News October 13, 2024

வீடியோவில் இருப்பது யார்? ஓவியா சொன்ன பதில்

image

நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ என்ற பெயரில் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது நீங்களா? இல்லையா? என ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில் ஓவியாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்துள்ள ஓவியா, “அது ஒரு புதிராகவே இருக்கட்டும்” என பதிலளித்துள்ளார். மேலும், அந்த வீடியோ தொடர்பாக அவர் சைபர் கிரைமில் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News October 13, 2024

விஜய் போட்ட உத்தரவு! 234 தொகுதிகளுக்கும் அறிவிப்பு

image

தவெக மாநாட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தவெக மாநாட்டிற்காக 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்களை நியமித்து விஜய் உத்தரவிட்டுள்ளார். மாநாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு தொடர்பான அறிவிப்பை விஜய் நேற்று வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் அக்.27 அன்று நடைபெறுகிறது.

News October 13, 2024

ஆங்கிலம் அறிவோம்: Patronize Vs Patriotism

image

Patronize என்பதற்கும் Patriotism என்பதற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? ஒருவரை அனுதாபத்துடன் அணுகி, அவருக்கு உதவும் வகையில் நடந்துகொண்டால் Patronize செய்வதாகப் பொருள். Patriotism என்றால் (National Pride) தேசபக்தியைக் குறிக்கும். Patronize என்ற லத்தின் சொல்லில் இருந்து Patronisare என்பதும், Patriotism என்ற கிரேக்க சொல்லில் இருந்து Pater என்பதும் உருவானதாக சொற்பிறப்பியல் அகராதி கூறுகிறது.

News October 13, 2024

உலக நாடுகளு‌ம் நாணய‌ங்களு‌ம்

image

➤இந்தியா – ரூபாய் (₹) ➤இங்கிலாந்து – பவுண்ட் (£) ➤அமெரிக்கா – டாலர் ($) ➤சீனா – யுவன் (CN ¥) ➤பாகிஸ்தான் – ரூபாய் (Re) ➤ரஷ்யா – ரூபிள் (₽) ➤மியான்மர் – கியாடா (MMK) ➤துருக்கி – துருக்கிஷ் லிரா (₺) ➤இத்தாலி – லிரா (ITL) ➤ஜப்பான் – யென் (JP ¥) ➤ஸ்வீடன் – குரோனர் (kr) ➤மலேசியா – ரிங்கிட் (MYR) ➤ஆஸ்திரியா – ஷில்லிங் (öS) ➤ஜெர்மனி – ரிஷ்மார்க் (ℛℳ) ➤பெல்ஜியம் – பெல்ஜியன் பிரான்க் (F) ➤கிரீஸ் – யூரோ(€)

News October 13, 2024

உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்ததா?

image

PM கிசான் 18வது தவணை பணம் ₹2,000 அக்டோபர் 5 ஆம் தேதி வெளியானது. நாடு முழுவதும் தகுதியான கோடிக்கணக்கான விவசாயிகள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். இந்நிலையில் 18வது தவணை பணம் பலரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், eKYC முடிக்காதவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. இந்த தவணை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதா? என்பதை <>இங்கே<<>> க்ளிக் செய்து, பதிவெண்ணை உள்ளிட்டு தெரிந்துகொள்ளவும்.

News October 13, 2024

கனமழையை சமாளிக்க 6 முக்கிய TIPS

image

1. டார்ச் லைட் வைத்திருத்தல் அவசியம். 2) பால், பிரட், மருந்துகள், குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வையுங்கள். 3) மழை ஆரம்பிக்கும் போதே வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களை ஆப் செய்ய வேண்டும். 4) போதிய பணம் கையிருப்பில் இருப்பது நல்லது. ஏடிஎம்களை நம்பியிருக்க வேண்டாம். 5) நூடுல்ஸ், சேமியா, ரவையை வாங்கிக் கொள்ளுங்கள். 6) வீட்டில் குடிநீர் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

News October 13, 2024

ஏழு பிறவிகள்!

image

மாமுனிவர் அகத்தியர் பெருமான்
கர்ம காண்டம் நூலில் கூறியது…
1. கடவுள் மனிதனாகப் பிறப்பது
2.மனிதன் மனிதனாகப் பிறப்பது
3.மிருகம் மனிதனாகப் பிறப்பது
4.பறவைகள் மனிதனாகப் பிறப்பது
5.நீர் வாழ்வன மனிதனாகப் பிறப்பது
6.பூச்சி புழு மனிதனாகப் பிறப்பது
7.மரம் செடிகள் மனிதனாகப் பிறப்பது

News October 13, 2024

Health Tips: தொப்பையைக் குறைக்க…

image

தொப்பையைக் குறைக்க டயட்டீஷியன்ஸ் கூறும் சிம்பிள் டிப்ஸ் இதோ: 1) மைதா, சர்க்கரை, வனஸ்பதி போன்றவற்றை அறவே தவிர்த்துவிடுங்கள். 2) புரோபயாடிக் உள்ள தயிர், நீர்மோர், பழைய சாதம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள். 3) ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள மீனை உட்கொள்ளுங்கள். 4) நார்ச்சத்து அதிகமுள்ள பேரிக்காய் போன்ற பழங்களை சாப்பிடுங்கள். 5) நடை & உடற்பயிற்சி செய்யுங்கள். விரைவில் நிச்சயம் மாற்றத்தை உணர்வீர்கள்.

News October 13, 2024

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு RED ALERT: !

image

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக தீவிர கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. முன்னதாக, சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

News October 13, 2024

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்: சீமான்

image

“எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற நிலையை உருவாக்குவதுதான் நமது உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், உணர்வுப்பூர்வமாக அவரது நினைவை என்றென்றும் போற்றும் வகையில் செயல்படுவோம் என ஒவ்வொரு தமிழர்களும் உறுதி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!