India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது சில வரிகள் தவிர்க்கப்பட்ட சர்ச்சைக் குறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழின் மீதும், தமிழர்கள் மீதும் கலாச்சார போரை நடத்திக் கொண்டிருக்கும் வந்தேறிகளே, உங்களுக்கு தமிழும், திராவிடமும் பிடிக்கவில்லை என்றால் உடனடியாக எங்கள் மண்ணை விட்டு வெளியேறிவிடுங்கள்” என விமர்சித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அன்று ஒருநாள் மட்டுமே விடுமுறை இருந்தது. தொடர்ந்து, சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதால், இடையில் வெள்ளிக்கிழமை (நவ.1) விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டதால், 4 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால், சொந்த ஊர் செல்வோர், பள்ளி மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
விஜய் நடிப்பில் வெளியான ‘G.O.A.T’ படத்தை ரஜினி பாராட்டியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள வெங்கட்பிரபு, “போன் செய்து ‘G.O.A.T’ படத்தை பாராட்டியதற்கு நன்றி தலைவா. மனதார பாராட்டியதற்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை விஜய், வெங்கட்பிரபு பார்த்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தாய் ஒருவர் தனது குழந்தைகளிடம், கொடூரமாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் ஏற்பட்ட சண்டையின் போது அவரை கோபமடைய செய்ய மகன் மற்றும் மகளை அடுக்குமாடி குடியிருப்பின் 23வது மாடிக்கு வெளியே உள்ள ஏசி யூனிட்டில் உட்கார வைத்துள்ளார். அவர்களை காப்பாற்ற வந்த கணவரையும் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனை கவனித்து வந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவலித்து அவர்களை மீட்டனர்.
தீபாவளியை முன்னிட்டு நவ.1ம் தேதி (தீபாவளிக்கு மறுநாள்) அரசு விடுமுறை அளித்து CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், 09.11.24 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களை, மீண்டும் பணியமர்த்த ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது. ஆட்கள் பற்றாக்குறை, ரயில் விபத்துகளை குறைக்கும் நோக்கில், 65 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள், ரயில் லோகோ பைலட், தண்டவாள பராமரிப்பு பொறியாளர் பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் நியமிக்கப்பட உள்ளனர். இந்த முடிவால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விடுபட்ட தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ₹1000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். 1.16 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ₹1000 உரிமைத் தொகை வழங்கப்படுவதாக கூறிய அவர், தகுதியுள்ள அனைவருக்கும் நிச்சயம் ₹1000 வழங்கப்படும் என்றார். புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மது வணிகத்தை அதிகரிப்பது மட்டும்தான் திராவிட மாடல் அரசின் ஒற்றை மந்திரமா? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 3,500 டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்த முடிவை கைவிட வேண்டுமென வலியுறுத்திய அவர், தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
IND கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன், சர்ஃபராஸ் கான் நிலை ஒன்று தான். வாய்ப்புக்காக பல நாட்கள் காத்திருந்து, கிடைக்கும் ஒரு சில ஆட்டத்தில் நன்றாக விளையாடியும், அதை 50, 100ஆக மாற்ற முடியவில்லை என்ற விமர்சனம் இருவர் மீதும் இருந்தது. BAN அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு சஞ்சு பதிலளித்தார். அதேபோல் இன்று இக்கட்டான சூழ்நிலையில் சர்ஃபராஸ் சதமடித்து நிரூபித்துள்ளார்.
தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் பேசிய அவர், போதைப்பொருள் விற்பனை, விநியோகத்தை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். இதனிடையே, சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மிகப்பெரிய பிரச்னை என்ற அவர், பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களை முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது என்றார்.
Sorry, no posts matched your criteria.