News October 11, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 11, 2024

கேரளா லாட்டரி: ₹ 25 கோடியை தட்டித் தூக்கிய மெக்கானிக்

image

கேரளா ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசான ₹ 25 கோடி, கர்நாடகாவைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவருக்கு கிடைத்துள்ளது. அங்குள்ள பாண்டவாபுரத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் அல்தாஃப் என்பவர்தான் தற்போது ஓவர் நைட்டில் ஒபாமாவாக மாறி இருக்கிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அல்தாஃப், கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வந்திருக்கிறார். வரிப்பிடித்தம் போக ரூ.13 கோடி அவருக்கு கிடைக்கும்.

News October 11, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 11, 2024

வேட்டையனில் சொதப்பி விட்டாரா இயக்குநர்?

image

‘வேட்டையன்’ வெறும் ஆக்‌ஷன், அடிதடி என்று இல்லாமல், கல்விக் கொள்ளை பற்றி கருத்து சொல்லும் படமாக ரசிகர்களை கவர்கிறது. ஆனால், முதல் பாதியில் அட்டகாச த்ரில்லராக போகும் படம், 2-ம் பாதியில் எளிதில் யூகிக்க கூடிய காட்சிகளாக மாறிவிடுகிறது என்கின்றனர் விமர்சகர்கள். ஹீரோவுக்கு ஓவர் பில்ட்-அப் கொடுத்து, வில்லனுக்கு வெயிட்டேஜ் ஏற்றாமல் டம்மியாக காட்டி உள்ளதாகவும் சொல்கின்றனர். நீங்கள் படம் பாத்துட்டீங்களா?

News October 11, 2024

ராசி பலன்கள் (11-10-2024)

image

◙மேஷம் – பெருமை
◙ரிஷபம் – அமைதி
◙மிதுனம் – ஜெயம்
◙கடகம் – சினம்
◙சிம்மம் – போட்டி
◙கன்னி – தெளிவு
◙துலாம் – இன்பம்
◙விருச்சிகம் – சாதனை
◙துனுசு – விவேகம் ◙மகரம் – மேன்மை
◙கும்பம் – மகிழ்ச்சி ◙மீனம் – சாந்தம்

News October 11, 2024

“நெற்றி முத்தம் புனிதமானது”

image

BiggBoss-ல் ஸ்கோர் செய்வதில் ஒவ்வொருவரும் தீவிரமாக உள்ளனர். ஃபேட்மேன், ரஞ்சித் இடையில் நடந்த சண்டை ‘ப்ராங்க்’ எனத் தெரிந்ததும் ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை சமாதானப்படுத்த ரஞ்சித் சௌந்தர்யா நெற்றியில் முத்தமிட்டு, ஜாக்குலின் கன்னத்தை கிள்ளிவிட்டு சென்றார். இதை பலர் விமர்சிக்க, ‘நெற்றியில் இட்ட முத்தம் புனிதமானது’ என்று ரஞ்சித்துக்கு ஆதரவு கொடுத்துள்ளார் வனிதா.

News October 10, 2024

27 ஆண்டுகளுக்கு பின் டெஸ்டில் 800 ரன்கள்!

image

பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து 150 ஓவர்கள் பேட்டிங் செய்து, 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களும் குவித்தனர். டெஸ்ட்டில் ஒரு அணி 800 ரன்களுக்கு மேல் குவிப்பது, 27 ஆண்டுகளுக்கு பின் தற்போது நடந்துள்ளது. இதற்கு முன் 1997-ல் கொழும்புவில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இலங்கை 952 ரன்கள் எடுத்திருந்தது.

News October 10, 2024

தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை

image

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது சனிக்கிழமை பள்ளிகள் திறந்திருக்கும் என பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பால் மாணவர்கள் குழம்பி விட்டனர். இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்காக மட்டுமே பள்ளிகள் திறந்திருக்கும். ஆனால், மாணவர்களுக்கு வழக்கம்போல் பொதுவிடுமுறை தான் என்றும், திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News October 10, 2024

இணையத்தில் வேட்டையன்

image

ரஜினி நடித்து இன்று திரையரங்கில் வெளியான வேட்டையன் திரைப்படம் இணையத்தில் வெளியானது. என்கவுன்டர், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வியாபாரம் ஆகிய 2 முக்கிய பிரச்னைகளை பேசும் வேட்டையனுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், ஆயுதபூஜை விடுமுறையில் வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால், படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

News October 10, 2024

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கி.வீரர் ஜோ ரூட் சாதனை

image

முல்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 262 ரன்கள் குவித்தார். இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் என்ற மைல் கல்லை அவர் கடந்துள்ளார். மேலும் 20,000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 இரட்டை சதம் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் ரெக்காடையும் ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

error: Content is protected !!