India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கவரப்பேட்டையில் சரக்கு ரயில் மீது மைசூர் – தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இந்த விபத்து குறித்து NIA அதிகாரிகள் நடத்திய ஆய்வில், இது சதிவேலை என்பது தெரியவந்துள்ளது. விபத்து நிகழ்ந்த தண்டவாளத்தில் பல போல்ட்டுகள் கழட்டப்பட்டுள்ளதை NIA அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த சதிச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தமிழரின் உணவு பண்பாட்டில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது நெய். சுவை & மணத்திற்காக மட்டுமின்றி, உடல் நலத்திற்காகவும் பயன்படுத்தப்படும் அதில் தற்போது அதிகம் கலப்படம் செய்யப்படுகிறது. தூய நெய்யா என்பதை கண்டறிய, நெய்யை ஒரு வாணலியில் வைத்து சூடு செய்யுங்கள். அது உருகி பிரவுன் நிறத்தில் வந்தால் அது சுத்தமான நெய். அதனை தவிர்த்து, காலதாமதமாக உருகி, மஞ்சள் நிறத்தில் வந்தால் அது கலப்படமான நெய் ஆகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் குவித்த அணி, இன்னிங்ஸ் தோல்வி அடைய வாய்ப்பு மிக அரிது. ஆனால், சுவாரஸ்ய நிகழ்வாக, 1st Innings-ல் 556 ரன்கள் எடுத்த அணிகள் தோல்வி அடைந்துள்ளது 3 முறை பதிவாகியுள்ளது. 2003-ல் இந்தியாவுக்கு எதிராக 556 ரன் எடுத்த ஆஸி., தோல்வி அடைந்தது. 2012-ல் 556 ரன் எடுத்த வ.தேசமும் (Vs WI), 2024-ல் 556 ரன் குவித்த Pak அணியும் (Vs ENG) தோல்வி அடைந்தன.
கவரப்பேட்டையில் சரக்கு ரயிலும், மைசூர் தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி பயங்கர விபத்து நேரிட்டது. இதில் பயணிகள் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்ட போதிலும், யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இந்நிலையில், விபத்தில் சிக்கியவர்களின் உடைமைகளை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உறவினர்கள் பெற்றுக் கொள்ளலாம். 044 – 2533 என்ற எண்ணில் தொடர்புகொண்டு உடைமைகளின் விவரத்தை தெரிவித்து அதை வாங்கிக் கொள்ளலாம்.
இன்றைய இளைஞர்கள் அதிகம் கூடும் இடம் சாலையோர கையேந்தி பவன்கள்தான். சுத்தத்திற்கு இங்கு இடமில்லை என்றாலும், சுவையூட்டிகளின் ருசியில் சொக்கிப்போன இளைஞர்கள், அதை கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், டெல்லியில் ரோட்டு கடையில் சாப்பிட்ட இளைஞரின் வயிற்றில், உயிருடன் இருந்த கரப்பான் பூச்சியை டாக்டர்கள் அகற்றியுள்ளனர். உணவுடன் சேர்த்து கரப்பான்பூச்சியை அவர் விழுங்கி இருக்கலாம் என தெரிகிறது.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பெற்றோர், பிள்ளைகளை அதிகம் நேசிப்பீர்கள். மன்னிக்கும் மனப்பான்மை, மன உறுதி, எதிரிகளை வீழ்த்தும் சாதுர்யம், அரசியல் ஆர்வம், ஒழுக்கம், நீதிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் குணம் உள்ளவராக இருப்பீர்கள் என்கிறது நந்தி வாக்கியம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
அரசு ஹாஸ்பிடல்களில் டாக்டர்கள் இல்லையென நாம் போராடிக் கொண்டிருக்க, முற்றிலும் AI டாக்டர்கள் கொண்ட ‘Agent Hospital’ ஹாஸ்பிடலை பெய்ஜிங்கில் தொடங்கிவிட்டது சீனா. இங்கு, 14 AI டாக்டர்கள், 4 விர்ச்சுவல் நர்ஸ்கள் பணிபுரிகின்றனர். சில நாட்களிலேயே 10,000 பேருக்கு மேல் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வளவு பேருக்கு சிகிச்சை அளிக்க மனித டாக்டர்களுக்கு 2 ஆண்டுகள் ஆகுமாம். இதெல்லாம் இந்தியாவுல எப்போ வருமோ?
அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ நன்மைகள் உள்ளன. குறிப்பாக, இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கார்டியோ-பாதுகாப்பு பண்புகளைக் கொண்ட ருடின் மற்றும் டானின்கள் போன்ற கலவைகள் கறிவேப்பிலையில் உள்ளன. கொழுப்பைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தை குறைக்கவும் கறிவேப்பிலை உதவும்.
உ.பி.யைச் சேர்ந்த பெண்மணி அல்கா (42). இவரது 17 வயது மகள், ரவுடியை காதலித்து வந்திருக்கிறார். எவ்வளவு சொல்லியும் கேட்காததால், மகளை கொல்ல முடிவெடுத்த அல்கா, கூலிப்படை தலைவனுக்கு பணம் கொடுத்திருக்கிறார். இங்குதான் விதி விளையாடியுள்ளது. ஏனெனில், அந்த கூலிப்படை தலைவன்தான் அவரது மகளின் காதலன். விஷயம் கேள்விப்பட்டு கொதித்து போன மகள், காதலனுடன் சேர்ந்து தாயையே போட்டு தள்ளிவிட்டார். விதி வலியது.
‘சுரமருசி நில்லா உருத்திரச்சடைக்கே உரை’ என்ற குணவாகடப் பாடல் உருத்திரச்சடையின் ஆற்றலைப் போற்றுகிறது. லினாலூல், யுஜெனால், ஜெரானியால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதனை நீரிலிட்டுக் கொதிக்க வைத்துப் பருக, ஜூரம் குறைவதோடு வியர்வை வெளியேறி உடலும் மனமும் புத்துணர்வு அடைவதை உணர முடியும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.