India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*நேரம் தவறாமை கருவியை உபயோகிப்பவர் என்றும் கதாநாயகனே *பிள்ளை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை. சொத்து சேர்த்து பிள்ளையை ஊனமாக்காதே *எல்லா மக்களிடமும் குறைபாடு மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்தி இருக்கவே செய்யும் *எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை *சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை. அனைவருக்கும் கல்வி, உழைப்புக்கான வாய்ப்பு தந்தால் போதும்.
ஜீவாவின் பிளாக் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார். படம் முழுவதும் த்ரீல்லிங் அனுபவத்தை கொடுத்ததாகவும், மொத்த படக்குழுவுக்கும் தமது வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரு பெரிய அறிவுசார்ந்த விஷயத்தை மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் அமைத்ததற்கு பாராட்டுக்கள் எனவும் கூறியுள்ளார். பிளாக் நீங்கள் பார்த்துவீட்டீர்களா? உங்கள் கமெண்டை கீழே பதிவிடுங்கள்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான இன்று மழை குறுக்கிட்டால் தோல்வியிலிருந்து இந்திய அணி தப்பிக்கும். 4ஆவது நாளான நேற்று மழை குறுக்கிட்டது. அதேபோல் இன்றும் மழை குறுக்கிட்டால் போட்டி தடைபட்டு நடத்தப்படாமல் போனால் இருதரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவாக அறிவிக்கப்படும். இது நியூசிலாந்து அணிக்கு ஏமாற்றமாகவும், இந்திய அணிக்கு நிம்மதியையும் அளிக்கும்.
“DOOR KNOCKING” தொழில்நுட்பம் அல்லது “CANVASSING” என்பது தனிநபர்களை நேரில் சந்திப்பதாகும். இது தேர்தலின்போது மக்களை சந்திக்க அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் முறையாகும். ஆதரவாளர்களை கண்டுபிடிக்கவும், முடிவெடுக்காத வாக்காளர்களை ஈர்க்கவும் அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் “DOOR KNOCKING” தொழில்நுட்பத்தை பின்பற்றுகிறார்.
EPF இருப்பு நிதியை மிஸ்டு கால் மூலம் எளிதில் அறிய முடியும். இதற்கு நாம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் நமது செல்போன் எண்ணை முதலில் இணைத்திருக்க வேண்டும். பிறகு அந்த எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும். அப்படி அழைக்கையில் அந்த அழைப்பு தானாக பாதியில் துண்டித்துவிடும். அப்படி துண்டிக்கப்பட்ட சில விநாடிகளில், அதே எண்ணுக்கு EPF இருப்பு குறித்த செய்தி வரும்.
பாரம்பரியத்தை அழிக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பழங்குடியினரை ஆதிவாசிகள் என பாஜகவினர் அழைப்பதாகவும், இப்படி அழைத்து கொண்டே, அவர்களின் வாழ்க்கை முறை, வரலாறு, அறிவியலை அழிக்க முயற்சிக்கிறார்கள் என்று ராகுல் சாடினார். தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோரை மதிப்பதாக கூறும் மாேடி, அவர்களின் உரிமைகளை பறித்து விடுவதாகவும் விமர்சித்தார்.
இன்று (அக்.20) காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 24 மாவட்டங்களை IMD வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, திருச்சி, கரூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.
1469: சீக்கிய மதத்தை தோற்றுவித்த மத குரு குருநானக் பிறந்தார்
1978: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் வீரேந்திர சேவாக் பிறந்தார்.
1982: இலங்கையில் முதன்முதலில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது
2008: திரைப்பட இயக்குநர் சி.வி. ஸ்ரீதர் காலமானார்
➢உலக புள்ளியியல் தினம்
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, அதிக எடை என்பது கொழுப்பு அதிகம் இருப்பதாகும். உடல் பருமன் என்பது கிரோனிக் காம்ப்ளக்ஸ் நோயாகும். உடல்நலனை பாதிக்கும் அளவுக்கு கொழுப்பு சேர்ந்திருப்பது ஆகும். உடல் எடை தொடர்பான புள்ளி விவரங்களின்படி, 25 கி – 29.09 கி. வரை உடல் எடை கொண்டவர்கள், அதிக எடை கொண்டவர்கள் ஆவர். 30.0 கிலோ அல்லது அதற்கு அதிக எடை உடையவர்கள் உடல் பருமன் உடையோர் ஆவர்.
ரயில்வேயில் காலியாக உள்ள 3,445 இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். டிக்கெட் கிளார்க், அக்கவுண்ட் கிளார்க், ஜூனியர் கிளார்க், டிரைன்ஸ் கிளார்க் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பப்பதிவு செப்.21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இது இன்றுடன் முடிகிறது. விருப்பமுள்ளோர் ரயில்வே ஆட்தேர்வு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT
Sorry, no posts matched your criteria.