India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலை பருப்பு, துவரம்பருப்பு ஆகிய இரண்டையும் 2 மணிநேரம் நீரூற்றி ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். காம்பு நீக்கிய முருங்கைப் பூ, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, மல்லித் தழை ஆகியவற்றை பொடிதாக வெட்டி, பருப்பு கலவையில் உப்பு சேர்த்து பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் மாவை வடைகளாக தட்டி, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான முருங்கைப்பூ வடை ரெடி.
ISD அழைப்பு திட்டங்களை ஜியாே மாற்றியமைத்துள்ளது. அதன்படி, ₹39 ரீசார்ஜ் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 7 நாள்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதில் அமெரிக்கா, கனடாவுக்கு 30 நிமிடங்கள் வரை பேசலாம். வங்கதேசத்துக்கு ₹49, மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூருக்கு ₹59, ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு ₹69 ஆகிய திட்டங்களையும் தனித்தனி வேலிடிட்டி, அழைப்பு நிமிடங்களுடன் ஜியாே அறிமுகம் செய்துள்ளது.
பூமியை நோக்கி இன்று 3 பிரமாண்ட எரிகற்கள் மிக வேகமாக வருவதாக அமெரிக்காவின் நாசா அமைப்பு எச்சரித்துள்ளது. அந்த எரிகற்களின் பயணப் பாதையை உன்னிப்பாக கவனிப்பதாக கூறியுள்ள நாசா, அவற்றால் பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. பாெதுமக்கள் பாதுகாப்பு, எதிர்காலத் தேவைக்கு தயாராகும் வகையில் எரிகற்கள் பயணத்தை கண்காணித்து தரவுகளை சேகரித்து வருவதாகவும் நாசா கூறியுள்ளது.
* பிரியாணியில் உள்ள வாசனைப் பொருள்கள் பசியை தூண்டுகின்றன. சீரணத்தை எளிதாக்கி, சத்துகளை உடல் கிரகிக்க உதவுகின்றன.
* Protien, Carbohydrates, Fat மூன்றும் சரிவிகிதத்தில் உள்ளன.
* சிக்கனில் உள்ள செலினியம், வயதாவதை தடுக்கிறது, நியாசின், Immunity அதிகரிக்கிறது.
* மஞ்சள், இஞ்சி, மிளகு, சீரகம்: சீரணத்தை எளிதாக்கி, கழிவுகளை வெளியேற்றுகிறது.
* காய்கறிகள் vitamins, minerals உள்ளிட்ட நுண்சத்துகளை அளிக்கிறது.
உலக பிரியாணி தினம் ஆண்டுதோறும் அக். 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பீப், சிக்கன், மட்டன், காய்கறி, காளான் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரியாணிகளை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். பெரும்பாலான இந்தியர்களுக்கு பிரியாணி விருப்பமான உணவாகவும் இருக்கிறது. இதனால், இந்தியாவில் பிரியாணிக்கென மிகப்பெரிய மார்க்கெட்டே இருக்கிறதென்றால் மிகையாகாது. உங்களுக்கு பிடித்தமான பிரியாணி எதுவென்று கமெண்ட்ல சொல்லுங்க.
நோயல் டாடா முதன்முதலாக 1980களில் டாடா சர்வதேச நிறுவனத்தில்தான் தன் பணியை தொடங்கினார். 1999இல் TRENT நிறுவனத்தின் MDஆக பொறுப்பேற்றார். ஆடை விற்பனையை லாபகரமானதாக மாற்றினார். 2003இல் டைட்டன் & வோல்டாஸின் இயக்குநரானார். சில்லறை வர்த்தக சந்தையில் டாடா குழுமத்தின் நிலையை வலுப்படுத்திய பெருமை இவரையே சேரும். டாடா குழும அறக்கட்டளைகளில் முக்கிய அறக்காவலராக அவர் பதவி வகித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது ஊழல் கறை படிந்த மற்றும் ஒழுங்காக வேலை செய்யாத ஊழியர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு, தயவு தாட்சண்யமின்றி டிஸ்மிஸ் செய்யுமாறு மோடி உத்தரவிட்டார். ஊழலில் திளைக்கும் ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்பும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்று கூறிய அவர், பெர்ஃபார்ம் செய்யுங்கள் அல்லது காணாமல் போய் விடுங்கள் என எச்சரித்தார்.
தமிழ்நாட்டின் குளிர்மண்டல விளை பழமான நாட்டு பேரிக்காயை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதில் உள்ள சோடியம், பொட்டாஷியம் சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் தாமிரம், தையாமின், ரிபோஃப்ளேவின் கீல்வாதத்திற்கும் சிறந்தது. கந்தகம், ஆக்சாலிக் நரம்புத்தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இரும்பு சத்து முடி உதிர்வையும் கரோட்டின், நியாசின் உள்ளிட்டவை தோல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
2024 ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ‘நிஹோன் ஹிடங்க்யோ (Nihon Hidankyo)’ என்ற ஜப்பானிய அமைப்புக்கு வழங்கப்படுவதாக நார்வே நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்தோர் நலனுக்காகவும், அணு ஆயுதமில்லா உலகத்துக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதற்காகவும் நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளது. இதற்கு தங்கப் பதக்கத்துடன் ₹9 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காம்போ ஆஃபர்களை ஆவின் அறிமுகம் செய்துள்ளது. மைசூர் பாக் – 200 Gm, மிக்சர் – 200 Gm, குக்கீஸ் – 80 Gm, சாக்லேட் – 14 Gm அடங்கிய காம்போ ₹300க்கு விற்பனை செய்யப்படுகிறது. நெய் பாதுஷா, குலோப் ஜாமுன், பாதாம் மிக்ஸ், மிக்சர், சாக்லேட் அடங்கிய காம்போ ₹500க்கும், காஜு பிஸ்தா ரோல், காஜு கத்லி நெய் பாதுஷா, முந்திரி அல்வா அடங்கிய காம்போ ₹900க்கும் விற்பனையாகிறது.
Sorry, no posts matched your criteria.