தரவு செய்யாது. * பந்தயத்தின் தொடக்கத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள், முடிவைப் பற்றிச் சிந்தியுங்கள்.
*உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும்.
•1937-ம் ஆண்டு நேவல் டாடாவிற்கும் சூனி டாடாவிற்கும் பிறந்தார்.
•1962- டாடா ஸ்டீல் மூலம் டாடா குழுமத்தில் இணைந்தார்.
•1991-ம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். பல புதிய மூலம் நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார்.
•2000 – பத்ம பூஷன், 2008 – பத்ம விபூஷன் விருதை பெற்றார்.
•2012 – 75வது பிறந்தநாளில் டாடா குழுமத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
ரத்தன் டாடா மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய தொழில்துறையின் மாபெரும் ஆளுமையாக விளங்கியதாக அவருக்கு புகழாரம் சூட்டிய முதல்வர், டாடாவின்
தொலைநோக்குப் பார்வை டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது என்றார். மேலும் அவரது குடும்பத்தினர், டாடா குழும ஊழியர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.