News October 11, 2024

கன்னடத்தில் வெற்றிக்கொடி நாட்டிய மா.செ படம்

image

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்தப் படத்தை கன்னடத்தில் ‘கர்கி’ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்குநர் பவித்ரன் வெளியிட்டுள்ளார். கதாநாயகனாக நடிகர் ஜே.பி, நாயகியாக மீனாட்சி, முதன்மை வேடத்தில் சாது கோகிலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாதி ஒழிப்பு, சமூக நீதி, சமத்துவத்தை பேசும் இப்படத்துக்கு கன்னட ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.

News October 11, 2024

டீ குடிக்கும் பழக்கத்தை நிறுத்த நினைக்கிறீர்களா?

image

டயட்டில் இருந்து டீயை முற்றிலுமாக தவிர்ப்பது சிலருக்கு மன ரீதியான பிரச்னையை தரலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு பதிலாக, மூலிகை தேநீர், பழச்சாறு, வெந்நீர் போன்றவற்றை முயற்சிக்கலாம் என்கிறார்கள். குறிப்பாக, ஆப்பிள், கிரான்பெர்ரி போன்ற பழச்சாறுகளில் காஃபைன் இல்லாததால் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். வெந்நீருடன் எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து குடிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

News October 11, 2024

3 மடங்கு கட்டணம் உயர்வு

image

ஆயுதபூஜை, விஜயதசமி, ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால், ஆம்னி பஸ், விமானக் கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – மதுரைக்கு ₹18 ஆயிரம் வரையிலும், கோவை, சேலத்திற்கு ₹10,000 வரையிலும் விமானக் கட்டணம் உயர்ந்துள்ளன. அதேபோல், ஆம்னி பேருந்துகளில் ₹1500 முதல் ₹2000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன.

News October 11, 2024

ஹோட்டல் அறைகள் ஹவுஸ்புல்

image

தவெக மாநாடு எதிரொலியாக, விக்கிரவாண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஹோட்டல் அறைகளின் முன்பதிவு ஜோராக நடந்துள்ளது. தவெகவின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் தங்குவதற்காக ஹோட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

News October 11, 2024

விளையாட்டு துளிகள்

image

➤மைசூரு ITF டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு இந்தியாவின் ஸ்மிருதி முன்னேறியுள்ளார். ➤இங்கிலாந்தில் நடக்கும் சர்வதேச கால்பந்து தொடரில் இந்தியா சார்பில் சென்னை யூத் அணி பங்கேற்கவுள்ளது. ➤ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இந்திய ஆடவர் அணி 3ஆவது முறையாக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. ➤IPL போல ஹாக்கி லீக் தொடருக்கான ஏலத்தில் 1000-க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

News October 11, 2024

‘வேட்டையன்’ முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்

image

இந்தியாவில் ‘வேட்டையன்’ திரைப்படம் முதல் நாளில் ₹25 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் நேற்று வெளியானது. தொடர் விடுமுறை என்பதால், வரும் நாள்களில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், ரஜினியின் முந்தைய படமான ‘ஜெயிலர்’ முதல் நாளில் ₹48 கோடி வசூலித்து இருந்தது.

News October 11, 2024

திமுக கூட்டணியில் குழப்பம் : ராஜேந்திர பாலாஜி

image

திமுக கூட்டணியில் குழப்பம் நிலவி வருவதாகவும், கம்யூ., விசிக தனித்தனி பிரிவாக உள்ளதாகவும் EX மினிஸ்டர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், காங்கிரசுக்காக விழுந்த ஓட்டுகளை திமுக தனக்கானதாக எண்ணி வருவதாகவும் கிண்டலடித்தார்.

News October 11, 2024

ரத்தன் டாடாவுக்கு பிரான்ஸ் அதிபர் இரங்கல்

image

டாடா மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், ”ஒரு நல்ல நண்பரை பிரான்ஸ் இழந்துவிட்டது. டாடாவின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியா& பிரான்ஸ் நாடுகள் உற்பத்தித் துறைகளில் மேம்பட்டன. அதையும் தாண்டி, அவரது மனிதநேய பார்வை, மகத்தான தொண்டு மற்றும் அவரது பணிவு ஆகியவற்றால் டாடா நினைவுகூரப்படுவார். இந்திய மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

News October 11, 2024

பள்ளிகள் விடுமுறையில் மாற்றம்.. புது லிஸ்ட்

image

2024 – 25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் வேலைநாட்கள் 210 நாட்களுக்கு குறையாமல் இருப்பதை, தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இனிவரும் அனைத்து வாரத்திலும் சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், அரையாண்டு தேர்வு நடைபெறும் போது ஒரு சனிக்கிழமை (டிச. 21) மட்டும் வேலை நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 11, 2024

தீய சக்திகளை விரட்டி அடிக்கும் வேம்பு பிரசாதம்!

image

சயனக்கோலத்தில் மிக அபூர்வமாக துர்க்கை பற்றிக்கொண்ட கோலத்தில் அருளும் தலம்தான், நெல்லை வடக்கு செழியநல்லூர் சயன வனதுர்க்கை கோயிலாகும். சிறப்பு வாய்ந்த மஹாநவமி நன்னாளில் காலையிலேயே குளித்து, விரதமிருந்து, இக்கோயிலுக்குச் சென்று துர்க்கைக்கு சிவப்புப் பட்டும் செவ்வரளிப்பூ சாற்றி, நெய் தீபமேற்றி, பொங்கலிட்டு, அங்கு தரும் வேம்பை வீட்டில் கொண்டுவந்து வைத்து வணங்கினால் தீய சக்திகள் விலகும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!