News April 28, 2025

TRANSPORT ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

image

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி குறைந்தபட்சமாக மாதம் ரூ.1,300, அதிகபட்சமாக ரூ.4,600 கடந்த பிப்ரவரி மாதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு தற்போது 14% அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 16%, 146% பெறுவோருக்கு கூடுதலாக 48% வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி, குறைந்தபட்சமாக இனி ரூ.2,500, அதிகபட்சமாக ரூ.21,679 கிடைக்கும். இதனால் 90,000க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பலனடைவர்.

News April 28, 2025

18 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைத்த RCB!

image

டெல்லியில் நடைபெற்ற DC அணிக்கு எதிரான மேட்ச்சில், RCB வெற்றி பெற்று மாபெரும் வரலாற்று ஒன்றை படைத்துள்ளது. IPL-ல் வெளி கிரவுண்டில் தொடர்ச்சியாக 6 மேட்ச்களை வென்ற ஒரே அணி RCB தான். கொல்கத்தா, சென்னை, மும்பை, ஜெய்ப்பூர், சண்டிகர், டெல்லி மைதானங்களில் வரிசையாக RCB வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சீசனில் நேற்றைய வெற்றியுடன் RCB, 10 மேட்சில் 7 வெற்றியை பெற்று, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

News April 28, 2025

8வது தேர்ச்சி போதும்.. தமிழக அரசில் 392 வேலைவாய்ப்புகள்!

image

சென்னை ஹைகோர்ட்டில் அலுவலக உதவியாளர், சுகாதாரப் பணியாளர் உள்பட 392 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளன. குறைந்தபட்சமாக 8 ஆம் தேர்ச்சி பெற்று, 18-47 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, திறன் சோதனையின் மூலம் தேர்வு நடைபெறும். சம்பளமாக ₹15,700 – ₹58,100 வரை வழங்கப்படும். மே 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இந்த லிங்கை கிளிக் செய்யலாம்<<>>.

News April 28, 2025

160 தொகுதிகளில் அதிமுக போட்டி? இபிஎஸ் திட்டம்

image

2026 தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி அமைத்துள்ளன. தேமுதிக உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும் கூட்டணியில் சேரலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க, 160 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டுமென இபிஎஸ் முடிவு செய்திருப்பதாகவும், எஞ்சிய 74 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அளிக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை கூட்டணி ஏற்குமா?

News April 28, 2025

ஆட்டத்தை ஆரம்பிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’..!

image

இப்பவே வெயில் இப்படி இருக்கே, கத்திரி வெயில் தொடங்கினால் அவ்ளோதான். மே 4-ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திர காலம் மே 28 வரை நீடிக்கிறது. இதனால், மே 1 முதலே பல இடங்களில் வெயில் அதிகரிக்கத் தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வெப்ப அலை வீச வாய்ப்பில்லை என்றாலும், வறண்ட காற்று மற்றும் வெப்பநிலையின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கின்றனர். வெளியே செல்லும்போது கவனம் தேவை மக்களே!

News April 28, 2025

சிந்து நதி விவகாரம்.. அச்சத்தில் பாக். விவசாயிகள்

image

சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால், அது பாகிஸ்தானை பாலைவனமாக்கும் என அந்நாட்டு விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். விவசாயம் இல்லாமல் மக்கள் பட்டினியில் உயிரிழப்பர் எனவும், மொத்த நாட்டு மக்களுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட தரமாட்டோம் என இந்தியா கூறிவருகிறது.

News April 28, 2025

சர்க்கரையை விரும்பி சாப்பிடுவீங்களா..?

image

டீ, காபியில் கொஞ்சம் சர்க்கரை தூக்கலாக போட்டு குடிப்பீங்களா? அதிகப்படியான சர்க்கரை நுகர்வு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எடை அதிகரிப்பதில் சர்க்கரைதான் முக்கிய காரணம். இவை, இதயத்தை தான் கடுமையாக பாதிக்கும். புற்றுநோய், மனச்சோர்வு, கல்லீரல் கொழுப்பு போன்றவற்றையும் வரலாம். மேலும், சிந்திக்கும் திறனையும் இது பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

News April 28, 2025

ஹாலிவுட் நடிகர் டேமியன் தாமஸ் காலமானார்

image

ஹாலிவுட் நடிகர் டேமியன் தாமஸ் (83) காலமானார். பிரிட்டனைச் சேர்ந்த அவர், டிவின்ஸ் ஆப் ஈவில், SHOGUN, பைரேட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் டிவின்ஸ் ஆப் ஈவில் படம், அவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது. supranuclear palsy எனும் ஒருவகை வாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் திடீரென மரணமடைந்துள்ளார். இதையடுத்து அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 28, 2025

பஹல்காமில் தீவிரவாதிகளுக்கு உதவியது யார்?

image

J & K பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உள்ளூர் ஆதரவாளர்கள் (காஷ்மீரி ஓவர்கிரவுண்ட் ஒர்க்கர்ஸ்) 15 பேர் உதவியதாக புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 5 பேர் அடையாளம் காணப்பட்டு அதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News April 28, 2025

இது ஒன்னு போதும்.. இனி AC, ஏர் கூலர் எதுவும் தேவையில்லை!

image

அமெரிக்காவின் Purdue பல்கலை. விஞ்ஞானிகள், தூய வெள்ளை நிற பெயிண்ட்டை உருவாக்கியுள்ளனர். இது 98.1% சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறன் கொண்டது என்பதால், பருவநிலை மாற்றம், ஆற்றல் சேமிப்பிற்கான தீர்வாக கருதப்படுகிறது. இந்த பெயிண்ட்டை பூசுவதன் மூலம், மின்சாரம் இல்லாமலேயே, அறையின் வெப்பநிலையை 8°F-ஆக குறைக்கலாம். புவி வெப்பமயமாதலை தடுக்க இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது.

error: Content is protected !!