News October 19, 2024

இந்திய அணி போராட்ட திறன் கொண்டது: மஞ்ச்ரேக்கர்

image

இந்திய அணி போராட்ட திறன் கொண்டதென மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்டில் முதலில் பின்னடைவை சந்தித்த இந்திய அணி தற்போது வீரு கொண்டது போல ஆடுகிறது. இதுகுறித்து பதிவிட்டுள்ள மஞ்ச்ரேக்கர், இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெறுவது எளிதான காரியம் அல்ல என்றும், தாம் நியூசிலாந்து வீரராக இருந்திருந்தால் இந்திய அணியை கண்டு பீதியடைந்திருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

News October 19, 2024

வேட்டையன்-2… ஞானவேல் விருப்பம்

image

வேட்டையன் படத்தின் 2ஆவது பாகத்தை எடுக்க இயக்குநர் ஞானவேல் விருப்பம் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில், அப்பட இயக்குநர் ஞானவேல், முதல் பாகத்தின் முந்தைய கதையை வைத்து 2ஆவது பாகம் எடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீங்க. கீழே பதிவிடுங்கள்.

News October 19, 2024

ஆவின் பால் விற்பனையில் பகல் கொள்ளை: அன்புமணி தாக்கு

image

ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி,
லிட்டருக்கு ₹11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். கிரீன் மேஜிக் பால் லிட்டர் ₹44க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மிலி ₹50 என்ற விலையில் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதாக அவர் சாடியுள்ளார். பாலின் விலையை மறைமுகமாக உயர்த்தும் ஆவின் நிறுவன முயற்சி கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.

News October 19, 2024

நாளை. நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் IMD கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை இங்கு காணலாம். நாளை: திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை. நாளை மறுநாள்: வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை.

News October 19, 2024

AIRTEL வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்

image

தனது வாடிக்கையாளர்களுக்காக AIRTEL நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.549 கட்டணத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்தால், 28 நாள்கள் வேலிடிட்டியும், தினமும் 100 எஸ்எம்எஸ், 3ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும். மொபைல் வெர்சனை கொண்ட ஹாட் ஸ்டார் ஓடிடியும் 3 மாதங்களுக்கு இலவசமாக காண முடியும். ஏர்டெல் தேங்க்ஸ், விங்க் மியூசிக், அப்பல்லோ 24-7 வசதி ஆகியவற்றையும் பெற முடியும்.

News October 19, 2024

பாக். அணியின் புதிய கேப்டன் ரிஸ்வான்?

image

டி20, ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பாக். அணியின் கேப்டனாக ரிஸ்வான் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் நக்வி, தலைமை பயிற்சியாளர் கிறிஸ்டனுடன் இதுகுறித்து குறித்து ஆலோசித்ததாகவும், 28ஆம் தேதி ரிஸ்வான் பெயர் கேப்டனாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, கிரிக்கெட்டில் கவனம் செலுத்த கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகியது குறிப்பிடத்தக்கது.

News October 19, 2024

PM மோடிக்கு எதிராக பாஜக செயல்படுகிறதா.. திமுக கேள்வி

image

PM மோடிக்கு எதிராக பாஜக செயல்படுகிறதா என்று திமுக கேள்வியெழுப்பியுள்ளது. திராவிட சொல் விடுபட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அக்கட்சியின் மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், மோடி தமிழின் பெருமையை பேசி வருவதாகவும், ஆனால் பாஜகவினரோ அதற்கு எதிர்மாறாக நடப்பதாகவும் தெரிவித்தார். டிடி என இருந்த டிவி பெயர் முதலில் பொதிகை எனவும், தற்போது டிடி தமிழ் எனவும் மாற்றப்பட்டு உள்ளதாகவும் சாடினார்.

News October 19, 2024

காரல் மார்க்ஸ் பொன்மொழிகள்

image

* இழப்பதற்கு ஒன்றுமில்லை, நமது அடிமை சங்கிலிகளை தவிர! வெல்வதற்கோ பொன்னுலகம் உண்டு *எல்லாவற்றிற்கும் காரணங்கள் எப்போதும் இருக்கின்றது. ஆனால், நியாயமானதாக இருப்பதில்லை *மதம் என்பது ஒடுக்கப்பட்ட உயிரினத்தின் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம், ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மா. இது மக்களின் அபின்.
* மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.* நீதிமன்றம் சந்திக்க வேண்டிய இன்னொரு நீதிமன்றம் மக்கள் கருத்து.

News October 19, 2024

ஆளுநரையும், மக்களையும் பிரிக்க முடியாது: தமிழக பாஜக

image

ஆளுநரையும், மக்களையும் திராவிட மாடல் பாேலி அரசியல்வாதிகளால் பிரிக்க முடியாது என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் மகிழ்ச்சி, தமிழகத்தின் வளர்ச்சியில் ஆளுநர் மிகுந்த அக்கறை கொண்டவர் எனக் கூறியுள்ளார். ஆளுநரை திமுக கூட்டணி கட்சிகள் அவதூறு பேசலாம். ஆனால் அதற்கு மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

News October 19, 2024

ஹமாஸின் புதிய தலைவர் யார்?

image

ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வாரின் சகோதரர் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் நேற்று முன்தினம் சின்வார் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. யுத்த களத்தில் இருக்கும் சின்வாரின் இளைய சகோதரர் முஹம்மது சின்வார் புதிய தலைவராக அதிக வாய்ப்பு இருப்பதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

error: Content is protected !!