News October 16, 2024

இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் இவர் தான்

image

சமீபத்தில் ஜாம்நகரின் மகாராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா பெரிய கோடீஸ்வரராக மாறியுள்ளார். அரச குடும்ப வாரிசாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அரண்மனை உள்ளிட்ட அனைத்து சொத்துகளும் அவர் வசம் சென்றுள்ளது. இதையடுத்து ₹1,450 கோடிக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இதன்மூலம் சச்சின் (1,390 கோடி), கோலி (1,090 கோடி), தோனி (1,040 கோடி) ஆகியோரின் சொத்து மதிப்பை விஞ்சியுள்ளார்.

News October 16, 2024

உமர் அப்துல்லாவுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து

image

ஜம்மு-காஷ்மீர் CM ஆகப் பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு, தமிழக CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X தளத்தில், ”மழை வெள்ள மீட்புப் பணி காரணமாக, பதவியேற்பு விழாவில் என்னால் பங்கேற்க முடியவில்லை. எனக்கு பதிலாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பங்கேற்றார். மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்” என பதிவிட்டுள்ளார்.

News October 16, 2024

ஆங்கிலம் அறிவோம்: Dagger Vs Knife

image

Dagger, Knife ஆகிய இரு சொற்களும் ஆயுதத்தையே குறிக்கின்றன. இருந்தாலும் இவை இரண்டும் ஒன்றல்ல.
Knife – கத்தி என்பது (காய்கறி) உயிரற்ற பொருள்களை வெட்ட பயன்படுத்தப்படுவது. Dagger – குறுவாள் என்பது உயிருள்ளவர்களைக் குத்த பயன்படுத்தப்படும் கருவியை குறிக்கும். knífr என்ற ஜெர்மானிய சொல்லில் இருந்து Knife என்பதும், dague என்ற பிரெஞ்ச் சொல்லில் இருந்து Dagger என்பதும் உருவானதாக சொல் அகராதி கூறுகிறது.

News October 16, 2024

ஆளுநரும் திமுக அரசும் புது காதலர்கள்: செல்லூர் ராஜூ

image

திமுக அரசும், ஆளுநரும் புது காதலர்கள் போல இணக்கமாக உள்ளதாக, அதிமுக Ex மினிஸ்டர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், ஆளுநர் எப்போதும் அரசின் குறைகளை சுட்டிக்காட்டி, மக்கள் குறைகளை எடுத்துச்சொல்லுவார்; ஆனால் தற்போது மாறி இருக்கிறார் என்றார். மேலும், திடீரென PM மோடியை CM ஸ்டாலின் சந்திக்கிறார், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறார்கள் எனவும் சந்தேகம் தெரிவித்தார்.

News October 16, 2024

இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து: அதிர்ச்சி தகவல்

image

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு பெரிய அளவில் தாக்கவுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் ICMR ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, இந்தியாவில் 2022 முதல் 2045 வரை புற்றுநோய் பாதிப்பும், அதனால் நிகழும் மரணங்களும் மிகக் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வாய் மற்றும் மார்பக புற்றுநோய் அதிகமாக தாக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2024

புற்றுநோய் ஆபத்தை தடுக்கும் வழிமுறைகள்!

image

வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சிறு சிறு மாற்றங்கள், நம்மை கேன்சரில் இருந்து காக்கும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ★ நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி ★ தரமற்ற ஓட்டல் உணவுகளுக்கும், ஃபாஸ்ட் ஃபுட்களுக்கும் NO ★ புகையிலை, கூல்டிரிங்ஸ், மதுப்பழக்கத்தை கைவிடுதல் ★ இரவில் 8 மணிநேர தூக்கம் ★ பாக்கெட் உணவுகளை முற்றிலும் தவிர்த்தல் ★ மனநலத்தை சீராக வைத்திருத்தல்

News October 16, 2024

வருகிறது ராயல் என்ஃபீல்டின் இ-பைக்?

image

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது முதல் இ-பைக்கை நவம்பர் 4ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்நிறுவனம் டீசர் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வீடியோவை பார்க்கும்போது அது சிங்கிள் சீட்டராக இருக்கலாம் என்றும், கிளாசிக் மாடலாக இருக்கும் என்றும் தெரிகிறது. வீடியோவில் இ- பைக் குறித்து ஏதும் அறிவிக்காததால் பைக் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News October 16, 2024

Motor News: சந்தை வந்த பென்ஸின் E-Class LWB கார்

image

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், E-Class LWB கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் பிரேக் & அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே, வீடியோ கான்பரன்சிங் வசதி இடம்பெற்றுள்ளன. 5 புது வண்ணங்களில் E200, E220D & E450 ஆகிய 3 வேரியண்ட்களில் கிடைக்கும் இதன் ஷோரூம் விலை ₹79 – ₹93 லட்சமாகும்.

News October 16, 2024

அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள்

image

மகளிர் T20 உலகக் கோப்பையில் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் AUS, NZ, SA, WI ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியா, பாக்., இலங்கை, இங்கிலாந்து, வ.தேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் லீக் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளன. அரையிறுதிப் போட்டிகள் நாளை (அக்.17) மற்றும் அக்.18 ஆகிய தேதிகளிலும், இறுதிப் போட்டி அக்.20 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

News October 16, 2024

கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனியின் ‘ககன மார்கன்’

image

விஜய் ஆண்டனி தயாரித்து, நடிக்கும் ‘ககன மார்கன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அட்டக்கத்தி, சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றிய லியோ ஜான் பால் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

error: Content is protected !!