India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1987இல் <<14385887>>ஹமாஸ் <<>>உருவானபோது, அதற்குள்ளேயே அல் மஜித் என்ற படையை உருவாக்கினார். இஸ்ரேலுக்கு உதவிய பாலஸ்தீனர்களை தேடிப்பிடித்து அந்தப் படை வேட்டையாடியது. 1988இல் 12 பாலஸ்தீனர்களை கொன்றதாக சின்வாரை இஸ்ரேல் கைது செய்து, 4 ஆயுள் தண்டனை விதித்தது. எனினும் 2011 கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் மூலம் சின்வார் விடுவிக்கப்பட்டார். காசாவில் ஹமாஸ் ஆட்சியிலிருக்க சின்வாரின் செல்வாக்கு அதிகரித்தது.
இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் சின்வாரின் பின்னணி குறித்து தெரிந்து கொள்வோம். மத்திய கிழக்கில் இஸ்ரேல் எனும் நாடு புதிதாக உருவாக்கப்பட்டு, 14 ஆண்டுக்கு பிறகு, காசாவின் கான்யூனிஸ் அகதிகள் முகாமில் 1962இல் பிறந்தவர் சின்வார். முதலில் எகிப்திலும், பிறகு இஸ்ரேலிலும் வளர்ந்தார். முஸ்லிம் பிரதர்வுட் அமைப்பில் தீவிர உறுப்பினரான அவர், 19 வயதில் முதன்முதலில் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார்.
லிப்டுக்குள் கண்ணாடி பொருத்தப்பட்டு இருப்பதை பார்த்திருப்போம். இதற்கான காரணங்களை தெரிந்து கொள்வோம். 1) மனரீதியில் லிப்டில் பயணிப்போருக்கு பாதுகாப்பை தர 2) சுற்றியிருப்போரை கண்ணாடி மூலம் பார்த்து சுற்றுப்புற சூழலை உணர்ந்து கொள்ள 3) பொறுமையில்லாத நபர்களின் கவனத்தை திசை திருப்ப 4) மாற்றுத் திறனாளிகள் லிப்டை எளிதில் பயன்படுத்த. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்வது பாதிக்கப்படுமா என பலருக்கும் சந்தேகம் உண்டு. ஆனால் அந்த சந்தேகம் தேவையில்லாத ஒன்றாகும். முதல் டெஸ்டில் தோற்றாலும், WTC இறுதிக்கு இந்திய அணி செல்லும். ஏனெனில், WTC பட்டியலில் இந்தியா 98 புள்ளிகளுடன் முதலில் உள்ளது. மேலும், இனிவரும் 8 டெஸ்டுகளில் இந்தியா 5இல் வென்றாலே போதும்.
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டாலும் ராணுவ நடவடிக்கையை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதோடு தங்களது பணி முடிந்து விடவில்லை என்றும், ஹமாஸ் கட்டுப்பாட்டில் இன்னும் 101 பேர் இருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது. எந்த வகையிலாவது பிணைக் கைதிகள் அனைவரையும் மீட்போம் என்றும், அதுவரை ஓய மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது.
மொபைல் மூலம் மோசடி நடைபெறுவதை தடுக்க பதிவு செய்யாத நிறுவன லிங்க், URLsக்களை முடக்க தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு அக்.1 முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து சுமார் 10,000 நிறுவனங்கள் தங்களின் URLsக்களை பதிவு செய்து தடையை நீக்கியுள்ளன. இதனால் அவற்றின் லிங்க், URLsக்கள் மக்களுக்கு செல்வதில் இருந்த தடை நீங்கியுள்ளது. உங்களுக்கு லிங்க், URLs வருகிறதா?
<<14385855>>₹100 கோடி ஊழல் <<>>நடந்துள்ளதாக தமிழக பாஜக தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி காெடுத்துள்ளார். வெளிச்சந்தையில் பருப்பின் விலை கூட தெரியாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் தெரிவித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். ₹100 கோடி ஊழல் என்பது உண்மைக்கு புறம்பானது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2025 மார்ச்சிற்குள் 17 தாெலைத் தொடர்பு வட்டங்களிலும் 5ஜி சேவையை தொடங்கி விடுவோம் என VI தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்நிறுவன சிடிஓ ஜக்பீர் சிங், முதலில் டெல்லி, மும்பையிலும் பிறகு மற்ற பகுதியிலும் 5ஜி சேவை ஆரம்பிக்கப்படும் என்றார். 2022 அக்டோபரில் ஜியோ, ஏர்டெல் 5ஜி சேவையை தாெடங்கின. ஆனால் நிதிப் பிரச்னை காரணமாக VI இன்னும் 5ஜி சேவையை தொடங்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
1922: பிபிசி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது
1931: பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் மறைந்தார்
1956: முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா பிறந்தார்
1960: ஹாலிவுட் நடிகர் ஜீன் கிளாட் வான் டேம் பிறந்தார்
1965: முன்னாள் கிரிக்கெட் வீரர் நரேந்திர ஹிர்வானி பிறந்தார்
1978: நடிகை ஜாேதிகா பிறந்தார்
2004: சந்தனக் கடத்தல் வீரப்பன் மறைந்தார்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசி. 134 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 46 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய கான்வே 91 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். லாதம் 15, யங் 33 ரன்களில் அவுட்டாகினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது.
Sorry, no posts matched your criteria.