India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மராட்டிய முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோய் குழு பொறுப்பேற்றுக் கொண்டது. மும்பையில் வாடகை வீடு எடுத்து தங்கி, கடந்த 2 மாதங்களாக பாபா சித்திக்கின் நடமாட்டத்தை கண்காணித்து, அவரை ஹரியானாவைச் சேர்ந்த குல்மெய்ல் சிங், உ.பி.யைச் சேர்ந்த தர்மராஜ் காஷ்யூப் சுட்டுக்கொன்றுள்ளனர். கொலை அரங்கேற்ற ஒரு கொலையாளிக்கு தலா ₹50,000 வீதம் பணம் தரப்பட்டுள்ளது.
இன்று 10 மணிக்கு <<14345105>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) பெங்கால் கெசட் 2) Employees Provident Fund 3) பியரி டெ கூபர்டின் 4) ஆறுமுக நாவலர் 5) ஒட்டகம் 6) டேனிஷ் குரோன் 7) ஆந்தை. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கும் பகிருங்கள்.இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
தமிழ்நாட்டில் 20%க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, நாளை, நாளை மறுநாள் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டதால், மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் சொன்ன வார்த்தையை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பெற்றோர், உடன்பிறந்தோர் மீது அன்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டத் தெரியாது. சமூகச் சீர்திருத்த சிந்தனை, இரக்க சுபாவம், பேச்சாற்றல், பல்துறை விஷயஞானம், தன்னடக்கம் உள்ளவராக இருப்பீர்கள் என்கிறது நந்தி வாக்கியம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
குவென்டின் டரான்டினோ இயக்கிய கில் பில் மாதிரியான படங்களை இந்தியாவில் எடுக்கவோ, வெளியிடவோ முடியாது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக கூறியுள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தான் எடுக்க நினைத்த ஆக்ஷன் திரைப்படத்தை இன்னும் எடுக்கவில்லை எனக் கூறிய அவர், ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை அப்படியே எடுக்க முடியாது என ‘கைதி’ படத்தின் சென்சாரின்போது தெரிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் நோக்கி வரக்கூடும். இதனால், நாளை முதல் டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் நாளை மதியம் முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை கனமழை பெய்யலாம். எனவே, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கவரப்பேட்டை ரயில் விபத்தில் உயிரிழப்பு ஏற்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பெட்டிகள் கோரமாக சிதறி கிடந்தாலும் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர். விரைவு ரயில் மோதிய சரக்கு ரயில் காலியாக இருந்ததால், அதன் அதிர்வுகளை சரக்கு ரயில் பெற்றுக்கொண்டுள்ளது. ஒருவேளை சரக்கு ரயிலில் காலியாக இல்லாமல் இருந்தால், மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்க கூடும்.
பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். மழை பாதிப்புகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் TN ALERT என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை அறிமுகம் செய்த உதயநிதி, அடுத்த சில நாள்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிமாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
₹2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட நிலையில், தற்போது ₹137 கோடி மதிப்புள்ள ₹200 நோட்டுக்களை RBI திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்தமாக ₹200 நோட்டுகள் திரும்பப் பெறப்படுமா அல்லது செல்லாதவை என அறிவிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், ₹200 நோட்டுக்கள் அதிக தேய்மானம் அடைந்ததுடன் கிழிந்ததால் அவை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர்களின் நிலப்பரப்பான மெட்ராஸ் மாகாணம், ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் அடைய முக்கிய காரணமாக இருந்தவர் தியாகி சங்கரலிங்கனார். மொழிவாரி மாநில உருவாக்கம், பூரண மது ஒழிப்பு உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி 27.7.1956 அன்று உண்ணாவிரத அறப்போராட்டத்தை தொடங்கினார். கொள்கைக்காக உலகத்திலேயே அதிக நாட்கள் (76) உண்ணாது போராடி (13.10.1956) உயிர் நீத்த அந்த மாமனிதரை நினைவிலேந்தி வீரவணக்கம் செலுத்துவோம்.
Sorry, no posts matched your criteria.