India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து, புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ஒரு சவரன் ₹57,280க்கும், கிராமுக்கு ₹20 உயர்ந்து ஒரு கிராம் ₹7,160க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ₹103க்கும், கிலோ ₹1,03,000க்கும் விற்கப்படுகிறது.
மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு அதிமுக நிர்வாகிகள் நேரில் வந்தார்களா? என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த அவர், முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நிவாரணப் பணிகளை மேற்கொண்டதாக நினைவுகூர்ந்தார். அத்துடன், இபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்வதற்கே தகுதியில்லாதவர் என்றும் சாடினார்.
நடிகை ராதிகா ஆப்தே கர்ப்பமாக இருப்பதை முதல்முறையாக வெளிப்படுத்தியுள்ளார். BFI லண்டன் திரைப்பட விழாவில் பங்கேற்ற அவர், கர்ப்பமாக இருப்பதைக் கண்டதும் பலரும் ஆச்சரியம் அடைந்தனர். பிரிட்டிஷ் வயலின் கலைஞரான பெனடிக்ட் டெய்லரை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொது வெளியில் வெளியிட விரும்பாதவர். இந்நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது.
மழைக்காலத்தில் ஏற்படும் சைனஸ், இருமல், மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைவலி, உடல்வலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் பஞ்ச மூலிகை கசாயத்தைப் பருகலாம் என சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. தும்பை, தூதுவளை, துளசி, வெற்றிலை, கற்பூரவள்ளி, இஞ்சி, பூண்டு, சிறிதளவு இந்துப்பு சேர்த்து நீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி, சிட்டிகை மிளகு சேர்த்தால் பஞ்ச மூலிகை கசாயம் ரெடி. இதை காலையில் மட்டுமே பருக வேண்டும்.
தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் காலியாகவுள்ள 26 ஒப்பந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் & மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: Any UG Degree, B.E, B.Tech, B.Arch. வயது வரம்பு: 21-35. சம்பளம்: ₹20,000 – ₹1,00,000. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.20. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
➤ISSF World Cup: ஆடவர் 50 மீ. ரைபிள் 3 நிலை பிரிவில் இந்திய வீரர் அகில் ஷியோரன் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். ➤செஸ் மாஸ்டர்ஸ் தொடர்: காலிறுதியின் ‘டை பிரேக்கர்’ சுற்றில் விஸ்வநாதன் ஆனந்தை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். ➤IPL 2025: MI அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பராஸ் நியமிக்கப்பட்டார். ➤’Hall of Fame’ பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை நீத்து டேவிட்டை சேர்த்து ICC கௌரவித்தது.
பள்ளி மாணவர்களின் பெற்றோரை குறிவைத்து மோசடி நடப்பதால், விழிப்புணர்வோடு இருக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. +2 மாணவர்களுக்கு தொழில் பயிற்சிக்கு பின் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும், பள்ளியில் ஆதார் புதுப்பிப்பு முகாம் நடப்பதாகவும் பெற்றோரிடம் வங்கிக்கணக்கு விவரம் பெற்று, அதில் உள்ள பணத்தை பறிப்பதாக குறிப்பிட்டு, பள்ளிக்கல்வித்துறை இதுபோன்ற விவரங்களை போனில் கேட்காது என்றும் தெரிவித்துள்ளது.
பல்லவ பேரரசால் நிர்மாணிக்கப்பட்ட முதல் குடவரை சிவன் கோயில் என்ற பெருமைக்கு உரியது திருவண்ணாமலை சீயமங்கலம் பல்லவேஸ்வரம் திருக்கோயில். பறந்து விரிந்த ஏரி, சுற்றிலும் குன்றுகள் சூழ்ந்த இடத்தில் அமைந்த, 1400 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் தான் ஆனந்த தாண்டவமாடும் முதல் ஆடவல்லான் சிலை செதுக்கப்பட்டுள்ளது. 11 பிரதோஷ நாட்களுக்கு இங்கு வில்வ இலை சாற்றி வழிபட்டால் கலைகள் அனைத்தும் கைகூடும் என்பது ஐதீகம்.
➤இத்தாலியில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய அந்நாட்டின் பிரதமர் மெலோனி தடை விதித்தார். ➤உக்ரைனுக்கு $425 மில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க USA ஒப்புதல் அளித்தது. ➤இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கானா நகர மேயர் காஹில் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ➤கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு பாக். நேரடி ஆதரவு அளிப்பதாக அந்நாட்டின் CSIS உளவு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
சென்னை PVR திரையரங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘வேட்டையன்’ படம் பார்த்து ரசித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. த.செ.ஞானவேல் இயக்கத்தில், ரஜினி, அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. முன்னதாக, இப்படத்தை விஜய் திரையரங்கில் பார்த்த வீடியோ வைரலானது.
Sorry, no posts matched your criteria.