News October 11, 2024

ALERT: இன்று மிக கனமழை

image

குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதேபோல், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.

News October 11, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 11 மணிக்கு <<14328927>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) சான்பிரான்சிஸ்கோ 2) Bayerische Motoren Werke 3) 11.8 அடி நீளம், 5.1 அடி அகலம் 4) ரெட் கொலோபஸ் 5) வெள்ளி 6) நீலகேசி 7) காட்டு வாத்து. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கும் பகிருங்கள்.இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 11, 2024

டாடா அறக்கட்டளையின் அடுத்த தலைவர்

image

சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா (67) நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் மறைந்த தொழிலதிபர் நேவல் டாடா – சிமோன் தம்பதியின் மகனும், ரத்தன் டாடாவின் சகோதரருமாவார். டாடா சன்ஸ் நிறுவனத்தில் 26% பங்குகளை வைத்துள்ள அந்த அறக்கட்டளையின் தலைவராக இருந்தவர்கள் டாடா குடும்பத்தை சேர்ந்தவர்களாக மட்டுமே இருந்திருக்கிறார்கள். அதன்படி, அதன் அடுத்த தலைவராக நோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

News October 11, 2024

Beauty Tips: பீல் ஆஃப் மாஸ்க் சருமத்திற்கு நல்லதா?

image

சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை அகற்ற Peel Off மாஸ்க்குகளை பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கலாம் என தோல் நல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். Peel Off மாஸ்க் உண்மையில் முகப்பரு, அரிப்பு & தோல் சிவத்தல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு சரும சேதத்திற்கும் வழிவகுக்கும். இதனால் ஏற்படும் சரும பொலிவு நிரந்தரமான ஒன்றல்ல. இதன் காரணமாகவே அழகுக்கலை நிபுணர்கள் இந்த மாஸ்கினை அதிகம் பரிந்துரைப்பதில்லை.

News October 11, 2024

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்?

image

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எதிலும், எப்போதும் எச்சரிக்கை உணர்வு மிக்கவர்களாக இருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செலவு செய்வதில் சிக்கனமாக இருந்தாலும், பிறருக்கு உதவுவதில் கணக்குப் பார்க்க மாட்டீர்கள். சிந்தனை & செயல் உறுதி, கலை ஆர்வம், ஆடம்பரத்தை விரும்பும் மனம் உள்ளவராக இருப்பீர்கள் என்கிறது நந்தி வாக்கியம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 11, 2024

டெஸ்ட் வரலாற்றில் இதுவே மோசமான சாதனை

image

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணிலேயே ஒரு இன்னிங்ஸ் தோல்வியடைந்து பாக்., மோசமான சாதனையைப் படைத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 500+ ரன்களை எடுத்த பின்னர், ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இதுவே முதல்முறை. பாக்., தனது சொந்த மண்ணில் 1,331 நாட்களில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. இந்த டெஸ்ட்டில் (PAK 556 & 220, ENG 823/7 d).

News October 11, 2024

SCO மாநாட்டை தடுக்க சதியா?

image

பாகிஸ்தானின் டுகி பகுதியில் ஜுனைட் நிலக்கரி சுரங்கத்தில் பலூசிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து பலூசி மாகாண நிர்வாகம், காவல்துறை & எல்லைப் படை குழுக்கள் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக அறிய முடிகிறது. அக்டோபர் 15-16 வரை இஸ்லாமாபாத்தில் SCO உச்சிமாநாட்டை நடத்த பாக். தயாராகி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

News October 11, 2024

தாய் மண்ணிலேயே தோல்வியை சந்தித்த பாக்.,

image

PAK-க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ENG அணி இன்னிங்ஸ் & 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் PAK அணி 556 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ENG முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 2ஆம் இன்னிங்ஸை விளையாடிய PAK அணி 220 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தனது தாய் மண்ணிலேயே மோசமான தோல்வியை சந்தித்தது.

News October 11, 2024

கலப்பட நெய்யைக் கண்டறிவது எப்படி?

image

தமிழரின் உணவு பண்பாட்டில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது நெய். சுவை & மணத்திற்காக மட்டுமின்றி, உடல் நலத்திற்காகவும் பயன்படுத்தப்படும் அதில் தற்போது அதிகம் கலப்படம் செய்யப்படுகிறது. தூய நெய்யா என்பதை கண்டறிய, சிறு அளவு நெய்யை உள்ளங்கையில் வைத்து சிறிது நேரம் வரை பாருங்கள். சில நொடிகளில் நெய் உருகிவிட்டால் அது தாவர எண்ணெய் & வனஸ்பதி சேர்க்கப்படாத தூய நெய் ஆகும். அறை வெப்பநிலையிலேயே தூய நெய் உருகும்.

News October 11, 2024

திரைத்துறையினர் கண்ணீர் மல்க அஞ்சலி

image

மறைந்த முரசொலி செல்வத்தின் உடலுக்கு திரைத்துறையினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் பி.வாசு, எஸ்.ஏ. சந்திரசேகர், தியாகராஜன், பிரசாந்த், விஜயகுமார், அருண்விஜய் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின், முரசொலி செல்வத்தின் உடல் அருகே மிக சோகத்துடன் அமைதியாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு முக்கிய தலைவர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.

error: Content is protected !!