India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹமாஸ் வசம் 101 பிணைக் கைதிகள் இன்னும் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 23 நாடுகளைச் சேர்ந்தோரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்திருப்பதாக கூறினார். அந்த பிணைக் கைதிகளை மீட்டு பத்திரமாக அழைத்து வர இஸ்ரேல் உறுதி பூண்டு இருப்பதாகவும், அதேபோல் பிணைக் கைதிகளுக்கு தீங்கு இழைப்போரை இஸ்ரேல் தேடிப்பிடித்து கொல்லும் எனவும் தெரிவித்தார்.
தேசிய உர நிறுவனத்தில் 336 காலியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இளநிலை பொறியாளர், ஸ்டோர் உதவியாளர், லோகோ உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வேலையில் சேர விரும்புவோர் https://careers.nfl.co.in/index.php என்ற இணையதளத்தில் வருகிற 30ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நவம்பர் மாதம் 6ஆம் தேதி கடைசி நாளாகும். SHARE IT
1952: மொழிவாரியாக ஆந்திரா தனிமாநிலம் கோரி பொட்டி ஸ்ரீராமலு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்
1917: கணிதவியலாளர் எஸ்.எஸ். ஸ்ரீகாந்த் பிறந்தார்
1955: தயாரிப்பாளர், இயக்குனர் குன்னம் கங்காராஜூ பிறந்தார்
1987: டென்னிஸ் வீரர் சாகேத் மென்னேனி பிறந்தார்
2006: நடிகை ஸ்ரீவித்யா மறைந்தார்
உலகிலேயே சென்னையில்தான் அதிக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், இதற்கடுத்து ஹைதராபாத்தில் 480 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. டெல்லியில் 289 சிசிடிவி கேமராக்களே உள்ளதாகவும் அத்தகவலில் கூறப்பட்டுள்ளது.
தியாகம் குறித்து துரோகம் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல இருப்பதாக இபிஎஸ்சை ஓபிஎஸ் மறைமுகமாக விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும், இதன்மூலம் CM பதவிக்கு பரிந்துரைத்தவர், அமர்த்தியவர், அப்பதவியில் தொடர் துணை புரிந்தவர்களை முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது என இபிஎஸ்சை அவர் சாடியுள்ளார்.
சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை விரைவில் இயக்க இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அமரன் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜிடம், சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவீர்களா என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், அதுகுறித்து நீண்ட நாள்களாக பேசிக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அது நடக்கும் என்றும் கூறினார்.
ரயிலில் என்ஜீனுக்கு அடுத்து முதலிலும், கடைசியாகவும் பொதுப் பெட்டி இருக்கும். இது ஏன் என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. பொதுப் பெட்டியில் பயணிகள் அதிகம் பயணிப்பர் என்பதால் அது எடை அதிகமாக இருக்கக்கூடும். ஆதலால் அது முதலிலும், கடைசியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு மாறாக அப்பெட்டியை நடுவில் வைத்தால், எடை அதிகம் இருக்கும் காரணத்தால் சரிந்துவிடும் எனவும் ரயில்வே கூறியுள்ளது.
இன்று (அக்.19) காலை 7 மணி வரை 21 மாவட்டங்களில் இடி- மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கடலூர், நாகை, கிருஷ்ணகிரி, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, குமரியில் மழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளது.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மேட்டா, அமெரிக்க கிளையில் பணிபுரிந்த 24 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதற்கு காரணம், உணவு கூப்பன்களை பயன்படுத்தி அவர்கள் ரூ.2,100-க்கு டூத்பேஸ்ட், டிடர்ஜென்ட் வாங்கியதே ஆகும். மேலும் சில ஊழியர்கள், அலுவலக உணவை பார்சல் கட்டி எடுத்து சென்றதையும் மேட்டா கண்டுபிடித்துள்ளது. இதுபோல 24 பேர், 4 லட்சம் டாலர்களை மோசடி செய்ததை கண்டுபிடித்ததால் பணிநீக்கம் செய்துள்ளது.
இந்திய அணி போராட்ட திறன் கொண்டதென மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்டில் முதலில் பின்னடைவை சந்தித்த இந்திய அணி தற்போது வீரு கொண்டது போல ஆடுகிறது. இதுகுறித்து பதிவிட்டுள்ள மஞ்ச்ரேக்கர், இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெறுவது எளிதான காரியம் அல்ல என்றும், தாம் நியூசிலாந்து வீரராக இருந்திருந்தால் இந்திய அணியை கண்டு பீதியடைந்திருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.