India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விடுபட்ட மகளிருக்கும் ₹1,000 உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என Deputy CM உதயநிதி கூறியுள்ளார். ஆவடியில் பேசிய அவர், விடியல் பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, காலை சிற்றுண்டி போன்ற திட்டங்களால் பெண்கள் பயனடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் CM ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுசென்று, விடுபட்ட பெண்களுக்கும் உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
பெரிய பொருளாதாரங்களான G20 நாடுகளிலேயே, இந்தியாவின் உணவுமுறை தான் சிறந்ததாக உள்ளதாக WWF அமைப்பின் லிவிங் பிளானட் அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய உணவு நுகர்வு முறை தான் சுற்றுச்சூழல் நலத்துக்கு உகந்ததாக இருப்பதாகவும், மற்ற நாடுகள் இதை பின்பற்றினால் புவி வெப்பமயமாதலை கூட குறைக்க முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. USA, AUSTRALIA, ARGENTINA நாடுகளின் உணவுமுறை மிகவும் மோசமாக உள்ளதாம்.
லாவோஸில் நடைபெறும் 22ஆவது ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டில், தெ.கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்த 10 அம்ச திட்டத்தை இந்தியா முன்மொழிந்துள்ளது. சுற்றுலா, கலாசார பரிமாற்றம், அறிவியல், கல்வி, பொருளாதாரம், பேரிடர் மேலாண்மை, மருத்துவம், டிஜிட்டல் துறை, கிரீன் ஹைட்ரஜன், காலநிலை பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா – ஆசியான் இருதரப்பு உறவை வளர்க்க இந்தியா ஆர்வம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 28 மாநிலங்களுக்கு, வரி பகிர்வாக ரூ.1.78 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உ.பி.க்கு ரூ.31,962 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ம.பி.-ரூ.13,987 கோடி, மராட்டியம்-ரூ.11,255 கோடி, தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி வழங்கப்படுகிறது. மாநிலங்களின் வளர்ச்சி சார்ந்த
செலவீனங்களுக்காக, அக்டோபர் மாத தொகையுடன், கூடுதலாக 1 மாத தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாலும், சமூக வலைதளங்கள் மூலமாக பயங்கரவாதத்தை பரப்பியதாலும் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக தமிழகத்தைச் சேர்ந்த பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*Message அனுப்ப வேண்டிய நம்பரை copy பண்ணவும். *WhatsApp ஒபன் செய்து “New Chat” பட்டனை கிளிக் செய்யவும் *தெரியும் Contact list-ல் உங்கள் பெயரை select செய்யவும். *பின் chat-ல் text box-ல் நீங்கள் copy செய்து வைத்த நம்பரை paste செய்யவும். *உங்களுக்கே அந்த நம்பரை அனுப்பியபின், அதை கிளிக் செய்யவும். *இப்போது அவரின் WhatsApp தெரியும். *பின் “Chat with [Number]” என்பதை tap செய்து message அனுப்பவும்.
வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகளுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. கோயில் பின்புறம் விளை நிலங்களை வகை மாற்றம் செய்து வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. எனினும் கோயிலில் இருந்து 1 கி.மீ தொலைவில் முதியோர் இல்லம், சித்தா ஹாஸ்பிடல் கட்ட தடையில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையத்தை தமிழக அரசு அமைக்கிறது.
விஜயதசமியன்று பள்ளிகளைத் திறந்து வைத்திருக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விஜயதசமி நாளன்று தங்களது குழந்தைகளை முதல்முதலில் பள்ளிக்கு அனுப்பினால், கல்வியில் சிறந்தவராக விளங்குவார் என பெற்றோரின் நம்பிக்கை. இதனால், தமிழ்நாடு முழுவதும் அக்.12ம் தேதி (சனிக்கிழமை) விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய நாளில் பெற்றோர், குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக் கொள்ளலாம்.
* காலையில் உடற்பயிற்சி செய்வதைவிட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது.
* காலை நேர உடற்பயிற்சி, தசை செல்களை தூண்டி உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
* மாலை நேரத்தில் செய்யப்படும் உடற்பயிற்சியால், உடலின் முழு ஆற்றலும் அதிகரிக்கிறது. இதனால் நீண்டநேரம் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் மறைவுக்கு ஓபிஎஸ் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். முதல்முறையாக கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்த ஓபிஎஸ், அங்கு வைக்கப்பட்டிருந்த முரசொலி செல்வத்தின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன்பின், முதல்வர் ஸ்டாலினின் கையைப்பிடித்து ஆறுதல் கூறினார். தற்போது இருவரும் 5 நிமிடத்திற்கு மேல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
Sorry, no posts matched your criteria.