News October 19, 2024

மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் மத்திய அரசு..?

image

தீபாவளிக்கு முன்பு, நாட்டு மக்களுக்கு மோடி அரசு மற்றொரு பெரிய பரிசை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆம்!, சைக்கிள், குடிநீர் பாட்டில் மீதான GST வரியை 12%லிருந்து 5%ஆக குறைக்கவும், உயர்தர Watches, ஷூக்கள் மீதான வரியை உயர்த்தவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அதேபோல், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், உடைகள் உள்ளிட்டவைகளுக்கும் GST குறைய வாய்ப்புள்ளதாம்.

News October 19, 2024

‘ரெட்ட தல’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

image

அருண் விஜய் நடித்துள்ள ‘ரெட்ட தல’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கிரிஷ் திருக்குமரன் இயக்கும் இப்படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், சித்தி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

News October 19, 2024

டெஸ்டில் 550 சதங்கள் அடித்த இந்திய வீரர்கள்

image

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் அனைவரும் சேர்ந்து 550 சதங்கள் அடித்துள்ளனர். நியூசிலாந்துக்கு எதிராக சர்பராஸ் கான் அடித்த சதம் இந்திய வீரர்களின் 550வது சதம் ஆகும். முதல் சதம் லாலா அமர்நாத் (1933), பாலி உம்ரிகர் 50வது சதம், 100 மற்றும் 150வது சதங்கள் கவாஸ்கர், 200வது சதம் அசாருதீன், 250, 300 சச்சின், 350 VVS.லக்ஷ்மன், 400வது சதம் டிராவிட், 450 ரஹானே, 500வது சதம் கோலி ஆகியோர் அடித்திருந்தனர்.

News October 19, 2024

பாளை. நீட் பயிற்சி மையத்தின் மீது நடவடிக்கை: மா.சு

image

பாளையங்கோட்டை நீட் பயிற்சி மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை தாக்கிய அதன் உரிமையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாதாக, நீட் பயிற்சி பெறும் மாணவர்களை மையத்தின் உரிமையாளர் பிரம்பால் தாக்கும் வீடியோ வெளியாகியிருந்தது.

News October 19, 2024

ஜார்க்கண்ட் தேர்தல்: BJP முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்

image

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை BJP வெளியிட்டுள்ளது. அண்மையில் JMM கட்சியிலிருந்து விலகி BJPயில் இணைந்த Ex CM சம்பாய் சோரன், சரைகேலா தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல, BJP MLAவும், ஜார்க்கண்ட் யூனிட் தலைவருமான பாபுலால் மரண்டி, தன்வர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஜார்க்கண்டில் நவம்பர் 13, 20ஆம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

News October 19, 2024

சற்றுமுன்: ADMKவில் இருந்து விலகி DMKவில் ஐக்கியம்

image

சிறையில் இருந்து வெளியே வந்ததும், மீண்டும் அமைச்சரான செந்தில் பாலாஜி, மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கரூர் அதிமுக முன்னாள் துணை செயலாளர் காளியம்மாள், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராமு, மகளிரணி நிர்வாகி மைதிலி, மேற்கு நகர வர்த்தக அணி துணை தலைவர் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து விலகி, அவரது முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தனர்.

News October 19, 2024

சீமான் ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது..!

image

தான் ஆட்சிக்கு வந்த உடன் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்தில் 2 வரியைத் தூக்கியதற்காக கொந்தளிப்பவர்கள், ஈழத் தமிழர்களைக் கொன்றபோது எங்கே சென்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ‘திராவிட’ வரி விடுபட்டதை பலரும் விமர்சித்த நிலையில், சீமானின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News October 19, 2024

சர்பராஸ் கானின் ஜெர்சி எண் ’97’ குறித்த ரகசியம் தெரியுமா?

image

சர்பராஸ் கான் 97 என்ற எண் கொண்ட ஜெர்சி அணிந்து விளையாடுகிறார். 97 என்ற எண்ணில் 9 என்பது ஹிந்தியில் ‘நவ்’ என்று என்றும், 7 என்பது ‘சாத்’ எனவும் உச்சரிக்கப்படுகிறது. சேர்த்துப்படித்தால் நவுசாத். இதில் சுவாரஸ்யமானது என்னவென்றால் சர்பராஸ் கானின் தந்தை பெயர் நவ்சாத் கான். எனவேதான் சர்பராஸ் கான் 97 நம்பர் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடி வருவதாக கூறப்படுகிறது.

News October 19, 2024

தமிழ் இனமா.. திராவிட இனமா?: வானதி

image

தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி விடுபட்டதை வைத்து, திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பிரிவினை அரசியலை செய்து வருவதாக வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆளுநர் மீது முதல்வர் இனவெறி தாக்குதல் நடத்தியதாகவும், முதல்வர் தமிழ் இனமா, திராவிட இனமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். திராவிடம் என்று கூறி தமிழர்களின் அடையாளத்தை அழிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

News October 19, 2024

SIX, FOUR ஆக வாணவேடிக்கை காட்டும் இந்தியா

image

Emerging ஆசிய கோப்பை தொடரில் பாக்., அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் இந்தியா வாணவேடிக்கை காட்டுவதால், ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். இந்தியா 6 ஓவரில் 68 ரன்கள் குவித்துள்ளது. இதில் அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 62 ரன்கள் (5 SIX, 8 FOUR) என பறக்கவிட்டு 4 ரன்கள் மட்டும் ஓடி எடுத்தனர். குறிப்பாக, அப்பாஸ் அப்ரிடி வீசிய 6 ஓவரில் 4 4 6 6 1 4 என SIX, FOUR ஆக பறந்தது.

error: Content is protected !!