India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
NZ-க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததுதான் தவறு என ரோஹித் ஷர்மா ஒப்புக் கொண்டுள்ளார். மைதானத்தை முழுமையாக ஆராயாமல், தான் தப்புக்கணக்கு போட்டு விட்டதாகவும், 46 ரன்களில் மடிந்தது தன்னைக் காயப்படுத்தியதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், சில நேரங்களில் திட்டமிட்டபடி செயல்பட முடியாமல் போகும். அதுபோன்று இன்றைய நாள் மோசமாக அமைந்ததாகவும் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று இரவு 10 மணி வரை திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் அதிமுக நிர்வாகியிடம் HC சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் ADMK MLAக்கள் 40 பேர் திமுகவுக்கு வர இருந்ததாக அப்பாவு கூறிய நிலையில், அதை எதிர்த்து அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார். இதை ரத்து செய்யக்கோரி அப்பாவு வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த பேச்சு எப்படி அவதூறில் வரும் என்று அதிமுக நிர்வாகியிடம் HC கேள்வி எழுப்பியுள்ளது.
விஜய் கட்சியில் சேரவில்லை என்று நடிகர் தாடி பாலாஜி விளக்கமளித்துள்ளார். அண்மையில் புஸ்ஸி ஆனந்தை அவர் சந்தித்த வீடியோ வைரலானது. இதையடுத்து, அவர் தவெகவில் இணைந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதனை தாடி பாலாஜி மறுத்துள்ளார். “புஸ்ஸி ஆனந்த் கூப்பிட்டாரு. போனேன். மாநாட்டுக்கு நீங்க ஒர்க் பண்ணனும்னு விஜய் சொன்னதா சொன்னாரு. பண்ண ஆரம்பிச்சிட்டேன். மத்தபடி, கட்சியிலெல்லாம் சேரலைங்க” என்றார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக 4 டெஸ்ட் மற்றும் 40 ODI போட்டிகளில் விளையாடியுள்ள அவர், சிஎஸ்கே அணிக்காகவும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முன்னாள் தமிழக அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி 3 முறை கோப்பையை வெல்ல காரணமாகவும் இருந்துள்ளார்.
பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பயனர்களும் பயன்பெறும் வகையில் 3 புதிய அம்சங்களை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. 1.வீடியோக்களின் வேகத்தை 0.05 புள்ளிகள் குறைக்கும் அம்சம். 2.குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தானாகவே APP-ல் இருந்து வெளியேறி ஸ்கிரீன் ஆஃப் ஆகும் ஸ்லீப்பர் டைம் வசதி. 3.IOS தளங்களில் வீடியோவை Full Screen-ல் பார்க்கும் போது Browsing செய்யும் அம்சம்.
இயக்குநர் வெங்கட் பிரபு மட்டும் தான் தனது உதவி இயக்குநர்களுக்கு தினப்படியுடன் சேர்த்து மாத சம்பளத்தை கரெக்டாக வழங்கி வருகிறார். இதை அவரது சகோதரர் பிரேம்ஜி உறுதி செய்துள்ளார். 75 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் வேறு எந்த இயக்குநரும் இதுபோல தொடர்ந்து செய்ததில்லை என நெட்டிசன்கள் VP-ஐ புகழ்ந்து வருகின்றனர். உணவுக்கும், வீட்டு வாடகைக்கும் கஷ்டப்படும் உதவி இயக்குநர்கள் இன்று வரையிலும் உள்ளனர்.
நியூசி., அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 46 ரன்களில் சுருண்ட இந்திய அணிக்கு மேலும் ஒரு அடி விழுந்துள்ளது. கீப்பிங்கின் போது ரிஷப் பண்ட்டின் கால் மூட்டில் பந்து தாக்க, வலியில் துடித்த பண்ட், தொடர்ந்து விளையாட முடியாமல் வெளியேறினார். அவருக்கு பதிலாக ஜூரல் கீப்பிங் செய்து வருகிறார். பேட்டிங்கில் தடுமாறும் இந்தியாவுக்கு, ஃபார்மில் இருக்கும் பண்ட் இல்லாதது பெரிய இழப்பாகும்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஐகோர்ட் கடிவாளம் போட்டுள்ளது. நீண்டகாலமாக சிறையில் இருக்கும் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க, தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இதனை ஆளுநர் ரவி நிராகரித்தார். இந்த வழக்கு, ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் எனத் தெரிவித்த நீதிபதி, கைதிகளை விடுவிக்கும் மனுவை மீண்டும் பரிசீலிக்குமாறு அறிவுறுத்தினார்.
குழந்தை பிறந்த பின்னர், தந்தையர்களில் 10இல் ஒருவர் கவலை, மனச்சோர்வுக்கு ஆளாவதாக மெட்டா – NYT ஆய்வில் தெரியவந்துள்ளது. 2 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தி, வல்லுநர்கள் அளித்த அறிக்கையில், குழந்தை கரு கொண்டதில் தொடங்கி 6 வயது வரை பெண்களைவிட ஆண்களுக்கு அதிக மன அழுத்தம், பதற்றம் ஏற்படுகிறது. குழந்தையின் நலன், எதிர்காலம் குறித்த சிந்தனையால் மன ரீதியாக ஆண் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.