News October 17, 2024

தள்ளிப்போகிறது ‘லப்பர் பந்து’ OTT ரிலீஸ்

image

‘லப்பர் பந்து’ படத்தின் ஓடிடி தேதியை ஒத்திவைப்பதாக சிம்ப்ளி சவுத் அறிவித்துள்ளது. அதில், ”லப்பர் பந்து இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், அதன் ஸ்ட்ரீமிங் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். புதிய ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது. இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் சிம்ப்ளி சவுத்தில் வெளியாக இருந்தது. இதனால் இந்தியாவில் Hotstarலில் நாளை வெளியாகாது.

News October 17, 2024

ரயில்வேயில் 3,445 காலியிடங்கள்.. உடனே APPLY

image

ரயில்வேயில் 3,445 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைய இன்னும் 3 நாள்களே உள்ளன. டிக்கெட் கிளார்க், அக்கவுண்ட் கிளார்க், ஜூனியர் கிளார்க், ட்ரெயின் கிளார்க் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பப்பதிவு செப்.21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சம்பளம்: ரூ.19,900 – ரூ.21,700. வயது வரம்பு: 18 – 33. SHARE IT.

News October 17, 2024

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் அமைப்பு கூண்டோடு கலைப்பு

image

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் அமைப்பின் அனைத்து பொறுப்புகளும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மகளிர் காங்கிரசின் தலைவி, அல்கா லம்பா உத்தரவின் பேரில், மகளிர் காங்கிரசின் அனைத்து மட்டத்திலுமான மாநில, மாவட்ட, வட்ட, வட்டார, பஞ்சாயத்து கமிட்டிகள் கலைக்கப்பட்டுள்ளன. அத்துடன், உறுப்பினர் சேர்க்கை குழுவின் புதிய உறுப்பினரை, புதிய கமிட்டி விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 17, 2024

மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டால் என்ன?

image

மசூதிக்குள் “ஜெய் ஸ்ரீராம்” என கோஷம் எழுப்பியதாக இருவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை கர்நாடக ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறுவதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். மேலும், எல்லா செயல்களுக்கும் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி வழக்கு பதிவு செய்ய முடியாது என்ற உச்சநீதிமன்ற கருத்தையும் அவர் குறிப்பிட்டார்.

News October 17, 2024

உண்மை சம்பவத்தை அலசும் ’அலங்கு’ திரைப்படம்

image

தமிழக – கேரள எல்லைப் பகுதியில் கொட்டப்படும் கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து ‘அலங்கு’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ’உறுமீன்’, ’பயணிகள் கவனிக்கவும்’ போன்ற படங்களை இயக்கிய S.P. சக்திவேல் இயக்கியுள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக குணாநிதி நடித்துள்ளார்.

News October 17, 2024

ITBP-யில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிங்க

image

இந்தோ-திபெத் படைப்பிரிவில் 345 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர்ஸ், ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர்ஸ், மெடிக்கல் ஆபீசர்ஸ் ஆகிய பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவ. 14ஆம் தேதி கடைசி நாளாகும். அதிகபட்ச வயது வரம்பு 50, 40, 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

News October 17, 2024

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

5 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்டை நேற்றிரவு IMD வாபஸ் பெற்றது. இதையடுத்து வெளியிட்ட அறிவிப்பில், இன்று முதல் 6 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்றும், இன்று திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, வேலூரில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது. SHARE IT

News October 17, 2024

பிளாஸ்டிக் ஆதார் கார்டு வைத்துள்ளீர்களா?

image

ஆதார் வீணாகாமல் இருக்க சிலர் பிளாஸ்டிக்கில் அதை வாங்கி வைத்திருப்பர். இதை இன்டர்நெட் மையங்களிலோ, கடைகளிலோ வாங்கக் கூடாது. அப்படி வாங்கினால் அதில் போதிய பாதுகாப்பு அம்சம் இருக்காது என்பதால் அதை UIDAI அங்கீகரிக்கவில்லை. UIDAI மூலம் அளிக்கப்படும் பாதுகாப்பு அம்சம் கொண்ட பிளாஸ்டிக் ஆதாரே அனைத்து இடங்களிலும் செல்லும். அதை ஏற்க மாட்டோம் என அரசு அலுவலகங்களால் தெரிவிக்க முடியாது. SHARE IT

News October 17, 2024

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை!

image

சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விடுக்கப்பட்ட அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் நேற்றிரவு விலக்கிக் காெண்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்றும், அரசு அலுவலகங்களும் வழக்கம் போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.

News October 17, 2024

2ஆவது முறையாக இன்று ஹரியானா CM ஆகிறார் சைனி

image

ஹரியானா CM ஆக 2ஆவது முறையாக பாஜக மூத்தத் தலைவர் நயாப் சைனி இன்று பதவியேற்கிறார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வென்றது. இதையடுத்து நேற்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக சைனி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஆளுநரை சந்தித்து அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது ஆளுநர் கேட்டு கொண்டதற்கிணங்க இன்று அவர் பதவியேற்கிறார்.

error: Content is protected !!