News October 17, 2024

கோலி சாதனையை முறியடிப்பாரா ரோஹித்?

image

கோலி தலைமையிலான முந்தைய இந்திய அணி 14 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. ரோஹித் தலைமையில் இந்திய அணி 12இல் வென்றுள்ளது. நியூசி.க்கு எதிரான 3 டெஸ்டுகளிலும் வென்றால், 15 போட்டிகளில் வென்ற இந்திய அணி கேப்டன் என்ற சாதனையை ரோஹித் புரிவார். இதேபோல் 248 ரன்கள் குவித்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 காலத்தில் 1,000 ரன் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோஹித் படைப்பார்.

News October 17, 2024

இன்று காலை கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

image

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையை கடக்கும் என IMD தெரிவித்துள்ளது. புதுச்சேரி- நெல்லூர் இடையே வட தமிழகம், தென் ஆந்திர கடலோர பகுதியில் இன்று அதிகாலை கரையை கடக்கும் என்று IMD கூறியுள்ளது. பிறகு அது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதையொட்டிய வடதமிழக பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்கும் எனவும் கணித்துள்ளது. SHARE IT.

News October 17, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 17, 2024

கோதுமைக்கான MSP அதிகரிப்பு

image

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) மத்திய அரசு குவிண்டாலுக்கு ₹150 அதிகரித்துள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரபி பருவ 6 வகை பயிர்களுக்கான MSP-யை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. கோதுமைக்கு ₹2,425ஆகவும், கடுகுக்கு ₹300 உயர்த்தப்பட்டு ₹5,950, சூரியகாந்திக்கு ₹140 உயர்த்தப்பட்டு ₹5,940ஆக நிர்ணயிக்கப்பட்டது. மசூர் பருப்பு (₹275), கொண்டை கடலைக்கும் (₹210) அதிகரிக்கப்பட்டது.

News October 17, 2024

நீங்களே நம்பர் 1 வீரர்.. வில்லியர்சுக்கு கோலி புகழாரம்

image

தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டி-வில்லியர்சே உண்மையான நம்பர் 1 கிரிக்கெட் வீரர் என்று விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். ICC ஹால் ஆப் பேம் வீரராக டி-வில்லியர்ஸ் நேற்று அறிவிக்கப்பட்டார். இதையொட்டி கடிதம் எழுதியுள்ள கோலி, தாம் இணைந்து விளையாடிய வீரர்களில் வில்லியர்சே சிறந்தவர். அதிரடி வீரராகவே டி-வில்லியர்சை அறிவர். ஆனால் உண்மையில் சூழலுக்கு ஏற்ப அவர் விளையாடுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

News October 17, 2024

22 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

image

காற்றழுத்த தாழ்வு மண்டலம் 22 கி.மீ. வேகத்தில் நகர்வதாக IMD தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் சென்னையில் இருந்து 80 கி.மீ., நெல்லூரில் இருந்து 150 கி.மீ. தூரத்தில் நிலை காெண்டு இருப்பதாகவும், இது மேற்கு வட மேற்கில் நகர்ந்து, புதுச்சேரி- நெல்லூர் இடையே வட தமிழகம், தென் ஆந்திர கடலோர பகுதியில் இன்று காலை கடந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்கும் எனவும் கணித்துள்ளது.

News October 17, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: அன்புடைமை ▶குறள் எண்: 80 ▶ குறள்: அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு ▶பொருள்: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும். SHARE IT.

News October 17, 2024

முடிந்தால், இந்த பெயரை வாசியுங்கள்

image

உலகில் வித்தியாசமான பெயர்களுக்கு பஞ்சமில்லை. அந்த வரிசையில், நியூசிலாந்து நாட்டின் மலைக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் ஆச்சரியப்படுத்துகிறது. பொரங்காவில் உள்ள அந்த மலைக்கு 85 எழுத்துக்களில் TAUMATAWHAKATANGIHANGAKOAUAUOTAMATEAPOKAIWHENUAKITANATAHU என பெயரிடப்பட்டுள்ளது. இது உலகின் நீளமான பெயர் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த பெயரை வாசியுங்கள் பார்க்கலாம்.

News October 17, 2024

மழையை காணோம்.. அன்புமணி விமர்சனம்

image

ரெட் அலர்ட் விடுத்தும், ஒரு சொட்டு மழையை கூட காணோம் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், இன்று ரெட் அலர்ட் என்று வானிலை முன்னறிவிப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால் மாலை வரை ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அரசும் மக்களும் தயாராகவும், திட்டமிடலுக்கு ஏற்ற வகையிலும், வானிலை அறிவிப்புகள் துல்லியமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

News October 17, 2024

டாடா அணிந்த வாட்சின் விலை தெரியுமா?

image

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக திகழ்ந்த போதிலும் கடைசி வரை எளிமையாகவே வாழ்ந்தார். சுவிட்சர்லாந்து ராணுவ வாட்சான விக்டோரினேக்ஸ் பிராண்ட் வாட்சையே அவர் விரும்பி அணிந்தார். அதன் மதிப்பு ₹10 ஆயிரமே ஆகும். மாத சம்பளம் வாங்குவோர் கூட இன்று பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய வாட்சை அணியும் நிலையில், டாடா எந்தளவு எளிமையாக வாழ்ந்தார் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

error: Content is protected !!