News October 16, 2024

அதி தீவிர கனமழைக்கான வாய்ப்பு குறைவு

image

சென்னையில் மழை தொடரும் என்றும், அதி தீவிர கனமழைக்கான ஆபத்து குறைந்துள்ளது எனவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அதி தீவிர கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு முதல் லேசான முதல் மிதமான மழையே பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் கனமழை பெய்கிறதா?

News October 16, 2024

இசை அரக்கன் ராக் ஸ்டார் பிறந்தநாள்

image

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இசை நாயகனாக வலம் வரும் அனிருத், முன்னணி நாயகர்களின் விருப்பமானத் தேர்வாக இருந்து வருகிறார். ரஜினி, கமல் தொடங்கி சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பெரும்பாலான ஸ்டார்களின் படங்களுக்கு இந்த ராக் ஸ்டார் இசையமைத்துள்ளார். இரைச்சல் நாயகன் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், 2K கிட்ஸ்களின் இசை அரக்கனாக திகழும் இவர், தொட்டதெல்லாம் ஹிட்டுதான். HBD அனிருத்.

News October 16, 2024

இந்திய மகளிர் அணிக்கு புதிய கேப்டன்?

image

WC T20 தொடரில் AUS & NZ அணிகளிடம் ஏற்பட்ட தோல்வியால் IND அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இந்நிலையில் IND அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுரின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்க தேர்வுக் குழு & தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ சந்திக்க உள்ளது. அவர் தொடர்ந்து அணியின் முக்கிய உறுப்பினராக இருப்பார். ஆனால் அணியை வழி நடத்த புதிய உத்வேகத்துடன் கூடிய நபரை பிசிசிஐ தேர்வு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News October 16, 2024

3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை கொட்டும்

image

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவித்துள்ளது.

News October 16, 2024

1,000 டாஸ்மாக் கடைகளில் 2 விற்பனை பிரிவுகள்

image

1,000 மதுக்கடைகளில் 2 விற்பனை பிரிவுகளை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் தினமும் ரூ.2 லட்சத்திற்கும் மேல் மதுவிற்பனையாகும் “ஏ” பிரிவு” கடைகளில் 2 விற்பனை பிரிவுகளை அமைக்க ஏற்பாடு செய்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க நீண்ட வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக வாங்க முடியும்.

News October 16, 2024

பாதங்களில் வெடிப்பா? இது உங்களுக்குதான்

image

கால் பாதங்களில் சிலருக்கு வெடிப்பு பிரச்னை எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து டாக்டர்கள் தெரிவிப்பதை தெரிந்து காெள்ளலாம். வைட்டமின் ஏ சத்தானது தோல் தாெடர்பான பிரச்னையை சரி செய்யும். அந்தச் சத்து பற்றாக்குறை எனில் இதுபோன்ற பிரச்னை ஏற்படும். ஆதலால் வைட்டமின் ஏ சத்து கிடைக்க கீரை வகைகள், கேரட், முட்டையை உணவில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News October 16, 2024

சமூகநீதியின் கருப்பு வரலாறு பேசும் படம் ‘நந்தன்’

image

உள்ளாட்சிகளில் பட்டியலினத்தவருக்கான உரிமைகளை அரசும், சமூகமும் உறுதி செய்ய வேண்டுமென அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘நந்தன்’ திரைப்படம் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். உள்ளாட்சிகளின் வாயிலை நந்தன்களுக்கு சட்டம் திறந்துவிட்டாலும் சமூகநீதிக்கு எதிரானவர்கள் மூடிவிடுவதாகவும், சமூகநீதியின் கருப்பு வரலாற்றை அப்படம் பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News October 16, 2024

கூகுள் குரோம், ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு அரசு எச்சரிக்கை

image

கூகுள் குரோம், ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு மத்திய கணினி உடனடி நடவடிக்கை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. குரோம் 129.0.6668.100, 129.0.6668.89 பிரவுசர்கள், ஆன்ட்ராய்டு 12, 12L, 13, 14, 15 ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு அம்ச குறைபாடுகளை பயன்படுத்தி கணினிகள், மொபைலை ஹேக்கர்கள் ஹேக் செய்து தரவுகளை திருடக்கூடும். இதைத் தவிர்க்க உடனடியாக அதை அப்டேட் செய்யும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. SHARE IT.

News October 16, 2024

ஸ்மார்ட்போன் சார்ஜ் போடும் முறை தெரியுமா?

image

ஸ்மார்ட்போன் சார்ஜ் போடும் முறை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் சில ஆலோசனைகளை அளித்துள்ளனர். 1) 20%ஆக இருக்கும்போது சார்ஜ் போடுவது நல்லது. இதனால் பேட்டரி ஆயுட்காலம் நீடிக்கும். 2) சார்ஜ் போடுகையில் போனில் கேமிங், வீடியோ பார்ப்பதை தவிர்க்க வேண்டும் 3) 80%-90% சார்ஜ் இருந்தால் போதுமானது 4) 100%க்கும் மேல் சார்ஜ் போடக் கூடாது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News October 16, 2024

விஷப்பூச்சி நுழைந்து விட்டதா? கவலை வேண்டாம்

image

மழைக்காலம் என்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள், பொதுமக்கள் வசிப்பிடங்கள், கார் போன்ற வாகனங்களில் நுழைய வாய்ப்புள்ளது. இதுபோன்ற நேரத்தில் தயக்கமின்றி தீயணைப்புத் துறை, வனத்துறையிடம் மக்கள் உதவி கோரலாம். இதற்காக, சென்னை பகுதி மக்களுக்கு 044 – 22200335, 1903 ஆகிய எண்களும், மற்ற மாவட்ட மக்களுக்கு 1077 என்ற அவசர உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

error: Content is protected !!